இந்திய அரசியல் சட்டத்தில் தீண்டப்படாதவர்களின் நிலை குறித்து பிரிட்டிஷ் அரசாங்கத்தின் அறிவிப்பு

முன்னுரை

ambedkar 2 350இந்தியாவின் தேசிய வாழ்க்கையில் ஷெட்யூல்டு வகுப்பினர் ஒரு தனி சக்தி என்றும், அதிகாரம் இந்தியர்கள் கைகளுக்கு மாற்றப் படுவதற்கு முன்னர் புதிய அரசியலமைப்புச்சட்டத்திற்கு அவர்களது அங்கீகாரத்தைப் பெறுவது அவசியம் என்றும் 1944 ஆகஸ்டு 15 ஆம் தேதி வேவல் பிரபு திரு.காந்திக்கு எழுதிய பதில் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்து பத்திரிகைகளில் பல விமர்சனங்கள் வெளிவந்திருந்தன. இந்நிலைமையில் வைசிராய்களும் ராஜாங்க மந்திரிகளும் ஏற்கனவே வெளியிட்டிருந்த அறிவிப்புகளை இங்கு நினைவு கூறுவது அவசியமாகிவிட்டது.

கிரிப்ஸ் யோசனைகள் ஷெட்யூல்டு வகுப்பினரை ஒரு தனிசக்தியாக அங்கீகரிக்கவில்லை, அவர்களது சம்மதத்தை அவசியமானதாக்கவில்லை என்ற அனு மானத்தின் அடிப்படையிலேயே இந்த விமர்சனம் அமைந்துள்ளது. கிரிப்ஸ் யோசனைகள் “இன மற்றும் சமய சிறுபான்மை” யினரைப் பற்றியே குறிப்பிடுகின்றன என்று எடுத்துக்கொண்டு, ஷெட்யூல்டு வகுப்பினர் ஒரு தனி இனத்தினரோ அல்லது ஒரு சமய சிறுபான்மை யினரோ அல்ல என்று வாதிக்கப்படுகிறது.

இந்த விமர்சனம் எவ்வளவு அபத்தமானது என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டிய அவசியம் இல்லை. ஷெட்யூல்டு வகுப் பினர் உண்மையில் சமயரீதியான சிறுபான்மையினரே ஆவர், இந்து சமயம் தனது தீண்டாமை சித்தாந்தத்தின் மூலம் ஷெட்யூல்டு வகுப்பினரை இந்துக்களின் பிரதான அமைப்பிலிருந்து பிரித்து விட்டது; இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும், இந்துக்களுக்கும் சீக்கியர்களுக்கும் அல்லது இந்துக்களுக்கும் கிறித்தவர்களுக்கும் இடையே நிலவும் பிரிவினையைவிடவும் உண்மையானதாகவும் பரந்ததாகவும் இந்தப் பிரிவினையை இது ஆக்கிவிட்டது.

தீண்டாமைக் கோட் பாட்டைபோல் பிரிவினைக்கு வழிசெய்யும் வேறொரு கோட்பாட்டை நினைத்துப்பார்க்கவும் முடியாது.

ஷெட்யூல்டு வகுப்பினர்களுக்கு அரசியல் உரிமைகளை மறுப்பதற்கு சாக்கு போக்குகளைத் தேடி வரும் மனக்காழ்ப்பு கொண்டவர்கள்தான் இவ்வகையான செப்படி வித்தையில் ஈடுபடமுடியும். வேவல் பிரபுவின் அறிக்கையை கொள்கைப் பிறழ்வு எனக் கருதுபவர்கள் பிரிட்டிஷாரிடமிருந்து இந்தியர்களின் கைகளுக்கு அதிகாரத்தை மாற்றும் எண்ணம் தோன்றிய காலத்திலிருந்தே ஷெட்யூல்டு வகுப்பினர் சம்பந்தமாக மன்னர்பிரான் அரசு எத்தகைய நிலையை மேற்கொண்டு வந்திருக்கிறது என்பதை முற்றிலும் மறந்துவிட்டதாகவே தோன்றுகிறது.

பொறுப்பாட்சியைப் பரிந்துரைக்கும் மாண்டேகு-செம்ஸ்போர்டு அறிக்கை வெளியிடப்பட்ட 1913 ஆம் ஆண்டு முதலே பிரிட்டிஷ் அரசாங்கம் ஒரு திட்ட வட்டமான நிலையை மேற்கொண்டு வந்துள்ளது. அதாவது ஷெட் யூல்டு வகுப்பினரின் நிலைமை போதிய அரசியலமைப்புச் சட்டவிதி களால் பாதுகாக்கப்படுகிறது என்ற திருப்தி ஏற்படாதவரை எத்த கைய சந்தர்ப்பத்திலும் இந்தியர்கள் கைகளுக்கு அதிகாரம் மாற்றித் தரப்படமாட்டது என்ற நிலையை அது எடுத்து வந்துள்ளது.

