Compression என்பது வாகன Engineல் Piston, engine cylinderல் மேல்நோக்கி செல்லும் போது அதன் கொள்ளளவு (Volume) குறையும். அப்போது காற்று அல்லது காற்று - எரிபொருள் கலவையானது தன்னுடைய கொள்ளவை விடக் குறைவான கொள்ளளவு நிலைக்குச் செல்லும். அப்போது அதன் மீது செயல்படும் விசையானது அதிலுள்ள மூலக்கூறுகளை ஒன்றோடு ஒன்றாக அழுத்தி, அதிக அழுத்தம் (Pressure) உண்டாகும். இதுவே Compression ஆகும்.

electronic engine testerPetrol engine ஐப் பொருத்தமட்டில் இந்த அழுத்தத்தின் அளவு 140 - 160 psi ஆகும். சில வகையான Petrol engine ல் 220 psi வரை அழுத்தம் இருக்கும். அது அதனுடைய அளவு மற்றும் பயன்பாட்டை பொருத்தது. petrol engine ல் அழுத்தம் இந்த குறிப்பிட்ட அழுத்தத்தை விட அதிகமாக இருந்தால் petrol engineல் Preignition பிரச்சினை ஏற்படும். அதனால் Engine உள் இருக்கும் பாகங்கள் பாதிப்படையும். ஆனால், Diesel engine ஐப் பொருத்தமட்டில் அழுத்தமானது 350 psi கும் அதிகமாக இருக்கும். காரணம் Petrol engineல் Petrol ஐ எரிய வைக்க spark plug பயன்படுத்தப்படுகிறது. ஆனால் Diesel engineல் அதிக அழுத்தத்தினால் ஏற்படும் வெப்பத்தின் மூலம் Diesel எரியூட்டப்படும். எனவே தான் diesel engine அளவில் பெரியதாக உள்ளது. இந்த அழுத்தப்பட்ட காற்று அல்லது காற்று - எரிபொருள் கலவையை எரியூட்டுவதன் மூலம் பெறப்படும் ஆற்றலின் மூலம் தான் அனைத்து வகை தானியங்கிகளும் இயக்கம் பெறுகின்றன.

எப்போது ஒரு வாகனத்திற்கு Compression Test தேவைப்படுகிறது?

பொதுவாக சொன்னால் இந்த testஐ எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். குறிப்பாக Engine இயக்கத்தில் வசதியின்மை (Roughness) அல்லது ஆற்றல் குறைபாடு (Power lacking) ஆகியவை இருந்தால் இந்த Test செய்துபார்க்க வேண்டும்.

Compression Test எப்படி செய்யப்படுகிறது?

Compression Test ஆனது பல வகையான வாகனங்களுக்கு பல வழிகளில் செய்யப்படுகிறது, இந்தப் பதிவில் Petrol engineல் நடைபெறும் Compression test ஐப் பற்றி பார்ப்போம்.

Petrol engineல் Compression test ஆனது இரு வழிகளில் செய்யப்படுகிறது.

முதல் வகையில் Compression test சாதாரணமாக Compression gauge மூலம் செய்யப்படுகிறது.

செய்முறை

முதலில் Engine ஐ சிறிது நேரம் ஓட விட்டு சூடுபடுத்தவும். அதே நேரத்தில் Oil ம் சற்று சூடாகும். குளிர்ச்சியாக இருந்தால் சரியான அளவீடு கிடைக்காது.

Ignition coil ஐ Disconnect செய்யவும்.

Spark plug ஐ கழட்டி அந்த இடத்தில் Compression tester ஐ மாட்டவும்.

Accelerator ஐ Full ஆக வைக்கவும். அப்போது தான் Engine cylinder-குள் போதுமான அளவு காற்று செல்லும்.

இப்போது தொடர்ச்சியாக Engineஐ 5லிருந்து 10 முறை சுழற்றவும். அப்போது தான் Compression testerல் சரியான அளவீடு பதிவாகும்.

இவ்வாறு எத்தனை Cylinder-கள் உள்ளனவோ அத்தனை Cylinder-களுக்கும் செய்து Engine cylinder-ன் அழுத்தத்தை அறியலாம்.

இப்போது ஒவ்வொரு Cylinder-ன் அழுத்த மதிப்பின் வேறுபாடு 10%க்கும் குறைவாக இருந்தால் அழுத்தமானது போதுமான அளவில் உள்ளதாக எடுத்துக்கொள்ளப்படும். ஒரு வேளை 10% அதிகமாக இருந்தால் ஒன்று அல்லது அதற்கு அதிகமான Cylinderகளில் பிரச்சனை இருக்க வாய்ப்புள்ளது. எனவே அவை வேறு சில TEST மூலம் கண்டறியப்படும்.

இரண்டாவது முறையில் ஒரு Electronic Engine Analyzer-ஐப் பயன்படுத்தி ஒவ்வொரு Cylinder யும் சோதனை செய்து இது Engine வேகம் RPM எந்த அளவு குறைகிறது என்பதைக் கணக்கிட்டு எந்த Cylinderல் அழுத்தம் அதிகமாக உள்ளது, எந்த Cylinder-ல் அழுத்தம் குறைவாக உள்ளது என்பதை எளிதாக அறியலாம். முதல் வழியுடன் ஒப்பிடுகையில் இரண்டாவது வழி எளிமையானது ஆகும்.

- ஷேக் அப்துல் காதர்

Pin It