face_221மனித பரிணாமத்தின் உச்ச நிலை மனித தர்மமாகும். மனித பரிணாமத்தின் இன்னொரு ஆதி உணர்வு அருவெறுப்பாகும்.

எது தெரிகிறதோ இல்லையோ குழந்தைகளுக்கு கசப்பான பொருளைக் கொடுத்தால் முகத்தை அஷ்டக் கோணத்தில் சுழிப்பது தெரியும். பெரியவர்கள் நாற்றமடிக்கும் பொதுக் கழிவிடத்தை அல்லது சாக்கடையைப் பார்க்கும்போது அருவெறுப்பில் முகம் சுழிக்கிறார்கள்.

இப்படி முகம் சுழிப்பது எதற்காக? மனத்தில் ஓடும் வெறுப்புணர்வை வெளிப்படுத்துவதற்காக. டொரோன்ட்டோ பல்கலைக் கழக உளவியல் சோதனைக்கூடம் மனிதர்கள் அருவெறுப்பினால் முகம் சுழிக்கும்போது ஏற்படும் முகத்தசை அசைவுகளை சோதித்தனர்.

விளையாட்டு அல்லது நியாய விசாரணையின்போது அநியாயமாக யாராவது நடந்து கொண்டால் அப்போதும் மனிதர்கள் முகம் சுழிக்கிறார்கள். அருவெறுப்பு, அநியாயத்தைப் பார்த்தல் ஆகிய இரண்டு நிகழ்ச்சியின்போதும் மனித முகத்தில் ஒரே மாதிரிதான் தசைகள் அசைகின்றன. இரண்டுமே ஒன்றுதான் என்று தெரியவந்திருக்கிறது.

எப்படி கசப்பும், விஷங்களும் நம்மை முகம் சுழிக்க வைக்கின்றனவோ அதுபோலவே அதர்மமும் சுழிக்க வைக்கிறது. இதிலிருந்து மனிதரது தர்ம உணர்வு ஆதி முதலே ஏற்பட்டிருக்கிறது என்பது தெரிகிறது.

-    முனைவர் க.மணி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It