1917 முதல் 1941 வரை ராஜாங்க மந்திரிகளும் இந்திய வைசிராய்களும் வெளியிட்ட ஏராளமான அறிக்கைகளில் சிலவற்றைப் பின்வரும் பக்கங்களில் தந்துள்ளோம். ஷெட்யூல்டு வகுப்பினரை நாட்டின் தேசிய வாழ்வில் ஒரு தனியான, முக்கியமான சக்தியாக அங்கீகரிப் பதும், எந்தப் புதிய அரசியலமைப்புச் சட்டத்திற்கும் அவர்களது அங்கீகாரம் அவசியம் என்பதும் புதிய பிரேரணைகள் அல்ல என்பதை இவற்றிலிருந்து தெரிந்துகொள்ளலாம். இந்த இரண்டு பிரேரணைகளுமே கிரிப்ஸ் யோசனைகள் முன்வைக்கப்படுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே மன்னர்பிரான் அரசாங்கத்தின் பொறுப்பு வாய்ந்த பிரதிநிதிகளால் அதாவது ராஜாங்க மந்திரி, வைசிராய் ஆகிய இருவராலும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

1940 ஆகஸ்டு 14ல் திரு. அமெரி வெளியிட்ட அறிக்கையும், அதேபோன்று 1940 ஜனவரி 10ல் லின்லித்தோ பிரபு வெளியிட்ட அறிக்கையும் இவ்வகையில் இங்கு குறிப்பிடத்தக்கவையாகும். இந்த அறிக்கைகளை எல்லாம் படித்துப் பார்த்தால் அரசியல் உரிமைகள் சம்பந்தமான ஷெட்யூல்டு வகுப்பினரின் கோரிக்கையை மறுக்க முயல்பவர்கள் தங்கள் பிரசாரம் அறிவீனமானது, விஷமத்தனமானது என்பதை உணர் வார்கள் என்று நம்பலாம்.

     (1)

இந்திய அரசியலமைப்புச் சீர்திருத்தம் பற்றிய 1917 ஆம் வருட மாண்டேகுசெம்ஸ்போர்டு அறிக்கையிலிருந்து ஒரு பகுதி

155. உழவனுக்கு அரசியல் கல்வி ஊட்டுவதை மிகவும் விரைவுபடுத்தமுடியாது என்பதையும் அது ஒரு கடினமான இயக்க நிகழ்வாக இருக்கும் என்பதையும் நாங்கள் எடுத்துக் காட்டியிருந் தோம். இந்தப் பணி பூர்த்தியடையும்வரை அவனைவிட வலுவானவர்களின், தந்திரசாலிகளின் ஒடுக்குமுறைக்கு அவனது நலன்களை அவன் கைகளிலேயே பத்திரமாக ஒப்படைக்கலாம் அல்லது அவனது நலன்களை சட்டமன்றங்கள் பிரதிபலித்து அவற்றைப் பரிசீலிக்கலாம் என்பது தெளிவாகும்வரை அவனைப் பாதுகாக்கும் அதி காரத்தை நாமே வைத்துக் கொள்ள வேண்டும். தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களுக்கும் இது பொருந்தும்.

அவர்களுடைய பிரதிநிதித் துவத்திற்காக மிகச்சிறந்த ஏற்பாடுகளைச் செய்ய நாம் உத்தேசித் துள்ளோம், இதன் மூலம் இறுதியில் அவர்களும் சுய பாதுகாப்பு விஷ யத்தைக் கற்றுக்கொள்வார்கள். ஆனால் அவர்களுடைய நலன்கள் பாதிக்கப்படுகின்றன, பொதுவான முன்னேற்றத்தில் அவர்களுக்குப் பங்கில்லை என்று தெரியவந்தால் அவர்களைப் பாதுகாக்கும் பொறுப்பை நாமே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

 (2)

வாக்குரிமை குறித்த சவுத்பாரோ குழுவின் அறிக்கை பற்றி இந்திய அரசாங்கம் 1919 ஏப்ரல் 23 ஆம் தேதியிட்ட ஐந்தாவது அறிக்கையிலிருந்து ஒரு பகுதி.

13. இந்த நலன்கள் உத்தியோக சார்பற்ற நியமனத்தால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட வேண்டும் என்ற குழுவின் கருத்தை அந்த அறிக்கையில் நாங்கள் அலசி ஆராய்ந்துள்ளோம்.

பொதுவாக இந்தப் பிரேணைகளை ஏற்றுக்கொள்கிறோம். எனினும் குழு செலுத்தியுள்ள கவனத்தைவிடவும் அதிக கவனம் செலுத்த வேண்டிய ஒரு வகுப்பு இருக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் குறித்த அறிக்கை தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்குள்ள பிரச்சினையை தெளிவாக அங்கீகரித்துள்ளது; அவர்களுக்கு உரிய மதிப்பு அளிக்கப்படும் என்று உறுதி தந்துள்ளது.

 மாகாணத்தின்

பெயர்

தாழ்த்தப்பட்ட இனத்தவர்

ஆங்கிலோ இந்தியர்கள் இந்தியக் கிறித்தவர்கள்

தொழிலாள

ர்கள்

விலக்கப்

பட்ட பகுதிகள்

ராணுவ நலன்கள்

தோட்டத் தொழில், சுரங்கத் தொழில் நீங்கலாக

தொழில் துறை நலன்கள்

தொல் குடியினர் குடியமர்ந்த வங்காளிகள் மற்றவர்கள் மொத்தம்

மொத்த உறுப்பினர்

எண்ணிக்கையில்

சதவிகிதம்

1

 

2 3 4 5 6 7 8 9 10 11 12 13

 

சென்னை

 

2

-

-

-

2

-

-

-

-

2

6

5

பம்பாய்

 

- 1 1 1- - - - - - 2 6 5

வங்காளம்

 

1 - 1 1 - - - - - 22 5 4

ஐக்கியமாகாணங்கள்

 

