தேவையான‌ பொருட்க‌ள்:

கெட்டி அவல் - ஒரு கப்
துருவிய தேங்காய்ப்பூ - அரை கப்
துருவிய வெல்லம் - முக்கால் கப்
நெய் ‍- 2 மேஜைக்க‌ர‌ண்டி
ஏலக்காய் - 2
முந்திரி, திராட்சை ‍- தேவையான‌ அள‌வு

செய்முறை:

அவலை நன்கு அலம்பி வடிய வைக்க வேண்டும். வெல்லத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்கவைத்து, கல், மண்போக வடிகட்டி, திரும்பவும் கொதிக்கவிட வேண்டும். நன்கு கொதித்ததும், ஊறின அவல், தேங்காய்ப்பூ போட்டு கிளற வேண்டும். கெட்டியானதும், நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, பொடி செய்த ஏலப்பொடி, நெய் சேர்த்து சுருளக் கிளறி பரிமாற வேண்டும்.

Pin It