சரும நோய்களை ஹோமியோபதி கோட்பாடுகளின்படி எவ்வாறு குணப்படுத்துவது என்பதை நமது பேராசான் ஹானிமன் அவர்கள் தனது ஆர்கனான் தத்துவ வழிகாட்டி நூலில், மணிமொழி 185 முதல் 203 வரை விரிவாக விளக்கியுள்ளார். அதை தமிழ் வடிவில் இக்கட்டுரை மூலம் தொகுத்தளிக்கிறேன்.

மணிமொழி - 185

 சரும நோய்கள் என்பவை உடலுக்கு வெளிப்புறத்தில் ஏற்படும் மாற்றங்களால் நம் கண்களுக்குத் தெரிகின்றன. இதனால் உடம்பில் சருமம் மட்டுமே பாதிக்கப்பட்டிருப் பதாகவும், உடம் பின் உட்பகுதிகள் பாதிக்கப்படவில் லை என்றும் அலோபதி மருத்து வர்கள் நம்புகின் றனர். இது மருத் துவ அறிவியலை மிகவும் கொச்சைப்படுத்தி, மருத்துவச் சிகிச்சையை பெரும் அழிவிற்கு இட்டுச்செல்லும் செயலாகும்.

மணிமொழி - 186

 விபத்தினா லோ அல்லது வெளிப்பொருட்கள் குத்தியோ சருமத்தில் காயங்கள் ஏற்பட்டால், அவற்றை வெளிக்காயங்கள் என்கிறோம். இந்தக் காயங்கள் அற்பமானவைகளாக இருந்தால் அவை பற்றி நாம் அச்சமடைய வேண்டியதில்லை. ஆனால் காயங்கள் மிகவும் கடுமையானதாக இருக்கும் நிலையில், உயிராற்றல் பாதிக்கப்பட்டு காய்ச்சல் பிற அறிகுறிகள் தோன்றுகின்றன. இச்சமயத்தில் அக்காயத்திற்கு அறுவைச்சிகிச்சை அவசியம் என்றாலும், ஹோமியோபதியர்களாகிய நாம் கவனம் செலுத்த வேண்டியது, பாதிக்கப்பட்ட உயிராற்றலை குணப்படுத்துவதாகும். காயம் குணமடைய, விலகிய மூட்டுக்களை ஒன்றிணைப்பது கிழிந்த தசைகளை சேர்த்துத் தைப்பது, சிதைந்த இரத்த நாளங்களை ஒன்று சேர்ப்பது, உடலினுள் புகுந்த வெளிப் பொருட்களை வெளியேற்றுவது, தேங்கியிருக்கும் நிணநீர், சீழ் போன்றவற்றை வடியச் செய்வது போன்றவற்றை அலோபதி அறுவைச் சிகிச்சை மூலம் உடனடியாக மேற்கொள்ள வேண்டுவது அவசியம் தான் என்றாலும், ஏற்பட்ட காய்ச் சலைத் தணிப்பது, உடல் முழுவதும் ஏற் பட்ட வேதனைகளைக் குறைப்பது போன்ற பிற பாதிப்புகளை ஹோமி யோபதி சிகிச்சையின் மூலம் போக்குவதும் அதே அளவு முக்கிய மாகும்.

மணிமொழி - 187

 ஆனால், சரும நோய்கள் என்பவை வெளிக் காயங்கள் அல்ல. உடலின் உட் புறத்தில் உள்ள ஏதோ ஒரு பாதிப்பே சரும நோய்க்குக் காரணமாக உள்ளது. ஆகவே, சரும நோய்களை உடலின் வெளிப்புறத்தே தோன்றிய நோய்கள் என்று மதிப்பிடுவதும், அவற்றை குணமாக்க மேற்பூச்சு மருந்துகளே போதும் என்று அலோபதி மருத்துவ முறையில் முடிவு செய்வது என்பது பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள மிகுந்த கேடுகளை விளைவிக்கக் கூடிய சிகிச்சை முறையாகும்.

மணிமொழி - 188

 இத்தகைய சரும நோய்கள் உடலின் மேற்புறத்தில் மட்டுமே இருப்பதாக அலோபதி மருத்துவம் கருதுகிறது. மேலும் சரும நோய்கள் என்பவை உடலின் மேற்புறத்தே தோன்றும் நோய்கள் என்றும் உடலின் உட்புறத்தில் ஏற்படும் பாதிப்புகளுக்கும், இவற்றுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்றும் அலோபதி மருத்துவர்கள் கருதுகிறார்கள்.