1 1 1 - - - - - - 2 5 4
பஞ்சாப் - - 2* 1 - - 1 - - 2 6 7
பீகாரும் ஒரிசாவும் 1 1 1 1 2 - 1 1 1 2 9 9
மத்திய மாகாணங்கள் 1 1* - - 2 - - - - 1 5 7
அசாம் - 1* 1 1 1 - - - - 1 5 9
மொத்தம் 7 7 6 4 5 1 1 1 1 14 47 -
  • ஐரோப்பியர்களும் ஆங்கிலோ-இந்தியர்களும்

 __

மொத்த மக்கள் தொகை

(10 லட்சத்தில்)

தாழ்த்தப்பட்டவர்  களின் மக்கள்  தொகை

(10 லட்சத்தில்)

மொத்த இடங்கள் தாழ்த்தப்பட்வர்களின் மொத்த இடங்கள்
சென்னை 39.8 6.3 120 2
பம்பாய் 19.5 0.6 113 1
வங்காளம் 45.0 9.9 127 1
ஐக்கிய மாகாணங்கள் 47.0 10.1 120 1
பஞ்சாப் 19.5 1.7 85 -
பீகார் மற்றும்  ஒரிசா 32.4 9.3 100 1
மத்திய  மாகாணங்கள் 12.2 3.7 72 1

அசாம்

6.0 0.3 54 -
மொத்தம் 221.4 49.1 791 7

 

“அவர்களுடைய பிரதிநிதித்துவத்துக்காக மிகச் சிறந்த ஏற்பாடுகளைச் செய்ய உத்தேசித்திருக்கிறோம்.” குழுவின் அறிக்கையில் “இந்துக்களும் – மற்றவர்களும்” என்று வருணிக்கப்பட்டிருக்கும் சாதிகள் பல்வேறு வகைகளில் வரையறுத்துக் கூறப்பட்டிருந்தாலும் அவையெல்லாம் ஒரே மக்களையே குறிக்கின்றன.

அவர்கள் எந்த அளவுக்கு விலக்கி வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது குறித்து பலதரப்பட்ட கருத்துகள் கூறப்பட்ட போதிலும் அவர்கள் எல்லோரும் ஏறத்தாழ சென்னை பஞ்சமர்களின் நிலையிலேயே இருக்கின்றனர்; அவர்கள் இந்து சமுதாயத்துக்கு வெளியே இருக்கின்றனர். அவர்கள் மக்கட்தொகையில் ஏறத்தாழ ஐந்தில் ஒரு பங்கினர்களாக இருந்து வருகின்றனர். மார்லி-மிண்டோ சட்டமன்றங்களில் அவர்கள் இடம் பெறவே இல்லை.

குழுவின் அறிக்கை தாழ்த்தப்பட்ட இனத்தினரைப் பற்றி இரண்டு இடங்களில் தான் குறிப்பிடுகிறது; அதுவும் திருப்திகரமான வாக்காளர் தொகுதிகள் இல்லாததால் அவர்களது நியமனத்துக்கு வழிசெய்யப்பட்டிருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. இந்த மக்களின் நிலை குறித்தோ அல்லது தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்வதற்கு அவர்களுக்குள்ள ஆற்றல் பற்றியோ அறிக்கையில் விவாதிக்கப்படவில்லை.

அவர்களுக்கு முழு பரிந்துரைக்கும் நியமன எண்ணிக்கையையும் அது கூறவில்லை. நியமன இடங்களைக் கட்டுப்படுத்துவது பற்றி அறிக்கையின் 24 ஆவது பாரா குறிப் பிட்டிருக்கிறது. தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களை இதில் சம்பந்தப் படுத்தி எதுவும் கூறப்படவில்லை. இந்த வகுப்பினர்களுக்குப் பின் கண்டவாறு பிரதிநித்துவம் அளிக்கலாம் என்று குழு பரிந்துரைத் திருக்கிறது.

இந்தப் புள்ளி விவரங்களே நிலைமையை நன்கு விளக்கும். பிரிட்டிஷ் இந்தியாவின் மொத்த மக்கட்தொகையில் ஐந்தில் ஒருபங்கினருக்கு எண்ணூறு இடங்களில் ஏழு இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. எல்லா

சட்டமன்றங்களிலும் ஏறத்தாழ ஆறில் ஒரு பங்கு விகிதத்திலுள்ள அதிகாரிகள் தாழ்த்தப்பட்டோரின் நலன்களைக் கவனத்தில் கொள்வார்கள் என்று கூறப்படுவது உண்மையே; ஆனால் இத்தகைய ஏற்பாட்டை சீர்திருத்த அறிக்கை குறிக்கோளாகக் கொள்ளவில்லை என்பது நமது கருத்து.

தாழ்த்தப்பட்ட வகுப்பினரும் தற்காத்துக் கொள்ளும் பாடத்தைக் கற்றுக் கொள்ளவேண்டும் என்று சீர்திருத்த அறிக்கையைத் தயாரித்தவர்கள் குறிப்பிட்டிருக்கின்றனர். அறுபது அல்லது ஏழுபது சாதி இந்துக்களைக் கொண்ட ஒரு சட்டமன்றத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஓர் உறுப்பினரைச் சேர்த்துக் கொண்டாலே இந்தப் பலன் கிட்டும் என்று நம்புவது வெறும் பிரமையாகும்.

