1. தொலைபேசியைக் கண்டுபிடித்தவன் நமது நன்றிக்குறியவன். நேரில் திட்ட முடியாதவர்களையெல்லாம் அதன் மூலம் திட்ட முடிகிறதல்லவா!
2. நான் துறவியாகி, ரிஷிகேசம் போய் விடலாமா என்று எண்ணுகிறேன். கூடவே இன்னொரு எண்ணமும் வருகிறது. எந்தெந்த பெண்களை உடன் அழைத்துச் செல்லலாம்?
3. வயது ஆக ஆக தலைமுடி நரைத்து, பற்கள் விழுவதற்குப் பதிலாக, நாக்கே விழுந்து விடுமாறு ஒரு ஏற்பாடு செய்தால் நாட்டில் குழப்பமே இருக்காது!
4. கடவுள் பன்றியைப் படைத்ததிலே அர்த்தம் உண்டு. சில மனிதர்களுக்கு உவமை சொல்ல அதைவிடத் தோதானது ஒன்றுமில்லை!
(நகைச்சுவை உணர்வு மிக்க கவிப்பேரரசர் கண்ணதாசன் தனது 'செப்புமொழிகள்' நூலில் கூறியுள்ளது)
........................................
-கிரிஜா மணாளன், திருச்சிராப்பள்ளி
கீற்றில் தேட...
பொது
கவிஞரின் நகைச்சுவை!
- விவரங்கள்
- கிரிஜா மணாளன்
- பிரிவு: பொது