தேவையான பொருட்கள்: கோழிக்கறியினை நன்கு கழுவி சுத்தம் செய்து துண்டுகளாக்கிக் கொள்ளவும். கறியுடன் ஒரு தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு பிரட்டிக் கொள்ளவும். புளியை அரை கோப்பை நீர் ஊற்றி கரைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும். தேங்காயைத் துருவி பால் எடுத்துக் கொள்ளவும்.
கோழி - 1
தேங்காய் - ஒன்று
மஞ்சள் - ஒரு அங்குலத் துண்டு
உலர்ந்த மிளகாய் - 10
மிளகு - 6
பட்டை - இரண்டு அங்குலத்துண்டு
ஏலக்காய் - 4
இஞ்சி - ஒரு அங்குலத்துண்டு
சீரகம் - ஒரு தேக்கரண்டி
பூண்டு - 10 பல்
கிராம்பு - 4
புளி - சிறு எலுமிச்சை அளவு
வினிகர் - 1 மேசைக்கரண்டி
எண்ணெய் - இரண்டு மேசைக்கரண்டி
பெரிய வெங்காயம் - 2
உப்பு - தேவையான அளவு
சீனி - ஒரு தேக்கரண்டி
செய்முறை:
மஞ்சள், உலர்ந்த மிளகாய், இஞ்சி, பூண்டு, பட்டை, ஏலக்காய் ஆகியவற்றை ஒன்றாய் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கின வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். அத்துடன் கோழித் துண்டங்களைச் சேர்த்து நன்கு வதக்கவும். சிறிது தண்ணீர் சேர்த்து, மூடி வைத்து கறி மிருதுவாகும் வரை நன்கு வேகவிடவும்.
கறி வெந்தவுடன் அரைத்து வைத்துள்ள மசாலா, தேங்காய் பால், புளிக் கரைசல், வினிகர், ஒரு தேக்கரண்டி சீனி மற்றும் தேவையான உப்பு சேர்த்து மிதமான தீயில் மேலும் சில நிமிடங்களுக்கு வேகவிடவும். நன்கு வெந்து குழம்பாய் வந்தவுடன் இறக்கி பரிமாறவும்.
கீற்றில் தேட...
கோவா சிக்கன் கறி
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: கோழி