அறிக்கை யின் பத்திகள் 151, 152, 154, 155ல் தெரிவிக்கப்பட்டிருக்கும் கோட்பாடு களை நன்கு பயன்படுத்திக் கொள்வதற்குத் தீண்டப்படாதவர்களைப் பரந்த மனப்பான்மையுடன் நடத்துவது அவசியம். ஒவ்வொரு மன்றத் திலும் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் போதிய எண்ணிக்கை யில் இருக்க வேண்டும் என்று கருதுகிறோம்; அப்போதுதான் முற்றி லும் செயலற்றவர்களாகி விடாதபடி அவர்கள் தங்களைப் பாது காத்துக் கொள்ள முடியும்; அதேசமயம் கூட்டு நடவடிக்கை எடுப் பதற்கான ஆற்றலை ஓரளவு பெருக்கிக் கொள்ள முடியும்.

சென்னை யைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு ஆறு இடங்கள் தரப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்; வங்காளம், ஐக்கிய மாகா ணங்கள், பீகார், ஒரிசா ஆகிய மாகாணங்களில் நான்கு இடங்களும், மத்திய மாகாணங்களிலும் பம்பாயிலும் இரண்டு இடங்களும், இதர இடங்களில் ஒன்றும் அவர்களுக்கு தர வேண்டும். இவ்வாறு பார்க்கும் போது குழுவின் அறிக்கை மாற்றப்பட வேண்டும் என்று கருதுகிறோம்.

 * *

 (3)

சட்டக்கமிஷன் நியமனம் குறித்து 1927 மார்ச் 30 ஆம் தேதி      இந்தியா மந்திரி என்ற முறையில் பிர்கென்ஹெட் பிரபுக்கள்    சபையில் நிகழ்த்திய உரையிலிருந்து ஒரு பகுதி

 …. …. தாழ்த்தப்பட்ட வகுப்பினர் விஷயத்தை இப்போது எடுத்துக் கொள்கிறேன். இந்தியாவில் 6 கோடி தாழ்த்தப்பட்ட மக்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய நிலைமை முன்னர்போல் அத்தனை மோசமானதாகவும் துயரமிக்கதாகவும் இல்லாவிட்டாலும் அது இன்னமும் மோசமானதாகவும் துயரமிக்கதாகவும் இருந்து வருகிறது.

எல்லா சமூக உறவுகளிலிருந்தும் அவர்கள் துண்டிக்கப்பட் டிருக்கின்றனர். சூரிய ஒளிக்கும் அவர்களை வெறுப்போர்களுக்கும் இடையே இந்தத் தாழ்த்தப்பட்ட மக்கள் வந்துவிட்டால் அவர்களை வெறுப்போருக்கு அந்த சூரியனே கூட உருக்குலைந்து போனதாக, கறைபட்டுப் போன தாகத் தோன்றும்.

அவர்கள் தங்கள் தாகத்தைத் தணித்துக் கொள்ள வேண்டுமானால் மைல் கணக்கில் நடக்க வேண் டும். அவர்கள் காலம் காலமாக, தலைமுறை தலைமுறையாக “தீண்டப்படாதவர்கள்” என்றே வேதனை மிக்க முறையில் அறியப் பட்டு வந்திருக்கின்றனர். அவர்கள் ஆறு கோடிப் பேர் இந்தியாவில் இருக்கின்றனர்.

அவர்களது ஒரு பிரதிநிதியை இந்தக் கமிஷனில் நான் சேர்த்துக் கொள்ள வேண்டாமா? இந்த வகுப்பைச் சேர்ந்த ஓர் உறுப்பினர் இடம் பெறாத ஓர் கமிஷனை நான் நியமிக்க மாட்டேன்; ஒரு ஜனநாயக நாட்டிலுள்ள வேறு எவரும் நியமிக்க மாட்டார்கள்; எதிர்த் தரப்பினர் கூட இதனை பரிந்துரைக் க மாட்டார்கள்; நான் குறிப்பிடும் பல்வேறு பிரதிநிதிகளும் பங்கு கொள்ளும் ஒரு மன்றத் தில் எந்த விஷயத்தையும் முன்வைத்து விவாதித்து முடிவெடுப் பதற்கு இந்த வகுப்பினருக்குப் பிரதிநிதித்துவம் தருவது அவசியம்.

 (4)

 சைமன் கமிஷன் அறிக்கையிலிருந்து ஒரு பகுதி, தொகுதி II

 78………… எந்த மாகாணத்திலும் வாக்களிக்கத் தகுதி பெற்ற தாழ்த்தப்பட்ட இனத்தோரின் எண்ணிக்கையை மதிப்பிடுவது சாத் தியமாக இல்லை. வாக்களிக்கும் தகுதி கணிசமாகக் குறைக்கப்படும் பட்சத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பு வாக்காளர்களின் வீதாசாரம் அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை. எனினும் இவ்வாறு வாக்களிக்கும் தகுதியைக் குறைத்தாலும் கூட ஏதேனும் விசேட வழிவகை ஏற்பாடு செய்யாமல் பொதுத் தொகுதிகளில் தாழ்த்தப்பட்ட இனத்தவர்கள் தங்கள் சொந்தப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கச் செய்வதற்கு வாய்ப்பில்லை என்பது தெளிவு.

தாழ்த்தப்பட்ட வகுப்பினர் தங்கள் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தித்தான் முன்னேற முடியும். எனவே, இந்த நிலைமையில், இதர சக்திகள் அவர்களது ஆதரவை நாடிப் பெறும் அளவுக்கும், அவர்களது தேவைகளை ஆழ்ந்து கவ னிக்கும் அளவுக்கும் அவர்கள் போதிய முக்கியத்துவம் ஈட்டுவதைப் பொறுத்துத்தான் இந்த முன்னேற்றம் அமைந்திருக்கும் என்பது கண்கூடு.

