வேலைக்கான விரிவடைந்த ஒருங்கிணைந்த போராட்டம் என்ற கோவுத்தை முன்வைத்து, வேலைக்கான அகில இந்திய மாநாடு டில்லியில் DYFI ல் அமைப்பின் சார்பில் கடந்த பிப்ரவரி 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் சிறப்பாக நடை பெற்றது. இதில் நாடு முழுவதிலும் இருந்து சுமார் 300 பேர் கலந்து கொண்டனர். தமிழ் நாட்டிலிந்து 24 தோழர்கள் இதில் பங்கேற்றோம்.

இம்மாநாட்டை சி.பி.ஐ.(எம்)ன். அகில இந்திய பொதுச்செயலாளர் தோழர்.பிரகாஷ் காரத் அவர்கள் துவக்கிவைத்து பேசினார்.நம் நாடு மக்கள் உணவு நிலம் மற்றும் வேலை ஆகிய மூன்று முக்கிய பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமைப்பு ரீதியான தொழில்களிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் வேலைவாய்பு வீழ்ச்சியடைந்துள்ளது. எனினும் இது தெடர்பான எந்த சரியான புள்ளிவிபரமும் அரசுத்தரப்பில் இல்லை.

உலகளாவிலான பொருளாதர காரணமாக   நெருக்கடி உலகளவில் வேலையில்லா திண்டாட்டத்தை அதிகரித்துள்ளது. தாராளமய உலகமய பொருளாதர கொள்கைகளே பல்வேறு துறைகளில் வேலையின்மை உருவாக்கியிருக்கிறது. விவாசாய துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி,விவசாயத் தொழிலாளர்களை வேலைதேடி நகர்புறங்களுக்கு புலம்பெயர  வைத்துள்ளது. இவ்வாறு நகர்புறங்களுக்கு வேலைதேடி வந்தவர்கள் முறைசாராத் தொழிலாளர்களாக மிகவும் கொடுமையான முறையில் சுரண்டப்படுகிறார்கள். முதலாளித்துவத்தை தூக்கிபிடிக்கும் ஆட்சியாளர்களால் ஒரு போதும் வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்க முடியாது என்றார்.

மாநாட்டின் நோக்கத்தை விளக்கி DYFI ன் அகில இந்திய செயலாளர் தபஸ்சின்கா பேசினார் அதை தொடர்ந்து சந்தை பொருளாதரத்தில் வேலையின்மை என்ற அமர்வில் ஜவகர்லால் நேரு பல்கலைகழகத்தின் பொருளாதரா பேராசிரியை ஜெயதிகோஷ், சி.ஐ.டி.யுவின் அகில இந்திய செயலாளர் திபங்கர் முகர்ஜி,மற்றும் பிரசன்ஜித்போஸ் ஆகியோர் கருத்துரை வழங்கினர். கீழ்கண்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

பொது துறைகளை தனியாருக்கு தாரைவார்க்கதே, பொது துறைபங்குகளை விற்காதே. பொது துறை நிறுவனங்களை அதன் உபரிலாபத்தின் நவீனப்படுத்தி விரிவுபடுத்து.. மூடபட்ட தனியார் மற்றும் பொது துறை நிறுவனங்களை திறந்திட தேவையான நடவடிக்கை களை எடு.

வேலை நியமன தடை சட்டத்தை திரும்பப் பெறு. காலியான அரசு பணியிடங்களை இளைஞர்களை கொண்டு நிரப்பு. அரசு பணிகளை ஒப்பந்த மற்றும் வெளியில் ஒப்படைப்பதை நிறுத்திடு. நிரந்தரமான வேலைக்கு ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களை நியமிக்காதே.

வேலை மற்றும் வேலையிழப்பு சம்மந்தமான புள்ளிவிபரங்களை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வழங்குவதை தவிர்த்து உள்நாட்டு உற்பத்தி சம்மந்தமாக புள்ளிவிபரத்தை வெளியிடு மூன்று மாத காலயிடை வெளியில் வெளியிடு, அமைப்பு சார்ந்த மற்றும் சாராத இரண்டு துறைகள் சம்மந்தமான விவரங்களையும் வெளியிடு.

நிலம் மற்றும் குத்தகைகளின் சீர்திருத்தத்தை அமுல்படுத்தி கூட்டு பட்டாக்கள் வழங்கு, விவசாயத்துறையில் பொது முதலீட்டை அதிகப்படுத்து நியாயமான விலையில் விவசாய உற்பத்தி பொருள்களை அரசே கொள் முதல் செய்திடு விவசாய இடுபொருட்களை மானிய விலையில் வழங்கு, குறு மற்றும் ஏழை விவசாயிகளுக்கு குறைந்த வட்டிகடன்கள் கிடைக்க வழி செய் உற்பத்தியான பொருள்களை பாதுகாப்பதற்க்கும் விற்பனைக்கும் தேவையான ஏற்பாடுகளை செய்து கொடு.