மணிமொழி - 189

 உடலின் உட்புறத்தே உள்ள ஏதோ ஒரு பாதிப்பு மற்றும் உயிராற்றலில் ஏற்பட்டுள்ள ஏதோ ஒரு பாதிப்பு தான் சரும நோயாக உடலின் வெளிப் புறத்தில் தோன்றுகிறது. நீடித்திருக்கிறது. மற்றும் வளர்கிறது. உடலின் உட்பகுதிகளுக்கும், சரும நோய் தோன்றிய வெளிப்பகுதிக்கும் கண்டிப்பாக நெருக்கமான தொடர்பு உண்டு. முழு உடலில் ஏற்பட்ட ஏதோ ஒரு பாதிப்பே உடலில் சரும நோயாக வெளிப்பட்டிருக்கிறது. உடலின் உட் புறத்தில் நோய் இல்லாமல் உடலில் வெளிப் புறத்தே எவ்வித நோயும் தோன்ற இயலாது.

மணிமொழி - 190

விபத்து போன்ற வெளிக்காரணங்கள் ஏதும் இன்றி, உடலின் வெளிப்புறத்தே ஏற்படும் சரும நோய்களுக்கு முறையான சிகிச்சை அளிப்பது எவ்வாறு? உள்ளுக்கு மருந்துகள் கொடுத்து நோயை வேரோடு களைய வேண்டும். அதுதான் முறையான சிகிச்சை!

மணிமொழி - 191

 சக்திவாய்ந்த ஒத்த மருந்து, அதை உட்கொண்ட சில நிமிடங்களிலேயே நோயா ளரின் ஆரோக்கிய நிலையில் முக்கியமான மாறுதல்களை, எல்லா சந்தர்ப்பங்களிலும் ஏற்படுத்துகிறது. முக்கியமாக, உடலின் வெளிப் புறத்தே நோய் உள்ள பகுதியிலும் மாறுதலை உண்டாக்குகிறது. இம் மாற்றத்தின் விளைவாக உடலின் வெளிப்புறத்தே இருந்த சரும நோய் மறைந்து விட்டால், உடல் முழுவதுமே ஆரோக்கிய நிலையைத் திரும்பப் பெறுகிறது. மேற்பூச்சு மருந்து ஏதும் அவசியம் இல்லை. ஆனால் உள்ளுக்குக் கொடுக்கப்படும் மருந்து, நோயின் மொத்தக் குறிகளை ஆதாரமாகக் கொண்டு, ஹோமியோபதி கோட்பாடுகளுக்கு இணங்க தேர்ந்தெடுக்கப்பட்டதாய் இருக்க வேண்டும்.

மணிமொழி - 192

நோயாளருக்கு ஏற்பட்ட நோயின் தன் மையை மருத்துவர் ஆய்வு செய்யும் போது, சரும நோயின் உண்மைத் தன்மையைக் கவனிப்பதுடன், நோயாளரின் பொது ஆரோக்கிய நிலையில் ஏற்பட்டுள்ள எல்லா மாறுதல்களையும், வேதனைகளையும், குறிகளையும் கூர்ந்துக் கவனித்து, ஒத்த மருந்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதுதான் உண்மையான ஹோமியோபதிச் சிகிச்சையாகும்.

மணிமொழி - 193

 ஹோமியோபதி முறைப்படி, தேர்ந்தெடுத்த ஒத்த மருந்தை உட்கொண்ட உடனேயே (நோய் சமீபத்தில் தோன்றியதென்றால், ஒரு வேளை மருந்திலேயே) அந்த சரும நோயும், அதைச் சார்ந்த பிற நோய்க் குறிகளும் ஒரே நேரத்தில் குணமா கிவிடும்.

மணிமொழி - 194

 சரும நோய் சமீபத்தில் தோன்றியதாயினும் சரி அல்லது நீண்ட காலமாய் இருந்து வருவதாயினும் சரி, மேல் பூச்சு மருந்துகள் எதுவும் தடவ வேண்டியதில்லை. நோய்க்கு ஏற்றதாய், உள்ளுக்கு சாப்பிடுவதாய் இருந்தாலே போதும். அக்கி, படை, சிரங்கு போன்ற திடீர் சரும நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும்போது, நோயாளரின் உடலில் உள்ளும், புறமும் தென்படும் நோய்க் குறிகளுக்கு ஏற்ற ஒத்த ஹோமியோ மருந்தைத் தேர்ந்தெடுத்து உள்ளுக்குக் கொடுத்தாலே போதும். நோய் குணமாகிவிடும். ஆனால், சில சந்தர்ப்பங்களில் இம்மருந்தால் சரும நோய் முற்றிலும் நீக்கப் படாமல் இருந்தால், அந்நிலைக்கு நோயாளரின் உடலில் குடியிருக்கும் சோரா நச்சு தான் காரணமாகும். உடலின் உட்புறத்தே உறங்கிக் கிடந்த சோரா நச்சு இப்பொழுது விழித்துக் கொண்டது தான் காரணம் என்பதை மருத்துவர் உணர வேண்டும்.

