தேவையான பொருட்கள் 

பாசுமதி அரிசி - ஒரு கிலோ

மட்டன் - ஒரு கிலோ

மிளகாய் தூள் - இரண்டு தேக்கரண்டி

வெங்காயம் - 500 கிராம்

பழுத்த தக்காளி - 500 கிராம்

பச்சை மிளகாய் - 5

புதினா - ஒரு கொத்து

எண்ணெய் - 200 மில்லி

நெய் - 50 மில்லி

எலுமிச்சை -அரை பழம்

பட்டை, ஏலம், கிராம்பு - தலா 2

பிரியாணி இலை - 2

உப்பு தூள் - தேவையான அளவு

செய்முறை 

அரிசியை ஊற வைக்க வேண்டும். மட்டனை கொழுப்பெடுத்து கழுவி தண்ணீரை வடிக்க வேண்டும். வாயகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஈரம் போக காய வைத்து எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, ஏலம், கிராம்பு, பிரியாணி இலை போட்டு வெடிக்க விட்டு வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து சேர்த்து நன்கு வதக்க வேண்டும். வதக்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கி மிளகாய் தூள், பழுத்த பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பிறகு புதினா, தயிர் சேர்க்க வேண்டும். அடுத்து தக்காளியும் கொத்துமல்லியும் சேர்க்க வேண்டும். 

அடுத்து உப்பு, மட்டன் சேர்த்து நன்கு கிளறி, தீயின் தனலை சிம்மில் வைத்து மட்டனை வேக விட வேண்டும். மட்டன் வெந்து கூட்டு கிரேவி பதம் வரும் வரை வேக விட வேண்டும். மட்டன் அதிகமாக இருந்தால் அதற்கு தகுந்தாற் போல் தண்ணீர் ஊற்ற வேண்டும். ஒரு டம்ளர் அரிசிக்கு ஒன்னேகால் வீதம் தண்ணீர் அளந்து ஊற்ற வேண்டும். தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் அரிசியை களைந்து போட்டு கொதிக்கவிட்டு கடைசியாக சிறிது நெய், லெமன் பிழிந்து, பாதி அளவு வற்றும் போது அடுப்பின் மேல் தம் போடும் கருவியை வைத்து சாப்பாடு சட்டியின் மேல் கனமான பாத்திரத்தை வைத்து 20 நிமிடம் தம்மில் விட வேண்டும். பிறகு லேசாக மேலிருந்து கீழாக சாதம் குழையாமல் பிரட்டி எடுக்க வேண்டும். இப்போது சுவையான ஆம்பூர் மட்டன் பிரியாணி ரெடி.

நன்றி: ஜலீலா

அனுப்பி உதவியவர்: நளன்

Pin It