எந்த நபராவது தன்னிச்சையாக அந்த பெண்னைக் காக்கும் நல்லெண்ணமில்லாது கருச் சிதைவு செய்யத் தூண்டினால் அந்த நபருக்கு 3 வருடம் சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.

அப்பெண்ணின் 4வது அல்லது 5வது மாதத்தில் கருச்சிதைவு செய்தால் 7 வருடம் சிறை மற்றும் அபராதம் தண்டனையாக விதிக்கப்படும்.

ஒரு பெண் தானாக கருச்சிதைவு செய்து கொண்டாலும் இப்பிரிவின் கீழ் குற்றம் சாட்டலாம்.

மருத்துவ கருக்கலைப்பு சட்டத்தின்படி, கருவை வளர அனுமதித்தால் அது அப்பெண்ணின் உயிருக்கு ஆபத்தோ அல்லது அத்தாயின் உடல் மற்றும் மன நிலைக்கு ஊறு விளையும் என்றாலோ அல்லது கருவில் உள்ள குழந்தை பிறந்தால் அதற்கு ஊறு விளையும் என்றாலோ, பதிவு செய்யப்பட்ட மருத்துவரால் அக்கருவை கலைத்து விடலாம் எனக் கூறப்பட்டுள்ளது...

கருச்சிதைவு செய்யும் நபர் மருத்துவராக இல்லாவிட்டால் அந்நபர் தண்டிக்கப்படுவார்

- சிவராம கிருஷ்ணன், அரசு சட்டகல்லூரி மாணவர் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It