தூரங்களைச் சரியாகக் கணிக்கவும் ஆழ்பொருள்களைக் காணவும் நம் தலையின் முன்புறத்தில் இரண்டு கண்கள் அமைந்துள்ளன. மரங்களில் கிளைக்குக் கிளை ஆடி அசைந்து இயங்க வேண்டியிருந்ததால் இடை தூரங்களைத் துல்லியமாகக் கணிக்க வேண்டியதாயிற்று. அதனால் அதற்கேற்ப நம் பழம் மூதாதையரின் பக்கவாட்டிலிருந்து கண்கள் முன்பக்கமாக இடம் பெயர்ந்து மாற்றம் பெற்றன.

european_owl_370முன்புள்ள இரு கண்களின் தனிப்பட்ட பார்வைக் களங்கள் ஒன்றின் மீது ஒன்று மேற்செல்லும் போது கவிகின்றன. நாம் இரண்டு பிம்பங்கள் ஒன்றின் மேல் ஒன்று ஏறியது போல் காண் கிறோம். ஆனால் இரண்டு கண்களுக்கும் இடையே உள்ள தூரத்தால் ஒவ்வொன்றின் பிம்பமும் பொருளின் பக்கத்தைச் சுற்றிக் கொஞ்ச தூரம் செல்ல வேண்டியதாகிறது. இது திட்பக் காட்சிப் பார்வை (stereoscopic vision) அல்லது பார்வை ஆழம் என அழைக்கப்படும். இப்பார் வையை நாமும் வாலில்லாக் குரங்குகளும் கொண்டுள்ளோம். பல விலங்குகளும் மீனும் இந்தச் சிறப்புத் தன்மையைத் தம்பால் கொள்ளவில்லை. அவற்றிற்கு உலகம் தட்டையாய்த் தோன்றும். ஆனால் இவற்றிற்கு விதிவிலக்காக ஆந்தை உள்ளது. நம்மை விடச் சிறந்த நிலையில் திட்பக்காட்சிப் பார்வையுடன் தொலைக்காட்சிப் பார்வையையும் ஆந்தை கொண்டுள்ளது.

அருகிலுள்ள பொருள்களைப் பற்றிய அளவில் நம்முடைய திட்பக் காட்சிப் பார்வையைப் பொறுத்தே நம் தூரக் கணிப்புகள் அமையும். தூரம் அதிகரிக்க அதிகரிக்க இடதுகண் வலதுகண் காட்சிகளின் இடைவெளி அருகிவிடும். ஆகவே நாம் பிறதுணைக் கூறுகளையும் பொறுத்தாக வேண்டும்.

பொருள் மிக தூரத்திலிருந்தால் அது பார்வைக்கு மிகச் சிறியதாய்த் தோன்றும் என்பது அனுபவக் கூற்று. பொருளின் நிறமும் மாறித் தெரியும். இதனுடைய வடிவ விவரங்கள் மறையும். அதனுடைய மேல் வரியும் மங்கும். சேய்மைப் பொருளின் தூரத்தைத் தீர்வு காண்பதற்ககு இயலாத தன்மையைத் தருவது போலன்றி அண்மைப் பொருள்கள் அளவை ஒன்றினை நமக்குக் கொடுக்கின்றன. இணைகோடுகள் அடிவானத்தில் குவிகின்றன என்ற மாயத் தோற்றத்தை தொலைக்காட்சி தருகிறது.

(உடலும் மருந்தும் நூலிலிருந்து)

Pin It