தேவையான பொருட்கள்:

பச்சரிசி - அரைக்கிலோ
முந்திரி பருப்பு - 100 கிராம்
நெய் - 200 கிராம்
பயத்தம் பருப்பு - 100 கிராம்
மிளகு, சீரகம், உப்பு - தலா 1 தேக்கரண்டி
இஞ்சி, கறிவேப்பிலை, பெருங்காயம் - தேவையான அளவு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் ஒன்றரை லிட்டர் நீரை விட்டு கொதிக்க விடவும். அரிசியையும், பயத்தம் பருப்பையும் அதில் போட்டு, வெந்ததும் இறக்கி வைத்துக் கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து நிறைய நெய் ஊற்றி காய விடவும். பின்பு அதில் மிளகு, பெருங்காயம், சீரகம், இஞ்சித் துண்டுகள், கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு நன்கு வறுக்கவும். 

வறுத்ததோடு முந்திரிப்பருப்பையும் சேர்த்து பொங்கலில் போட்டு நன்றாகக் கிளறவும். மீதி நெய்யை காய வைத்து பொங்கலில் ஊற்றி, ‏இறக்கி வைக்கவும்

Pin It