மணிமொழி - 195

 சோரா நச்சால் பாதிக்கப்பட்ட சரும நோயாளருக்கு சிகிச்சை அளிக்கும்போது, நோயாளரிடம் அச்சமயத்திலும், அதற்கு முன்னரும் காணப்பட்ட நோய்க் குறிகளை அடிப்படையாய் வைத்து, ஒத்த சோரா நச்சு எதிர்ப்பு மருந்தைத் தேர்ந்தெடுத்துக் கொடுக்க வேண்டும். நாட்பட்ட சரும நோய்களில், நோய்க் குறிகளுக்கு ஒத்த சோரா நச்சு எதிர்ப்பு மருந்தைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்தாலே போதும், சருமநோய்கள் குணமாகி விடும்.

மணிமொழி - 196

 ஹோமியோபதி கோட்பாடுகளுக்கு இணங்க, சரும நோயின் மொத்தக் குறிகளுக்கு ஏற்ற ஒத்த மருந்தை உள்ளுக்குச் சாப்பிடுவதுடன், நோயுள்ள இடத்தின் மேலேயும் அம்மருந்தைத் தடவி வந்தால், நோய் அதிவிரைவில் குணமாகி விடும் என்பது மிகச் சரியே!

மணிமொழி - 197

 ஆனால், சோரா நச்சுவால் ஏற்பட்ட சரும நோய்களைத் தவிர, பிற இரண்டு நச்சுக்களான சைக்கோசிஸ் நச்சு மற்றும் சிபிலிஸ் நச்சு ஆகியவற்றால் ஏற்பட்ட சரும நோய்களில், இவ்விதம் மருந்தை நோயுள்ள இடத்தின் மீது தடவுவது கூடாது. ஏனெனில் அப்படித் தடவுவதால் நோயின் முக்கியக் குறியான சருமக் கோளாறு, உள்ளிருக்கும் நோய் குணமடைவதற்கு முன்பாகவே மறைந்து விடுகிறது. இதனால் நோய் முழுவதும் குணமாகி விட்டது என்று மருத்துவர் நினைத்து ஏமாறுவதற்கு இடமுண்டாகிறது.

மணிமொழி - 198

 இக்காரணத்தினாலேயே, நச்சுக்களின் காரணமாகத் தோன்றும் நாட்பட்ட சரும நோய்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒத்த மருந்தை உள்ளுக்குச் சாப்பிட்டால் மட்டுமே போதும். ஒரு போதும் அதை வெளிப்பூச்சுக்காகப் பயன்படுத்தக்கூடாது. ஏனெனில், அப்படிச் செய்வதால் வெளிப்புறத்தில தென்படும் சருமக் கோளாறு மட்டுமே மறைந்து அரை குறை நலமே ஏற்படுகிறது. முக்கிய நோய்க் குறிகள் நலமடைவதில்லை. இதனால் நலமடைவைத் தெளிவாகவும், உண்மையாகவும் உணர முடிவதில்லை. மருத்துவரால் அரை குறைச் சிகிச்சை மட்டுமே அளிக்க முடிகிறது.

மணிமொழி - 199

 இதே போன்ற ஒரு நிலை தான் அலோபதி மருத்துவத்தால் நோய் உள்ளுக்கு அமுக்கப்பட்ட நோயாளர், ஹோமியோபதி மருத்துவரிடம் சிகிச்சைக்கு வரும்போது ஏற்படுகிறது. அந்நோயாளரின் உண்மை நோய் நிலையை அறிந்து, ஒத்த ஹோமியோ மருந்தைத் தேர்ந்தெடுப்பது என்பது ஹோமியோபதி மருத்துவரால் இயலாத ஒன்றாகி விடுகிறது.

மணிமொழி - 200

சரும நோய் உடலின் வெளிப்புறத்தே மறையாமல் தெரிந்தால் தான் ஹோமியோபதி மருத்துவரால் மொத்தக் குறிகளுக்கேற்ற ஒத்த மருந்தைத் தேர்ந்தெடுக்க இயலும். அதை உள்ளுக்குச் சாப்பிடக் கொடுத்து வரும் காலத்தில், சரும நோய் மறையாமல் இருக்கும் பட்சத்தில் நோய் முற்றிலும் குணமடையவில்லை என்றும், சரும நோய் மறைந்து விட்டால், நோய் முற்றிலும் குணமாகிவிட்டது என்றும் உறுதியாய் தெரிந்துக் கொள்ளலாம்.