 * *

 80 …. … ஆகவே, தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் மொத்த மக்கட் தொகை விகிதாசார அடிப்படையில் அவர்களுக்கு இடங் களை ஒதுக்கீடு செய்ய நாங்கள் பரிந்துரைக்கவில்லை என்பதை இங்கு கவனிக்க வேண்டும். எனினும், இப்போது நாங்கள் பரிந் துரைத்துள்ள இட ஒதுக்கீட்டு விகிதாசாரம் தாழ்த்தப்பட்ட வகுப் பினரைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் கணிசமாக அதிகப்படுத்துவதற்கு வகைசெய்யும். வறுமையும், படிப் பின்மையும் அவர்களிடையே மிகப் பரவலாக இருப்பதைக் காண் கிறோம். இப்படிப்பட்ட நிலைமையில், போதிய தகுதி வாய்ந்த உறுப் பினர்கள் பெரும் எண்ணிக்கையில் உடனடியாகக் கிடைப்பார்களா என்பது மிகுந்த ஐயத்துக்கிடமானதாக இருக்கிறது.

தாழ்த்தப்பட்ட வர்களின் பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொண்டு திறமையற்ற வர்களும், நேர்மையற்றவர்களும், மேல் சாதியினருக்கு அடிவருடி களாக இருக்கக் கூடியவர்களும் பெரும் எண்ணிக்கையில் சட்ட மன்றத்தை நிரப்புவதைக் காட்டிலும் மிகவும் தகுதி வாய்ந்த, பொறுக்கியெடுத்த, மணிமணியான உறுப்பினர்கள் அம்மக்களின் பிரதிநிதிகளாக வருவது எவ்வளவோ மேல். பல்வேறு வகையான பிரதிநிதிகளிடையே இடங்களை மறு-விநியோகம் செய்வதற்கு தற்போது முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆனால் இந்த மறுவிநியோகம் நிரந்தரமானதாக இருக்க முடியாது; இதை மாற்று வதற்கு வழிவகை செய்யப்பட வேண்டும். ஆனால் நாங்கள் தெரி வித்துள்ள யோசனை இப்போதைக்குப் போதும் என்று நினைக் கிறோம். அதிலும் குறிப்பாக இட ஒதுக்கீட்டின் மூலம் தமது கருத்தைப் பிரதிபலிப்பது என்பது அவ்வாறு ஒதுக்கப்படாத இதர இடங்களைக் கைப்பற்றும் சாத்தியக் கூறை விலக்கிவிடவில்லை என்பதை இங்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

 * *

 5

 (அரசியல் அமைப்புச் சீர்திருத்தம் பற்றி)     (சைமன் கமிஷன் வழிகாட்டிய அடிப்படையில்)   இந்திய அரசிடமிருந்து வந்துள்ள குறிப்பிலிருந்து பகுதி

35. தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களுக்கான பிரதிநிதித்துவம் :- தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு பிரதிநிதித்துவம் அளிப்பது பற்றி கமிஷன் கொடுத்துள்ள ஆலோசனைகளை மாகாண அரசுகள் அதிகம்

விமர்சித்துள்ளன. ஒவ்வொரு மாகாணத்திற்கும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர்கள் பற்றி வரையறையை வகுத்துக் கொடுப்பதில் உள்ள கஷ்டம், நியமன முறையில்லாமல் இந்த வகுப்பிற்கு விசேஷ பிரதிநிதித்துவம் அளிக்கும் எந்தத் திட்டத்திலும் பிரிக்க இயலாததாக அமைந்துள்ளது போலும்; ஆனால், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் களுக்கான அபேட்சகர்களுக்கு அங்கீகாரம் அளித்து நற்சாட்சிப் பத்திரம் வழங்க வேண்டிய பிரத்தியேக சிக்கலான (இக்கட்டான) ஒரு கடமையை கவர்னருக்கு கமிஷனின் ஆலோசனைகள் முன்வைக் கின்றன; கமிஷன் முன்வைக்கும் விகிதாசார பிரதிநிதித்துவம் – அதாவது, மாகாணங்களின் தேர்தல் தொகுதியின் மொத்த மக்கள் தொகையில் தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் விகிதாசாரத்தில் முக்கால் பங்கு வீதம் என்பது – மிக அதிகம் என்று தோன்றலாம்.

ஐக்கிய மாகாண அரசு கணக்கீடு வருமாறு: அந்த மாகாணச் சட்டமன்றத்தில் இந்த வகுப்பினரை இப்பொழுது பிரதிநிதித்துவப்படுத்தும் நியமனமான ஒரே ஒரு உறுப்பினர் இடத்தில், கமிஷனின் ஆலோசனைப்படி நாற்பது உறுப் பினர்களுக்குக் குறையாமல் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப் படும் நிலை ஏற்படும். தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு பிரதிநிதித்து வம் அளிப்பதற்கான முழுப் பிரச்சினையும் வாக்குரிமை கமிட்டி யால் கவனமாக அலசி ஆராயப்படவேண்டும்.

இந்தக் கட்டத்தில் நாங்கள் தெளிவாக எடுத்து கூற விரும்பும் கருத்து என்னவெனில், நடைமுறைக்கு சாத்தியமானது என்று கருதப்படும் விதத்தில் அவர் களுக்கு (தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு) சிறந்த முறையில் போது மான பிரதிநிதித்துவம் உறுதியாக அளிக்கப்பட வேண்டுமென்பதே. அந்த வகுப்பினரிடையே சில கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன என்றாலும், அண்மையில் நடந்த தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் அமைப்புகளின் கூட்டங்கள் தனித் தேர்தல் தொகுதிகள்மீது அவற் றிற்குள்ள நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன.

