ஒரு தடவை அரசியல்வாதிகள் எல்லோரும் ஒரு பேருந்தில் சுற்றுலா சென்றனர். எதிர்பாராதவிதமாக பேருந்து விபத்துக்குள்ளானது. கிராமத்து ஆள் ஒருவர் இறந்தவர்களின் உடல்களை எல்லாம் அடக்கம் செய்தார். சில நாட்கள் கழித்து விபத்து குறித்து விசாரிக்க வந்த காவல் துறையினர், கிராமத்து ஆளை கண்டுபிடித்து கேள்விகள் கேட்டனர்.
‘இறந்து விட்டார்கள் என்பதை உறுதிபடுத்திவிட்டுதான் அவர்களை புதைத்தாயா?’
‘இல்லை. நாங்கள் உயிருடன் தான் இருக்கிறோம் என்று சிலர் கூறினார்கள். ஆனால் நம்ம அரசியல்வாதிகளைப் பற்றித்தான் தெரியுமே! எப்போதும் பொய் சொல்பவர்கள் தானே என்று அவர்களையும் சேர்த்து புதைத்துவிட்டேன்’
கீற்றில் தேட...
அரசியல்
அரசியல்வாதிகளின் பொய்
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: அரசியல்