மணிமொழி - 201

 மனித உடலின் உயிராற்றல் தனது சக்தியைக் கொண்டு நீக்க இயலாத நாட்பட்ட நோய் ஒன்றினால் நோயாளர் தாக்கப்படும் பொழுது, அந்நோய்ச் சக்தியால் உடலில் முக்கிய உள்ளுறுப்புகள் பாதிக்கப்படாமல், அது உடலின் வெளிப்புறத்தே சரும நோயாக வெளிப்பட வகை செய்கிறது. இதன் காரணமாய் உடலின் உட்புறத்தே ஏற்பட்ட நோய், உடலின் வெளிப்புறத்துக்கு மாற்றப்படுகிறது. வெளிப்புறத் தில் நோய் இருப்பதினால், உட்புற நோய் குணமாவது இல்லை. அதன் கடுமையும் குறை வதில்லை. சில காலத்துக்கு நோய் வளர்ச்சி யடையாமல் இருக்கிறது. வெளிப்புற சரும நோய் என்பது உட்புற நோயின் விரிவாக்கமே. சரும நோய் என்பது உயிராற்றல் சக்தியால் உடலின் முக்கியமில்லாத வெளிப்புறத்துக்கு தள்ளப்பட்ட உட்புற நோயே ஆகும். ஆனால், இந்த வெளிப்புற சரும நோய்த் தோன்றுவதால் உட்புற நோய் குணமடைவதில்லை. மேலும் அதன் கடுமையும் தணிவதில்லை. மாறாக, வெளிப்புற சரும நோய் வளர்ச்சியடைவதால், உட்புற நோயும் வளர்ச்சியடைகிறது. மேலும், உடலின் உட்புறத்தே விழித்துக் கொண்ட சோரா நச்சு அல்லது சைக்கோசிஸ் நச்சு அல்லது சிபிலிஸ் நச்சு ஆகியவற்றை முறியடிக்காதவரை, உட்புற நோய் வளர்ந்துக் கொண்டே இருக்கிறது. இதன் காரணமாய் வெளிப்புற சரும நோயும் வளருகிறது.

மணிமொழி - 202

 சரும நோயை மறையச் செய்ய வெளிப்பூச்சு களிம்புகளைப் பயன்படுத்தி அலோபதி மருத்துவர் சிகிக்சையளித்த பின்பு, உடலின் உட்புறத்தே உள்ள நோய் தொடர்ந்து வளர்ச்சியடைகிறது. இவ்வாறு வெளிப்புற சரும நோய் உடலின் உள்ளே அமுக்கப்பட்டு, அது உடலின் முக்கிய நரம்புகளைத் தாக்குகிறது.

மணிமொழி - 203

உடலின் வெளிப்புற சரும நோயை மறையச் செய்யச் செய்யப்படும் ஒவ்வொரு வெளிப்புறச் சிகிச்சையும் உடலின் உட்புறத்தில் உள்ள நோயைக் குணப்படுத்துவதில்லை. மாறாக, உடலின் உள்ளே உள்ள சோரா நச்சுத் தன்மை யால் உடலின் வெளிப்புறத்தில் தோன்றிய சரும நோயை களிம்புகளைக் கொண்டு மறையச் செய்வது மற்றும் சைக்கோசிஸ் நச்சுத் தன்மையால் பிறப்புறுப்பு மற்றும் ஆசனவாய் ஆகிய இடங்களில் ஏற்படும் சதை வளர்ச்சியை, கத்தியால் வெட்டி நீக்குவது மற்றும் சிபிலிஸ் நச்சுத் தன்மையால் தோன்றிய பறங்கிப் புண்ணை கார மருந்துகளைக் கொண்டு பொசுக்கி விடுவது போன்றவைகளால் உட்புற நோய் குணமடை வதில்லை. இன்று வரை இந்தக் கொடூரமான அலோபதிச் சிகிச்சை முறையே பெரும்பா லோரால் கையாளப்பட்டு வருகிறது. இவ்விதச் சிகிச்சை முறைகளால் நோயாளரின் நோய் உண்மையில் குணமாவதற்குப் பதிலாக வளர்ந்து அவரை மேலும் இன்னலுக்கு ஆட்படுத்தி வருகிறது. இது மனித குலத்திற்கு மருத்துவர்கள் செய்யும் துரோகமாகும். ஆயினும், வெளிப்புறச் சரும நோய்களுக்கு இவை ஒன்றே சிகிச்சை முறை என்று இன்று வரை அலோபதி மருத்துவர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள், மற்றும் தனது மருத்துவ மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்கிறார்கள்.

(மாற்று மருத்துவம் ஜூலை 2010 இதழில் வெளியானது)

Pin It