 * * *

 (6)

 (வாக்குரிமை பற்றி) 1932 லோதியன் கமிட்டிக்கு அளிக்கப்பட்ட  செயல்பாட்டு விதிமுறைகளிலிருந்து

3. மாகாணக் கவுன்சில்களுக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் வாக்காளர்களின் எண்ணிக்கை தற்பொழுது இந்திய மாகாணங்களின் மொத்த மக்கள் தொகையில் 3 சதவிகிதத்திற்கும் குறைவானதே என்பதைத் தாங்கள் அறிவீர்கள்; இந்த குறுகிய வாக்குரிமையின் கீழ் மக்கள் தொகையில் பெரும்பான்மையோரும் சமுதாயத்தின் பல அதிக எண்ணிக்கையுள்ள முக்கியப் பகுதியினரும் சட்டமன்றங்களில் பயனுள்ள பிரதிநிதித்துவம் பெறமுடியாமல் போகும் என்பது தெளிவானதே. சில தனி ஒதுக்கீடுகளுக்கும் பாது காப்புகளுக்கும் உட்பட்டு பொறுப்புள்ள பெடரல் சர்க்கார் என்ற கோட்பாடு மேன்மைதங்கிய மன்னர் சர்க்காரால் ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது.

தங்களின் சொந்தக் கொள்கைகளை தங்கள் வட்டாரத் தில் நிறைவேற்றுவதில் வெளித்தலையீடோ அதிகார ஏவலோ இல்லாத மிக அதிகபட்சம் சாத்தியமான அளவில் சுதந்திரமாக இயங்கும் உரிமை பெற்று கவர்னர்களின் மாகாணங்கள் பொறுப் பாக ஆட்சி செலுத்தப்படும் அங்கங்களாக ஆக வேண்டு மென்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலைமைகளில், பொறுப்பு ஒப்படைக்கப்படும் சட்டசபைகளின் வாக்காளர்களின் எண்ணிக்கை விரிவுபடுத்தப்பட வேண்டும் என்பது அவசியம் என்பது தெளி வாகிறது; இந்த சட்டசபைகள் பொது ஜனங்களைப் பிரதிநிதித் துவப்படுத்துவதாக இருக்க வேண்டும்; சமுதாயத்தின் எந்த முக்கிய பகுதியும் தனது தேவைகளையோ கருத்துக்களையோ வெளிப் படுத்தும் வாய்ப்பு இல்லாமல் போகக்கூடாது.

 * * *

 6. மாநாட்டில் பல்வேறு விஷயங்கள் பற்றி நடந்த விவாதங்களிலிருந்து தெளிவாவது என்னவெனில் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப் போதுமான பாது காப்பை புதிய அரசியல் சட்டம் வகுக்க வேண்டுமென்பதும் நிய மனம் மூலம் பிரதிநிதித்துவம் அளிக்கும் முறை இனிப் பொருந் தாது என்பதுமாகும். தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு தனியான தேர்தல் தொகுதிகள் ஒதுக்க வேண்டுமா என்பது பற்றி கருத்து வேறு பாடு உள்ளது என்பது தாங்கள் அறிந்ததே.

தங்கள் கமிட்டியின் அலசி ஆராய்வு இந்தப் பிரச்னை பற்றி முடிவு எடுப்பதற்கு உதவும் முறையில் அமைய வேண்டும்; வாக்காளர்களின் எண்ணிக்கையில் பொதுவான விரிவாக்கம் மூலம் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் சாதாரண (பொது) பொதுத் தொகுதிகளில் எந்த அளவு வாக்களிக் கும் உரிமையைப் பெறலாம் என்பதையும் நீங்கள் சுட்டிக்காட்ட வேண்டும். மறுபுறத்தில், பொதுவாகவோ அல்லது ஜனத்தொகையில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் ஒரு தெளிவான தனியான தன்மை கொண்டவர்களாக உள்ள மாகாணங்களிலோ, அவர்களுக்கு தனித் தொகுதிகள் முடிவாக தீர்மானிக்கப்பட வேண்டுமா? வாக்காளர் பட்டியல் விரிவாக்கப்பட வேண்டும் என்ற பொதுப் பிரச்னையை உங்கள் கமிட்டி ஆய்வு செய்யும்போது தாழ்த்தப்பட்ட வகுப்பின ருக்கு தனிப் பிரதிநிதித்துவம் பற்றிய முறையை வகுக்க புள்ளி விவரங்கள் உங்களுக்குக் கிடைக்கும்.

 * *

 (7)

இந்தியாவின் வைஸ்ராயும் கவர்னர் ஜெனரலுமான  மேன்மை தங்கிய லார்ட் லின்லித்கோ 1939 அக்டோபர் 17-ம் தேதி    வெளியிட்ட அறிக்கையிலிருந்து:

”இந்தியாவின் எதிர்காலப் பெடரல் சர்க்காரின் திட்டம் பற்றிய பரிசீலனையை மீண்டும் துவக்கும் காலம் வரும்போது, நான் இப்பொழுது குறிப்பிடப்பட்ட காலம் சென்ற இந்திய விவகார அமைச்சர் பார்லிமென்டில் அமுலாக்குவதற்கான திட்டம் பற்றி அளித்த வாக்குறுதியை அமுல் நடத்த முடிவு செய்யும்போது, அன் றுள்ள சூழ்நிலைமைகளின் வெளிச்சத்தில், 1935-ம் ஆண்டுச் சட்டத் தில் உள்ளடக்கிய திட்டத்தின் விவரங்கள் எந்த அளவிற்கு பொருந்த மாக இருக்கும் என்பதை புனர்பரிசீலனை செய்ய வேண்டியது அவசியமாகும்.

