• ஃபிளாஸ்க்கைக் கழுவும்போது வெந்நீரைப் பயன்படுத்துங்கள். ஃபிளாஸ்க்கைப் பயன்படுத்தாத பொழுது கப், மூடி ஆகியவற்றைத் திறந்து வையுங்கள்.

 

  • ஃபிளாஸ்கில் எதை ஊற்றினாலும் ஓர் அங்குலத்திற்குக் கீழ் நிற்கும் வரை ஊற்றினால்தான் நல்ல பாதுகாப்பு இருக்கும்.

 

  • பாலைப் பாதுகாப்பதற்கு, கொதிக்கும் நிலையிலோ அல்லது குளிர்ந்த நிலையிலோ ஊற்றி வையுங்கள். அப்போதுதான் அது கெட்டுப் போகாமல் இருக்கும்.

 

  • சூடான பானம் வைப்பதற்கு முன் ஃபிளாஸ்கை வெந்நீரால் கழுவுங்கள். அவ்வாறே ஐஸ் வாட்டர் வைக்கும் பொழுது குளிர்ந்த நீரால் கழுவுங்கள்

 

  • ஃபிளாஸ்கை கையில் சற்று சாய்வாகப் பிடித்து கொண்டு சூடான திரவத்தை ஊற்றினால் ஃபிளாஸ்க் உடையாது தவிர்க்கலாம்.

 

  • உபயோகிக்காமல் இருக்கும் ஃபிளாஸ்கில் சிறிது சர்க்கரையைப் போட்டு வைத்தால் துர்நாற்றம் அடிக்காது.
Pin It