கோயமுத்தூரில் பஞ்ச நிவாரண வேலைக்காக ரூ. 2102-8-0 செலவாகியிருக்கிறது. கிராமத்து ஜனங்கள் இந்தப் பணம் ஸ்ரீமான் வெங்கிட்டரமணய்யங்கார் தான் கையிலிருந்து செலவு செய்ததாக நினைக்கும்படி பல தந்திரங்கள் செய்ததோடு சில காங்கிரஸ் தொண்டர்கள் என்போரும் ஸ்ரீமான் ஐயங்கார் பின் சென்று ஓட்டு வாங்க, பஞ்சப்படி போட்ட ஐயங்கார் என்று அவருக்குப் பெயர் வாங்கிக் கொடுத்து கிராமத்து ஜனங்களை ஏமாற்றியிருக்கிறார்கள். இதன் இரகசியம் என்ன வென்றால் பஞ்ச நிவாரண வேலைக்காக பொது ஜனங்களிடமிருந்து வசூலாகி வந்த பணத்தை ஸ்ரீமான் எஸ்.சீனிவாசய்யங்கார் தூக்கி ஸ்ரீமான் வெங்கிட்டரமணய்யங்காரிடம் கொடுத்து, செலவு செய்யும்படி சொல்லியிருக்கிறார். அந்தப் பணத்தை வாங்கி, தான் செலவு செய்ததாக அவர் நடித்திருக்கிறார். இந்த நடிப்புக்கு காங்கிரஸ் தொண்டர்கள் திரைப்பிடித்து இருக்கிறார்கள். இவ்வளவுதான் இரகசியம். இதை 3-5-26 ² “சுதேசமித்திரன்” பத்திரிகையிலேயே பார்க்கலாம். (குடி அரசு - செய்தி விளக்கம் - 09.05.1926)
கோயமுத்தூரில் பஞ்ச நிவாரண வேலையும் ஸ்ரீமான் சி.வி. வெங்கிட்டரமணய்யங்காரும்
More articles by பெரியார்
- தேவதாசி முறையை ஒழித்து பெரியார் போட்ட முதல் உத்தரவு (02 அக் 2026)
- காங்கிரசுக்காரர்கள் பிரதிநிதிகளாவார்களா? (02 அக் 2026)
- ஜின்னாவின் உபதேசம் - சமூகமே முதலாவது (29 செப் 2026)
- வேலூர் ஜில்லா போர்டுக்கு ஜே! அப்துல் ஹக்கீம்கு ஜே!! (28 செப் 2026)
- அசம்பளியில் வெண்ணெய் வெட்டிகள் (25 செப் 2026)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.