தேவையான பொருட்கள்:

கோழிக் கறித் துண்டுகள் - 4

சிக்கன் மசாலா பௌடர் - 2 தேக்கரண்டி

வாழைப்பழங்கள் - 2

அரிசி - 1 கப்

எலுமிச்சம் பழம் - 3 

செய்முறை:

கோழி மசாலா, உப்பு, கறி மசாலா பொடி ஆகியவற்றை நன்றாகப் பிசைந்து, அதில் கோழித் துண்டுகளை நன்கு தோய்த்து எடுக்க வேண்டும். இந்தத் துண்டுகளை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக வரும் வரை பொரிக்கவும். பின்னர் சூட்டைக் குறைத்து விட்டு கோழித் துண்டுகள் உள்ள பாத்திரத்தை மூடி அதை சுமார் 15 நிமிட நேரம் அடுப்பில் வைத்திருக்கவும்.

இப்போது வாழைப்பழங்களை எடுத்து நறுக்கி அதை சுமார் 5 நிமிட நேரம் கோழிக் கறியுடன் சேர்த்து வேக விடவும். அதேசமயத்தில் கொஞ்சம் அரிசியை எடுத்து வேக வைக்கவும். அரிசி வெந்த பிறகு அதில் அரை எலுமிச்சம்பழ சாறை விடவும். இப்போது வாழைப்பழ கோழிக் கறி தயார்.

Pin It