ஜப்பானியர் ஒருவர் இந்தியாவை சுற்றிப்பார்க்க வந்தார்.
சுற்றிப்பார்த்துவிட்டு விமான நிலையத்திற்கு டாக்ஸியில் கிளம்பினார். அந்த டாக்ஸியை ஒரு ஹோண்டா கார் முந்திச் சென்றது. ஜப்பானியர் டாக்ஸி டிரைவரிடம் சொன்னார், “ஹோண்டா கார்! எவ்வளவு வேகமாகப் போகிறது பாருங்க… மேட் இன் ஜப்பான்”
சிறிது நேரத்தில் டொயட்டோ கார் ஒன்று முந்திச் சென்றது. அப்போதும் பெருமையாக சொன்னார், “டொயட்டோ கார், ரொம்ப வேகம்! மேட் இன் ஜப்பான்”.
மிட்சுபிஷி வண்டி முந்திச்சென்றபோதும் அதேபோல் சொன்னார்.
இறுதியில் விமானநிலையம் வந்தது. டாக்ஸி மீட்டரைப் பார்த்தார். 4000 ரூபாய் என்றது. “இவ்வளவு அதிகமா?”
டாக்ஸி டிரைவர் சொன்னார், “மீட்டர், மேட் இன் இண்டியா. ரொம்ப ரொம்ப பாஸ்ட்”
கீற்றில் தேட...
பொது
மேட் இன் இண்டியா
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: பொது