யுத்தமுடிவிற்குப்பின் சமுதாயத்தின் பல்வேறு பிரிவினர் களின், சமூகங்களின், நலன்களின் பிரதிநிதிகளுடனும், இந்திய சமஸ்தான ராஜாக்களுடனும், விரும்பக்கூடிய மாற்றங்களை உரு வாக்குவதில் அவர்களின் உதவியையும் ஒத்துழைப்பையும் பெற பேச்சுவார்த்தைகள் நடத்த நாங்கள் மிகவும் விருப்பமுடையவர் களாக இருப்போம் என்று கூற மே.த. மன்னர் சர்க்கார் எனக்கு அதிகாரம் வழங்கியுள்ளது.”

(8)

பிரபுக்கள் சபையில் இந்திய விவகார மந்திரி லார்ட் ஜெட்லண்டு, 1939 நவம்பர் 7ம் தேதி சமர்ப்பித்த அறிக்கையிலிருந்து:

“இந்தியாவில் இனவாரியான, மதவாரியான சிறுபான்மை யினர் உள்ளனர் என்பது இந்த விஷயத்திற்கு பொருத்தமானதல்ல வென்றும், இந்தியர்கள் தாங்களாகவே உருவாக்கம் அரசியல் சட்டத் தின் மூலம் சிறுபான்மையினருக்கு அவர்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய அவர்களின் உரிமைகளுக்கு பாதுகாப்பைப் பெற வேண்டு மென்பதே காங்கிரசின் நோக்கமாக இருந்து வந்துள்ளது. இந்த கொள்கையை காங்கிரஸ் மேலும் முரணின்று எடுத்து வந்துள்ளது.

காங்கிரஸின் இந்த நிலையை ஏற்றுக் கொள்வது சாத்திய மல்ல என்று மேன்மை தங்கிய மன்னர் சர்க்கார் கருதுகிறது. இந்தியாவுடனான நீண்டகால பிரிட்டிஷ் தொடர்பு, அந்த நாட்டின் மீது தங்களுக்குள்ள கடமைப் பொறுப்புகளை மே.த. மன்னர் சர்க்காருக்கு அளித்துள்ளன; அந்நாட்டின் எதிர்கால சர்க்காரை உரு வாக்குவதில் அக்கறையின்மையை காட்டுவதன் மூலம் தங்கள் கடமைப் பொறுப்புகளை அது ஒதுக்கித்தள்ளி விட முடியாது. இந்தியாவின் எல்லாக் கட்சிகளுடனும் நலன்களுடனும் கவர்னர் - ஜெனரல் அண்மையில் மேற்கொண்ட விவாதங்களின் சந்தேகத்திற்கு இடமற்ற ஒரு மிக முக்கிய விளைவு என்னவெனில், இந்தியாவில் தங்கள் நிலையை சிந்தனை எதுவுமில்லாமல் மே.த. மன்னர் சர்க்கார் கைவிட வேண்டுமென்று அளிக்கப்பட்ட ஆலோசனை இந்திய மக்களின் பெரும்பாலான பகுதியினருக்கு ஏற்புடைய தாக இல்லை என்பது.”

 * * *

(9)

வைஸ்ராயும் கவர்னர் ஜெனரலுமான மே.த. லார்ட் லின்லித்கோ, பம்பாய் ஓரியண்ட் கிளப்பில் 1940 ஜனவரி 10ல் ஆற்றிய உரையிலிருந்து:

“இந்திய ஐக்கியத்தின் நலன்களுக்கான எந்த அரசியல் சட்ட அமைப்பிலும் இந்திய சமஸ்தானங்களை உட்படுத்த வேண்டும் என்பது அத்தியாவசிய தேவை என்பதை நாம் மறக்கக் கூடாது.

சிறுபான்மையினரின் விடாப்பிடியான கோரிக்கைகள் உள்ளன.

அவற்றில் இரண்டை நான் குறிப்பிட வேண்டும்:- பெரும் எண்ணிக்கையில் உள்ள முஸ்லீம் சிறுபான்மையினர், தீண்டப் படாத ஜாதியினர்; இந்த சிறுபான்மையினருக்கு சென்ற காலத்தில் அளித்த வாக்குறுதிகள் உள்ளன; அவர்களின் நிலை பாதுகாக்கப் பட வேண்டும்; அந்த உத்திரவாதங்கள் நிறைவேற்றப்பட வேண்டும்.

