தேவையானவை:

ஆட்டுக்கறி..எலும்புடன்..............1 /4 கிலோ
பெல்லாரி....................................... 3
சின்ன வெங்காயம்.......................5
பச்சை மிளகாய் நீளமானது........8
உருளைக் கிழங்கு..தேவையானால்....3
தக்காளி...............................................3
மல்லி பொடி.......................................4 தேக்கரண்டி
மஞ்சள் பொடி...................................கொஞ்சம்
முந்திரி................................................6
சோம்பு.................................................1 /2 தேக்கரண்டி
கசகசா...................................................1 தேக்கரண்டி
இஞ்சி.....................................................1 இன்ச் நீளம்
பூண்டு....................................................10 பல்
தேங்காய் பால்.....................................1 மூடியில் எடுத்தது / ஒரு டம்ளர்
ஏலம்........................................................1
பட்டை...................................................சிறு துண்டு
கிராம்பு...................................................3
புதினா...................................................கைப்பிடி
கறிவேப்பிலை.மல்லி தழை..............கொஞ்சம் . .
எலுமிச்சை.......................................1/2 மூடி
எண்ணெய்.............................................3 தேக்கரண்டி
உப்பு ....................................................... தேவையான அளவு

செய்முறை:

mutton_salna_370கறியை சின்னதாக நறுக்கி, கொஞ்சம் உப்பு மஞ்சள் பொடி போட்டு, கறி முழுகும் வரை கழுநீர்/நீர் விட்டு, அதிலேயே முழு உருளைக் கிழங்கை கழுவி போட்டு, குக்கரில் 4 விசில் விட்டு, நன்றாக வேகவிடவும். கிழங்கு வெந்தபின் அதனை தோல் உரித்துவிட்டு, கொஞ்சம் பெரிதாக நறுக்கிக் கொள்ளவும். பெல்லாரியை மெலிதாக நறுக்கவும். 4 பச்சை மிளகாயை கீறி வைக்கவும். தக்காளியையும் 8 ஆக நறுக்கவும். தேங்காயை துருவி 3 முறை பால் எடுக்கவும். இஞ்சி, பூண்டை நன்றாக அரைக்கவும். 4 பச்சை மிளகாய், முந்திரி, கசகசா, சோம்பு இவற்றை நைசாக அரைத்த பின், அத்துடன் மல்லி பொடியையும் வைத்து அரைத்துவிடவும்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விட்டு, சூடானவுடன், அதில் ஏலக்காயை உரித்துப் போட்டு, அத்துடன் பட்டை கிராம்பு போடவும். பட்டை, கிராம்பு சிவந்தவுடன், அதில் அரைத்த இஞ்சி,பூண்டு விழுதைப் போட்டு வதக்கவும். பின், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு நன்கு வதக்கவும். அதிலேயே அரைத்த பச்சை மிளகாய்,முந்திரி விழுதை போட்டு வதக்கிய பின், மூன்றாவது தேங்காய்ப் பாலை ஊற்றவும்.போதுமான உப்பு போடவும். மஞ்சள் பொடி போடவும்.

குழம்பில் வேகவைத்த கறி, நறுக்கிய உருளைக் கிழங்கைப் போடவும்.குழம்பு நன்கு கொதித்ததும் இரண்டாவது பாலை ஊற்றவும். குழம்பு நன்றாக சுண்டியதும், மூன்றாவது பாலை ஊற்றி, புதினா,மல்லி போட்டு, அடுப்பை சிம்மில் வைக்கவும். குழம்பு நுரைத்துக் கொண்டு, கொதி வரத் தொடங்கியதும் இறக்கிவைத்து,1/2 மூடி எலுமிச்சை பிழிந்து விடவும்.  மட்டன் சால்னா பராத்தாவுக்கு சூப்பரான துணை..!

Pin It