தாழ்த்தப்ட்ட பழங்குடியின மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்து.ரங்கானாத் மிஸ்ரா குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் சிறுபான்மையினருக்கு வேலையில் இடஒதுக்கிடு வழங்கு, இட ஒதுக்கீட்டை தனியார் துரைக்கு விரிவுபடுத்து.

ஆணுக்கும், பெண்ணுக்கும் சமமான கூலி வழங்கு, பெண் தொழிலாளர்களுக்கு பணியிடத்தில் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்து வேலையிடத்தில் பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல்களை தடுத்திடு, குழந்தை தொழிலாளர்களை ஒழித்திடு.

மாநிலங்களுக்கிடையே சீரான வளர்ச்சியை உத்தரவாதப்படுத்து, வடகிழக்கு மாநிலங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்கி மின்சாரம், ரயில், தகவல் தொடர்பு போன்ற துறைகளையும் உள்கட்டமைப்பு வசதிகளையும் செய்துகொடு                   படைகளால்பாதிக்கப்பட்ட வடகிழக்கு மற்றும் ஜம்மு காஷ்மீர் இளைஞர்களும் வேலை வழங்கு, கிராமப்புற இளைஞர்கள் சம்மந்தமான அடுத்த அமர்வில் சிமித்தா குப்தா. ராமகுமார் மற்றும் பாபுரம் மிடியம் ஆகியோர் பங்கேற்றனர் இதில் மலைவாழ் இளைஞர்களை பற்றியும் விவாதிக்கப்பட்டது. கீழ்கண்ட கோரிக்கைகளும் உருவாக்கப்பட்டது.

கிராமப்புற இளைஞர்களுக்கு

தேசிய கிராமபுற வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தின் நோக்கங்களை விரிவு படுத்தி குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் நூற்றுக்கும் மேற்ப்பட்ட வேலை நாட்கள் வேலை வழங்குவது, ஒரு நாள் கூலியை 100லிருந்து 160 ஆக உயர்த்தி வழங்கு மக்கள் நல உதவி திட்டங்களை விரிவுபடுத்து

கிராம வேலை வாய்ப்பு உதவியாளர்களை காலமுறை ஊதியத்தில் அப்பகுதியை சேர்ந்த வர்களை நியமித்திடு. கிராப்புற  வேலைவாய்ப்பு சட்டத்தின் படி வேலை வழங்காதவர்களுக்கு கொடுக்க வேண்டிய பண உதவியை முறையாக வழங்கு இதில் நடக்கும் ஊழலை கட்டுப்படுத்து.

விவசாய தொழிலாளிக்கு நியாயமான ஊதியமும் சமூக பாதுகாப்பு கிடைக்கும் வகையில் சட்டமியற்று. பணவீக்க விகிதத்துடன் குறைந்த பட்ச ஊதியத்தை இணைத்திடு.

விவசாயிகளுக்காள தேசிய ஆனையத்தின் பரிந்துறைகளை அமுல்படுத்து விவசாய பள்ளிகளை கிராமங்களின் அமைத்து இளைம் தலைமுறைக்கு விவாசய தொழில் முறைகளை கற்றுக்கொடு.விவாசாயம் சார்ந்த தொழில்கள் கிராமபுர பகுதிகளிள் வளர்ச்சி முயற்சிஎடு.

நில ஆக்கிரமிப்பு சட்டம் 1894 மாற்றி புதிய சட்டம் இயற்றி போதுமான இழப்பீடு மற்றும் இதர சலுகையை வழங்கு. சிறப்பு பொருளாதார மன்டலம் என்ற பெயரில் நடக்கும் நில வியாபரத்தை கட்டுப்படுத்தி தொழில் துறை முறையாக வளர்த்திடு.

மலைவாழ் இளைஞர்களுக்கு

தேசிய கிராமப்புற வேலை உறுதிச்சட்டத்தின் மூலம் வருமானம் வரக்கூடிய வேலையை வழங்கு வனங்களில் சேகரிக்கப்படும் பொருட்களுக்கு குறைந்தபட்ச விலையை நிர்ணயம் செய். மலைவாழ் மக்கள் கூட்டுறவு வர்த்தக கூட்டமைப்பை வலுப்படுத்தி மலையில் கிடைக்கும் பொருட்களுக்கு வர்த்தகரீதியான விலை கிடைக்க வழி செய்.

பொதுவினியோக திட்டம், பள்ளிகள், கல்லூரிகள், விடுதிக (குறிப்பாக பெண்களுக்கு) சமூக பொருளாதரா திட்டங்களை வலுப்படுத்து.

பழங்குடியின இட ஒதுக்கிட்டை முழுமையாக அமல்படுத்து தனியார்துறைக்கும் இதை விரிவு படுத்து,போலி பழங்குடியின சான்றிதழ்களை ரத்து செய்து முகறையாக கிடைக்க வேண்டியவர்களுக்கு வழங்கு.வனஉரிமை வழங்கு வேகமாக பட்டாவழங்கு, நிலமும் வீடும் இல்லாதவர்களுக்கு இலவசமாக நிலமும் வீடும் வழங்கு.


