நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் பாரில் நுழைந்த சீமாட்டி ஒரு பெக் ஷிவாஸ் ரீகல் ஆர்டர் செய்தார்.

பக்கத்தில் இருந்த ஒரு கோழிப்பண்ணைக்காரர், ‘என்ன ஒற்றுமை! நானும் அதுதான் ஆர்டர் பண்ணினேன்’ என்றார்.

‘எனக்கு இது சந்தோஷமான நாள்! அதைக் கொண்டாடத்தான் வந்தேன்!’

‘என்ன ஒற்றுமை! எனக்கும் இது சந்தோஷமான நாள்! ஆமா உங்கள் சந்தோஷத்துக்கு என்ன காரணம்?’

‘ரொம்ப வருஷமா, எனக்கும் என் கணவருக்கும் குழந்தை இல்லை! இன்னைக்குத்தான் நான் உண்டாகியிருக்கிறதா எங்க குடும்ப டாக்டர் சொன்னார்!’

‘என்ன ஒற்றுமை! என்னோட கோழிப்பண்ணையில் ரொம்ப நாளா கோழிகள் எதுவும் முட்டை போடாமல் இருந்தது. இன்னைக்குத்தான் முட்டை போட ஆரம்பிச்சது’

‘அதுக்கு என்ன பண்ணீங்க?’

‘கோழிப்பண்ணையில் இருந்த சேவலை மாத்திட்டேன்…’

சீமாட்டி சொன்னாள்: ‘என்ன ஒற்றுமை!’

Pin It