தேவையானவை:

chicken_gravy_380சிக்கன்.......................1 /2 கிலோ
சின்ன வெங்காயம்...100 கிராம்
இஞ்சி.........................1 இன்ச் நீளம்
பூண்டு........................15 பல்
மிளகாய் பொடி .......1 தேக்கரண்டி
மல்லி பொடி..............1 தேக்கரண்டி
சீரகப்பொடி.................1 தேக்கரண்டி
மிளகுப் பொடி...........2 தேக்கரண்டி
மஞ்சள்  பொடி..............கொஞ்சம்
பச்சை மிளகாய்...........3
புதினா தழை .............கைப்பிடி அளவு
மல்லி தழை ...............கைப்பிடி
கறிவேப்பிலை............2 கொத்து
தயிர்..............................2 தேக்கரண்டி
எலுமிச்சை..................1 /2 மூடி
எண்ணெய்.................4  தேக்கரண்டி
உப்பு.............................தேவையான அளவு

செய்முறை:

சிக்கனை நன்கு கழுவவும். இஞ்சி, பூண்டை நைசாக அரைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாய், புதினா, மல்லி, கறிவேப்பிலையை நன்றாக அரைக்கவும்.

ஓர் அகன்ற பாத்திரத்தில், சிக்கன், இஞ்சி,பூண்டு விழுது, அரைத்த பச்சை மிளகாய், புதினா, மல்லி, கறிவேப்பிலை, மிளகாய், மல்லி, மஞ்சள் பொடி, சீரகப் பொடி, மிளகு பொடி, தயிர், எலுமிச்சை சாறு, ஒரு தேக்கரண்டி எண்ணெய், உப்பு போட்டு பிசைந்து, குளிர் பதனப் பெட்டியில், குறைந்தது ஒரு மணி நேரம் வைக்கவும். 24 மணி நேரம் வைத்தால் சிக்கன் அட்டகாசமாய் இருக்கும். பின்னர் அடுப்பில் கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றி வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும், அதில் ஊறவைத்த சிக்கனை போட்டு வதக்கவும். சிக்கன் போட்டு 5 நிமிடம் ஆனதும், தீயை சிம்மில் வைத்து விடவும். 10 நிமிடத்தில் சிக்கன் பஞ்சு மாதிரி வெந்து விடும். இறக்கி விடலாம்.கோழிக் கறி என்பதால், இதில் எண்ணெய் மிதக்கும். அதாங்க, அதன் கொழுப்பு..!

இந்த புதினா மல்லி சிக்கனை எதற்கு வேண்டுமானாலும் தொட்டு சாப்பிடலாம். இட்லி, தோசை சப்பாத்திக்கு நல்ல துணை..!

Pin It