நிலத்தை விட்டு அவர்களை அகற்றாதே, கிராம பஞ்சாயத்துகளை முறையாக செயல்படுத்து பழங்குடியினர் மாவட்டங்களில் தன்னட்சி கவுன்சிலர்களை அமைத்திடு.

நகர்புற இளைஞர்கள் சம்மந்தமான அமர்வில் ரோஹித்,சுபானில் சவுத்ரி மற்றும் சத்யாகி ராய் ஆகியோர் பங்கேற்றனர்.அதில் உறுவாக்கபட்ட கோரிக்கைகள்.

நகர்ப்புற வேலை உறுதி திட்டத்தை அமல்படுத்து பெண்களுக்கு மூன்றில் ஒரு பகுதி இடத்தை ஒதுக்கு, இதன்மூலம் நகர்ப்புற உள்கட்டமைப்பை அதிகபடுத்து,வேலையற்றோர் மற்றும் ஏழைகள் அனைவருக்கும் ரேஷன் கார்டுகள், குடிசை பகுதிகளை கட்டாயபடுத்தி அகற்றப்பட்ட வர்களுக்கு முறையான மாற்று இடம் வழங்கு.

முறைசாரா தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு பி.எப்,மருத்துவ காப்பிடு விபத்து இழப்பிடு போன்ற முறைசாரா அனையத்திட்ன வழிகாட்டுதலின் அடிப்படையில் அமல்படுத்து,எட்டு மனிநேர வேலையை உத்தரவாதப்படுத்து,குறைந்த பட்ட ஊதியத்தை அமல்படுத்த நடவடிக்கை எடு.

பிழைப்புதேடி புலம் பெயர்ந்த வரும் மக்களுக்கு அடிப்படை வாழ் வாதாரத்தை உத்தரவதபடுத்து,. இவர்கள் மீது தொடுக்கப்படும் வன்முறையாளகள் மீது கடுமையன நடவடிட்ககை எடு. இவர்களுக்கு அடையாள அட்டை வழங்கு.பொதுவினியோகதிட்டத்தை அமல்படுத்து இருப்பிடம் ,கமிப்பிடம்,மருத்துவம் ,பள்ளி,மற்றும் சமூக பாதுகாப்பை உத்தரவாதப்படுத்து.

விரும்பும் அனைத்து இளைஞர்களுக்கும் தொழில்முறை பயிற்சி வழங்கு. ஐஐடி, ஐடிசி போன்ற தொழில் சார்ந்த படிப்புகளை அதிகப்படுத்து பள்ளிப்படிப்பு இல்லாதவர்களுக்கு சான்றிதழ் படிப்புகளை வழங்கு.

வேலைவாய்ப்பு மையங்களை மேம்படுத்து. வேலை இல்லாக்கால நிவாரணம் வழங்கு. அரசு மற்றும் தனியார் துரை வேலை வாய்ப்பு சம்மந்தமான தகவல் கிடைக்கும் வகையில் அரசு சார்பில் இணையதளம் துவங்கிடு.

சுய வேலைவாய்ப்பை வளர்க்க கூடுதல் நித ஒதுக்கு, குறைந்த வட்டியில் கடன், பயிற்சி வகுப்பு போன்றவற்றை கிடைக்க ஏற்பாடு செய்க

என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நமது அகில இந்திய தலைவர் ஸ்ரீராமகிருஷ்ணன் பேசினர். இதை தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் சிபிஐ(எம்) பொலிட்பீரோ உறுப்பினர் தோழர். சீதாராம் யெச்சூரி சிறப்புரையாற்றினர்.

”நம்முடைய போராட்டம், நமக்கான போராட்டம் மட்டும் அல்ல. இந்த தேசத்தில் ஜனத்தொகை அடிப்படையில் இளைஞர்கள்தான் அதிகம், இந்த இளைஞர்களுக்கு வேலை வழங்காமல் இருப்பது தேசத்தின் வளர்ச்சியை முடக்கிப்போடுவதற்க்கு சமம்.’’ எனவே, நமது போராட்டம் தேசத்தின் வளர்ச்சிக்கான போராட்டம என்பதை உணரவேண்டும். நாம் இவர்களை ஒன்றினைக்காவிட்டால் மதம், மொழி, இனம் என்று பல வகைகளில் பிரித்து இந்த சக்தி வீணாக்கப்பட்டு விடும். எனவே, நாம் நம்மை வலுப்படுத்த போராடி ஒரு முற்போக்கான கொள்கை மாற்றத்திற்க்காக போராடுவோம் என்று நிறைவு செய்தார்.

இறுதியாக மாநாட்டின் முத்தாப்பாக வருகிற மார்ச் 26 அன்று மாநிலத்தின் தன்மைக்கேற்ப வேலையின்மைக்கு எதிராகவும், எல்லோருக்கும் வேலைகேட்டும் மாநாட்டின் கோரிக்கைகளை வலியுறுத்தியும் முற்போக்கு வாலிபர் இயக்கங்களை இணைத்து பிரம்மாண்டமான போராட்டம் நடத்த மாநாடு இந்திய இளைஞர்களை அறைகூவி அழைக்கிறது.

-ச.லெனின்

Pin It