ஒரு மனநல மருத்துவமனையில் நோயாளிகளை விடுவிப்பதற்காக மருத்துவர் ஒரு சோதனை வைத்தார். சுவரில் முழு அளவிற்கு ஒரு கதவை சாக்பீஸால் வரைந்தார். நோயாளிகளை அழைத்து, “யார் இந்தக் கதவை திறக்கிறார்களோ அவர்களுக்கு ஐஸ்கிரீம் தருவேன்’ என்றார்.

எல்லோரும் சுவரை நோக்கிப் பாய்ந்து, கதவைத் திறக்க முட்டி மோதினர். ஒரே ஒருவர் மட்டும் தள்ளி நின்று வேடிக்கை பார்த்தார். மருத்துவர் அவரிடம் கேட்டார், “நீங்கள் ஏன் கதவைத் திறக்க முயற்சிக்கவில்லை”

“என்னிடம்தான் சாவி இல்லையே!”

Pin It