தேவையான பொருட்கள்:

முட்டை - 5
பூண்டு - 2 பல்
சீரகம் - 1 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
மிளகாய்வத்தல் - 2
முருங்கைக்காய் - 1
சின்ன வெங்காயம் - 1/2 கப்
பச்சை மிளகாய் - 4
தேங்காய் துருவல் - 1/2 தேங்காய்
எண்ணெய் - 2 தேக்கரண்டி 

செய்முறை:

முட்டையை வேக வைத்து தோலுரித்து வைத்துக் கொள்ள வேண்டும். சின்ன வெங்காயத்தை இரண்டாக நீளவாக்கில் நறுக்கிக் கொள்ள வேண்டும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, மிளவத்தல், கறிவேப்பிலை போட்டு தாளித்து நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்க வேண்டும். பின் முருங்கைக்காயை போட்டு வதக்கி உப்பு 1 தேக்கரண்டி, 2 கப் தண்ணிர் ஊற்றி காய் வேகும் வரை மூடி வைக்க வேண்டும். காய் வெந்தபின் அரைத்தவற்றை போட்டு 1 நிமிடம் பச்சை வாசனை போகும் வரை கிளற வேண்டும். வேக வைத்த முட்டையை போட்டு முட்டை உடைந்து விடாமல் மசாலாவுடன் கிளறி 2 நிமிடம் சிம்மில் வைத்து இறக்க வேண்டும்.

Pin It