தேவையான பொருட்கள்:

ஆட்டுக்கறி: ஒரு கிலோ
கரம் மசாலா: 2 தேக்கரண்டி
தனியா தூள் 2 தேக்கரண்டி
நெய்: 200 கிராம்
சுக்கு: 1 தேக்கரண்டி
பெரிய வெங்காயம்: 2
பெருங்காயத் தூள்: ஒரு சிட்டிகை
இஞ்சி: சிறுதுண்டு
கொத்துமல்லி: ஒரு கட்டு
உருளைக்கிழங்கு: 14
பச்சை மிளகாய்: 2
உப்பு: தேவையான அளவு
ரொட்டித் தூள்: தேவையான அளவு 

செய்முறை:

வாணலியில் 50 கிராம் நெய் விட்டு, அது காய்ந்ததும் உருளைக்கிழங்கு, ரொட்டித் தூள் தவிர ஏனைய பொருள்களை எல்லாம் வாணலியில் போட்டு வதக்க வேண்டும். தேவையான அளவு தண்ணீர் விட்டு இறைச்சியை வேகவைத்து இறக்க வேண்டும். 

உருளைக்கிழங்கை வேகவைத்துத் தோலுரித்து, அதனுடன் சிறிதளவு உப்பு, மிளகாய்த் தூள் சேர்த்து மசித்துக் கொள்ள வேண்டும். இதை சிறுசிறு உருண்டைகளாக்கி, தட்டி கொத்துக்கறி கலவையை வைத்து இடைவெளி விடாமல் மூடி, ரொட்டித் தூளில் புரட்டி எடுக்க வேண்டும். வாணலியில் நெய் விட்டுக் காய்ந்ததும் கட்லெட்டை பொன்னிறமாக வறுத்து எடுக்க வேண்டும். 


Pin It