ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாத சுவாமி சிறிது கூட நன்றி விஸ்வாசமில்லாமல் தனது பூஜைக்கும், உர்ச்சவத்திற்கும் பணம் சேகரித்து வைப்பதற்காக ரங்கநாதர் லாட்டரி சீட்டு என்னும் பெயரால் ஒரு லாட்டரி சீட்டு நடத்த முக்கிய ஏற்பாடு செய்தவரும், அந்த சீட்டு நடவடிக்கைக்கு பிரதம காரியதரிசியாய் இருந்தவருமான ராவ்பகதூர் சடகோபாசாரியாரை தபால் படித்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று கொன்று போட்டார்.
இந்தப் படுபாவி ரங்கநாதர் வைகுண்ட ஏகாதசிக்கு வருகின்ற பக்தர்கள் எத்தனை பேரைக் கொல்லப் போகின்றாறோ தெரியவில்லை.
இப்போதே ஏகாதசி உர்ச்சவத்திற்கு வரும் பக்தர்களுக்கும் பிரசாதமாக ஸ்ரீரங்கத்திற்கும், திருச்சிக்கும் காலரா, மாரியம்மாளை அனுப்பிவிட்டாராம். இனி அங்கு வரும் எத்தனை பக்தர்கள் அந்தப் பிரசாதத்தைக் கொண்டு போய் எந்தெந்த ஊர் பக்தர்களுக்கு வினியோகிப்பார்களோ தெரியவில்லை.
(குடி அரசு - செய்தி விளக்கம் - 21.12.1930)