தேவையான பொருட்கள்

பச்சை மிளகாய் – 250 கிராம்

மஞ்சள் - 1 தேக்கரண்டி

கடுகுத்தூள் - 4 தேக்கரண்டி

எலுமிச்சை பழம் - 10

இஞ்சி - 100 கிராம்

பெருங்காயம் - சிறிதளவு

உப்பு - 5 தேக்கரண்டி

எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி

செய்முறை

பச்சைமிளகாயை நன்றாக கழுவித் துடைத்து, துண்டு துண்டாக நறுக்கக் கொள்ள வேண்டும். இஞ்சியையும் துண்டு துண்டாக நறுக்கி மிளகாயுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும். உப்பையும், மஞ்சள் பவுடரையும் நன்றாக கலந்து அந்த துண்டுகள் மீது தூவி நன்றாக கலக்க வேண்டும்.

எலுமிச்சை பழங்களை இரண்டாக வெட்டி சாறு பிழிந்து, இதனுடன் கலவையை சேர்க்க வேண்டும். அடுப்பில் வாணலியை வைத்து சிறிது எண்ணெய் விட்டு சூடேறியவுடன் பெருங்காயம், கடுகுத்தூள் இட்டு தாளித்து அதனுடன் கலந்துவிட வேண்டும்.

Pin It