தேவையான பொருட்கள்:

புழுங்கல் அரிசி - 300 மி.லி
உளுத்தம்பருப்பு - 100 மி.லி
வெந்தயம் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

ஒரு பங்கு உளுத்தம்பருப்புக்கு மூன்று பங்கு அரிசி அல்லது அரிசி அளவில் மூன்றில் ஒரு பங்கு உளுத்தம்பருப்பு என்பது கணக்கு. உளுத்தம்பருப்பு புதிதாக இருப்பின் சிறிது குறைத்தும் போடலாம். அரிசியையும் உளுத்தம்பருப்புவையும் தனித்தனியாக ஊறவைக்கவும். சுமார் 3 மணிநேரம் ஊறவைக்கவும். முழு உளுத்தம்பருப்பாக இருப்பின் ஒன்று அல்லது ஒன்றரை மணி நேரம் போதுமானது. அரிசியையும், உளுத்தம்பருப்பினையும் தனித்தனியாக அரைத்துக்கொள்ளவும். அரிசியை நன்கு மிருதுவாக அரைத்துக்கொண்டால் தோசை மொறுமொறுப்பாக இருக்கும். அரிசியுடன் ஒரு தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து ஊறவைத்து அரைத்துக்கொண்டால் தோசை ஒட்டாமல் வரும். பிறகு, இரண்டு மாவினையும் ஒன்றாகக் கலந்து, தேவையான அளவு உப்பு சேர்த்து புளிக்க விடவும்.

முதல்நாள் இரவு அரைத்துவைத்து மறுநாள் காலை பயன்படுத்த நன்றாக இருக்கும். தோசைக்கல்லில் சிறிது எண்ணெய் விட்டு, மாவை ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.

Pin It