 * * *

(10)

(பிரிட்டிஷ்) காமன்ஸ் சபையில், 1940 ஆகஸ்டு 14ல் இந்திய விவகார மந்திரி திரு.எல்.எஸ்.அமெரி ஆற்றிய உரையிலிருந்து:

“காங்கிரஸ் தலைவர்கள் ஒரு போற்றற்குரிய ஸ்தாபனத்தை கட்டி வளர்த்துள்ளனர்; அது இந்தியாவின் திறமை வாய்ந்த அரசியல் இயந்திரமாகும் .......... இந்தியாவின் அரசியல் வாழ்வின் (முக்கிய) பிரதான பகுதியினர் எல்லோருக்குமாக தான் பேசுவ தாகக் கூறிக் கொள்ளும் காங்கிரஸ் உண்மையில் அது பேசுவதில் வெற்றி பெற்றிருக்குமானால் – வெற்றி பெற்றிருக்கக் கூடுமானால் - அவர்களின் கோரிக்கை எவ்வளவு தீவிரமுடையதாக இருந்தாலும்,ல பல அம்சங்களில் நம் பிரச்சினை இன்று இருப்பதை விட மிகஅதிகம் இலகுவானதாக இருந்திருக்கும்.

பிரிட்டிஷ் இந்தியாவில் அவர்கள் மிகப் பெரிய தனிக் கட்சியாவர்; அதன் காரணமாக இந்தியாவிற்காக பேசுவதாகச் சொல்வதை இந்தியாவின் சிக்க லான தேசிய வாழ்வில் உள்ள பல மிக முக்கிமான பகுதியினர் மறுக்கின்றனர். இந்த மற்றவர்கள் எண்ணிக்கையில் மட்டுமே சிறு பான்மையினராக மட்டுமின்றி எதிர்கால இந்திய அரசியல் வாழ்வில் தாங்கள் தனிமையான அங்கங்கள் என்று உரிமை கோருகின்றனர்.

இவர்களில் மிக முதன்மையானவர்கள் (பெரும் எண்ணிக்கையில் உள்ள) மகத்தான முஸ்லீம் சமூகத்தினர் பூகோள அடிப்படையில் அமைந்துள்ள வாக்கு தொகுதிகளில் பெரும்பான்மை வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபை வரையும் அரசியல் சட்டத்தோடு அவர்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. வெறும் எண்ணிக்கையில் பெரும்பான்மையினராக செயல்படுவோருக்கு எதிராக அரசியல் அமைப்பு சம்பந்தமான எந்த விவாதத்திலும் பங்கு பெறும் அங்கமாக அவர்கள் உரிமை கோருகின்றனர்.

தாழ்த்தப்பட்ட (தீண்டப்படாத) ஜாதியினர் என்று அறியப்படும் மகத்தான முக்கிய பகுதியினருக்கும் இது பொருந்தும். அவர்கள் சார்பில் திரு. காந்தி எடுத்துக் கொண்ட அக்கறையுடன் கூடிய முயற்சிகள் இருந்தபோதிலும், ஒரு சமுதாயம் என்ற முறையில் காங்கிரஸ் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான இந்து சமூகத்திற்கு வெளியில்தான் அவர்கள் இருக்கிறார்கள்.”

 * * *

(11)

காமன்ஸ் சபையில் இந்திய விவகார அமைச்சர் மே.த. திரு. எல்.எஸ். அமெரி 1941 ஏப்ரல் 23ம் தேதி ஆற்றிய உரையிலிருந்து:

“இந்தியாவின் எதிர்கால அரசியல் சட்டம் இந்தியர்கள் தங்களுக்காகவே வரையப்பட வேண்டும்; பிரிட்டிஷ் சர்க்காரால் அல்ல. இந்தியாவின் எதிர்கால அரசியல் சட்டம் சாராம்சத்தில் இந்திய அரசியல் சட்டமாக, இந்தியாவின் நிலைமைகள், இந்தியத் தேவைகள் பற்றிய இந்திய கண்ணோட்டத்திற்கு ஏற்ப வகுக்கப் பட வேண்டும். ஒரு அத்தியாவசியமான நிபந்தனை என்ன வெனில், அரசியல் சட்டமும் அதை உருவாக்கும் அமைப்பும் இந்தியத்தேசிய வாழ்வின் பிரதான பகுதியினரிடையே ஏற்படும் ஒப்பந்தத்தின் அடிப்படையின் அமைய வேண்டும்.”

(12)

இந்தியாவின் வைஸ்ராயும் கவர்னர் – ஜெனரலுமான மே.த. லார்ட் லின்லித்கோ 1940 ஆகஸ்ட் 8ம் தேதி வெளியிட்ட அறிக்கையிலிருந்து:

“முன் வந்துள்ளவை இரண்டு விஷயங்கள். அந்த இரண்டு பற்றியும், தங்கள் நிலையை தெளிவாக்க மே.த. மன்னர் அரசாங்கம் விரும்புகிறது. முதலாவது, எந்த எதிர்கால அரசியல் அமைப்புத் திட்டத்திலும், சிறுபான்மையினர் நிலை பற்றியதாகும். இந்தியத் தேசிய வாழ்வி பெரிய, சக்திவாய்ந்த பகுதிகளால் நேரடியாக மறுக்கப்படும் எந்த சர்க்கார் அமைப்பையும் இந்தியாவில் சமாதானத்திற்கும் நல்வாழ்வுக்கும் இன்றுள்ள தங்கள் பொறுப்பு களை மாற்ற அவர்கள் (மே.த. மன்னர் சர்க்கார்) சிந்திக்க முடியாது என்பது சொல்லாமலே தெரியும். அத்தகைய சர்க்காருக்காகப் பணி யும்படி செய்ய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தும் அத்தகைய சக்திகளுடன் அவர்கள் (சர்க்கார்) உடன்பட முடியாது.”

 ("தீண்டப்படாதவர்களுக்கு காங்கிரசும் காந்தியும் சாதித்தது என்ன?" - தொகுதி 16, பின்னிணைப்பு 6) 

Pin It