தேவையான பொருட்கள் ;

முட்டை -3

கேரட் -1

வெங்காயம் -1

கரம்மசாலா -2ஸ்பூன்

உப்பு -தேவையான அளவு

எண்ணை -தேவையான அளவு

செய்முறை :

கேரட்டை தோல் நீக்கி துறுவிகொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிவைக்கவும்.   இதனை சிறிது எண்ணெய் விட்டு லெசாக வதக்கிக் கொள்ளவும். ஒரு கப்பில் வதக்கிய கேரட்,வெங்காயம், உப்பு இதனுடன் கரம்மசாலா வை சேர்த்து நன்கு கலக்கவும். அதில் முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் தோசைக்கல்லை காயவைத்து முட்டை கலவையை ஊற்றி சிறிது எண்ணைவிட்டு வெந்ததும் திருப்பிவிட்டு நன்றாக வெந்ததும் எடுத்தால் சுவையான மசாலா ஆம்லெட் ரெடி.

Pin It