காந்தியடிகள் சுயராஜ்யக் கட்சியின் திட்டத்தை அங்கீகரித்துவிட்டார் என்று கூறுவது உண்மைக்கு மாறுபட்டதாகும் என்று சென்ற வாரம் எழுதினோம். சித்தகாங்கில் மகாத்மா கூறிய அருள்மொழிகள் நமது கூற்றை உறுதிப்படுத்துகின்றன. அவை பின்வருமாறு :-
``போருக்கு என்றும் சளைக்காத ஒரு சாதியாரோடு நாம் சண்டையிடுகிறோம். அந்த ஜாதியார் பணிந்துபோவதென்றால் இன்னதென்று அறியார்கள். இராஜதந்திர முறைகளைக் கையாண்டு நாம் எவ்வளவுதான் முயன்றாலும் அவர்களை நாம் இந்தியாவைவிட்டு ஓட்டிவிடமுடியாது. நமது வெற்றிக்குச் சாதனமாக நான் தேசத்தார் முன் வைத்திருப்பது ஒரே திட்டந்தான். அஃது இராட்டையேயாகும்.’’
அரசியல் கிளர்ச்சி முறைகளில் காந்தியடிகளுக்கு எள்ளளவும் நம்பிக்கையில்லையென்பது இதிலிருந்து தெள்ளிதின் விளங்குகின்றதன்றோ?
(குடி அரசு - துணைத் தலையங்கம் - 17.05.1925)
தொடர்புடைய படைப்புகள்
ஒரே திட்டம்
More articles by பெரியார்
- தேவதாசி முறையை ஒழித்து பெரியார் போட்ட முதல் உத்தரவு (02 அக் 2026)
- காங்கிரசுக்காரர்கள் பிரதிநிதிகளாவார்களா? (02 அக் 2026)
- ஜின்னாவின் உபதேசம் - சமூகமே முதலாவது (29 செப் 2026)
- வேலூர் ஜில்லா போர்டுக்கு ஜே! அப்துல் ஹக்கீம்கு ஜே!! (28 செப் 2026)
- அசம்பளியில் வெண்ணெய் வெட்டிகள் (25 செப் 2026)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.