ராண்ட்ஜன் எக்ஸ் கதிர்களைக் கண்டு பிடித்த புதிதில் லண்டன் நகரிலிருந்து வெளி வந்த  நாளிதழ் ஒன்றில் வெளியான விவரம் இது. ‘எக்ஸ்ரே' என்ற பெயரைக் கேட்டவுடனே வெறுப்பாக இருக்கிறது. எக்ஸ் கதிர் என்ற ஒன்றைக் கண்டு பிடித்தது போதாது என்று எடிசன் என்பவரும் கால்சியம், டங்ஸ்டன் என்று ஏதோ ஒன்றைக் கண்டுபிடித்துவிட்டாராம். இவ்வுலகிலுள்ள மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எக்ஸ் கதிர்கள் பற்றி எழுதப் பட்டிருக்கும் அத்தனை நூல்களையும் ஒன்று கூட விடாமல் எரித்து விட வேண்டும். இவற் றைக் கண்டுபிடித்த அனைவருக்கும் மரண தண்டனை விதிக்க வேண்டும் அப்படிச் செய்தால்தான் உலகிற்கு நன்மை” - இது எப்படியிருக்கு?

Pin It