மருத்துவமனைகள் நோயாளிகள் கூடும் இடம் மட்டுமல்ல. நோய்க்கிருமிகள் கூடும் இடமும் அதுதான். மருத்துவமனைக்குள் சென்றுவருபவர்கள் நோய்த்தொற்றுக்கு ஆளாவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. உங்களுடைய நோய் எதிர்ப்பாற்றல் குறைவாக இருந்தால், நீங்கள் மருத்துவமனைவாழ் கிருமிகளின் தாக்குதலுக்கு உள்ளாவது நிச்சயம். குழந்தைகள், முதியவர்கள் இவர்களெல்லாம் மருத்துவமனைக்குள் போய்வருவது ஆபத்தானது. அறுவை சிகிச்சை செய்துகொள்வோரின் உடலில் குழாய்கள் செருகப்பட்டிருக்கும்; தோல் கிழிக்கப்பட்டிருக்கும். நோய்க்கிருமிகள் இவர்களின் உடலில் புகுந்துகொள்வதற்கு இந்த திறப்புகள் எளிதான வழிகளை ஏற்படுத்திக் கொடுக்கின்றன.
MRSA எனப்படும் Staphylococcus aureus எனப்படும் பாக்டீரியாக்கள் எதிர்ப்பு ஆற்றல் மிக்கவை. எளிதில் அழிக்க இயலாதவை. C.difficile என்றழைக்கப்படும் Clostridium difficile பாக்டீரியாக்கள் குடல் நோய்களை ஏற்படுத்தவல்லவை. முதியவர்களை பாதிக்கக்கூடியவை. எனவே, மருத்துவமனனகளில் கிருமியகற்றும் கண்டுபிடிப்புகள் முக்கியமானவை. ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் உள்ள
HINS-light எனப்படும் கண்ணால் காணக்கூடிய ஒளியைக் கொண்டு மருத்துவமனையின் அனைத்து பகுதிகளையும் குளிப்பாட்டுவதன் மூலம் மருத்துவமனைவாழ் நோய்க்கிருமிகளில் பெரும்பகுதியை அழித்தொழிக்க முடியும் என்று ஆய்வுமுடிவுகள் தெரிவிக்கின்றன. இந்த சாதனத்தை உருவாக்குவதில் பல்துறை நிபுணர்கள் கூட்டாக முயன்றுள்ளனர். மின் இயல், நுண்ணுயிரியியல், ஒளி இயற்பியல் ஆகியவற்றில் துறைபோகிய வல்லுநர் குழு இதற்காக இணைந்து பாடுபட்டுள்ளது. நோய்க்கிருமிகளை அழித்தொழிக்கும் இந்த HINS-light ஒளிவெள்ளத்தால் நோயாளிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லையாம். ஒளிவெள்ளத்தின் ஒளிக்கதிர்கள் நோயுண்டாக்கும் பாக்டீரியாக்களின் மூலக்கூறுகளை தாக்கி புதிய வேதிப்பொருட்களை உருவாக்குகின்றன. இந்த வேதிப்பொருட்கள் meticillin-resistant Staphylococcus aureus, (MRSA), Clostridium difficile(C.diff.) இவற்றை அழித்தொழிக்கவல்லவை.
மருத்துவமனைகள் பெருகிவிட்டதால் கிருமியகற்றும் தொழில்நுட்பத்திலும் மாற்றங்கள் தேவைப்படுகிறது. ஆட்களின் துணைகொண்டு செய்யப்படும் பணிகள் திருப்திகரமாக இருப்பதில்லை. HINS-light தொழில்நுட்பம் கருநீல ஒளியை உமிழக்கூடியது. இதனுடன், LED தொழில்நுட்பத்தை இணைத்து இதமான வெப்பத்தை அளிக்கவல்லதும், சாதாரண ஒளி உமிழும் விளக்குகளுடன் இணைந்து செயல்படக்கூடியதுமான சாதனங்கள் இப்போது உருவாக்கப்பட்டுள்ளன.
இன்னும் படிக்க: http://www.sciencedaily.com/releases/2010/11/101114190744.htm
தகவல்: மு.குருமூர்த்தி (