உலக அளவில் மரணத்திற்கு காரணமான் நோய்களில் பக்கவாதம் என்று அழைக்கப்படும் "ஸ்ட்ரோக்" 2ம் இடத்தை பிடித்திருக்கிறது.!

ஸ்ட்ரோக் (STROKE) என்றால் என்ன?

ரத்தக் குழாய்களின் மூலம் மூளைக்கு எடுத்துச் செல்லப்படும் ஆக்சிஜன் அளவு..(பிளாட்டிலட் அக்ரிகேஷன்) ரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பு காரணமாக தடைபட்டு அதன் காரணமாக ஏற்படும் பிரச்சினையே பக்கவாதம் என்று அழைக்கப் படுகிறது.!

காரணிகள் என்ன?

பொதுவான காரணிகளாக உயர் ரத்த அழுத்தம், அதிக சர்க்கரை, உயர் கொழுப்பு மற்றும் மனஅழுத்தம் (ஸ்ட்ரெஸ்..STRESS) போன்ற மரபு சார்ந்த மற்றும் இயல்பு சார்ந்த பிரச்சினைகளால் மட்டுமன்றி (என்டோஜீனியஸ்..ENDOGENEOUS) மாறிவரும் சமூகநிலைகளால் சிறு வயது முதல் வயதானவர்கள் வரை ( பெரும்பாலும் ஆண்கள்) உள்ள தேவையற்ற பழக்கங்களான தொடர்ந்து மது அருந்துதல், சிகெரெட், புகையிலை..இன்னபிற லாகிரி வஸ்துக்கள் பயன்பாடும் மேற்கூறிய சிக்கல்களை நாள‌டைவில் ஏற்படுத்தி எண்ட் ஆர்கன் டேமேஜ் என்று அழைக்கப்படுவதில் ஒன்றான "மூளையின் செயல்பாடு" பாதிக்கப்படுவதை பக்கவாதம் ஏற்படுத்தும் காரணிகளாக கொள்ளலாம்.!

விளைவுகள்:

பொதுவாக ஒருவருக்கு மேற்கூறிய காரணங்களில் ஏதாவது ஒன்றின் மூலம் பக்கவாதம் ஏற்பட்டால் கை அல்லது கால் செயல்படாமல் போவதையும்(பராலிசிஸ்..PARALYSIS) மூளையின் ஒருபகுதி செயலிழப்பதால் முகம் /வாய் கோணலாவதையும் (பேசியல் பிளஷிங்..FACIAL FLUSHING) ஞாபகசக்தி இழப்பு (மெமரி லாஸ்) மற்றும் பார்த்து புரிந்து கொண்டு செயல்படாமல் போகும் நிலையும் (டிமென்ஷியா..DEMENTIA) ஏற்படுவதை நாம் காண்கிறோம்.!

பக்கவாதம் யாருக்கு ஏற்படும்?

முன்பெல்லாம் 60 வயதுக்கு மேற்பட்டவர்களை பாதித்து வந்த இந்தப் பிரச்சினை.. பல்வேறு காரணிகளால் 15 வயது முதலே ஏற்படும் நிலையினால் (விபத்துக்களால் ஏற்படும் தலைக்காயம்). ஆண்டுதோறும் 60 லட்சம் மக்கள் இறப்பதாக உலக சுகாதார மையத்தின் அறிவிப்புகளும் மருத்துவ நிபுணர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகளும் தெரிவிக்கின்றன!

தீர்வு:

40 வயதிற்கு மேற்பட்டவர்கள் தங்களது ரத்த அழுத்தம், சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவை மருத்துவ நிபுணரின் ஆலோசனைப்படி பரிசோதித்துக் கொண்டு சரிவிகித உணவு, மிதமன உடற்பயிற்சி தேவையற்ற‌ பழக்கவழக்கங்களை கைவிடுதல் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்! தேவை ஏற்பட்டால் நிபுணரின் பரிந்துரைகளின் படி மருந்துகளை சரியான கால அவகாசத்தில் எடுத்துக் கொள்வதன் மூலமும்..சரியான பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாடுகளை பின்பற்றி உயர் ரத்த அழுத்தம், அதிக சர்க்கரை மற்றும் அதிக கொழுப்பு இவற்றை கட்டுப்படுத்தி வைத்து சீரான வாழ்க்கையினை நடத்தலாம்.!

சரிவிகித உணவு மற்றும் பயிற்சிகள்:

1. நாம் அருந்தும் உண‌வில் உள்ள கொழுப்புச்சத்தை குறைக்க வறுத்த உணவுக்கு பதிலாக வேகவைக்கப்பட்ட உணவுகளையும், நார்ச்சத்து மிக்க பழங்களையும் ( சர்க்கரை நோயாளிகள் பழங்கள் உட்கொள்வதில் மருத்துவ ஆலோசனை தேவை) எடுத்துக் கொள்வதுடன் உணவில் தாவர எண்ணைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.!

2. மிதமான நடைப் பயிற்சியினை (பிரிஸ்க் வாக்..) தினமும் 30 நிமிடம்..முடிந்தால்.. காலை / மாலை இரு வேளைகளிலும் (அல்லது ஏதாவது ஒரு வேளையிலாவது) மேற்கொள்ள வேண்டும்.!

இவை நம் உடலினை சீரான கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும்.!

வாதநோயின் அறிகுறிகள் தெரிந்தால் கைவைத்தியம் ஏதும் பார்க்கமல் அருகிலுள்ள அரசு தலைமை மருத்துமனையினையோ (இதற்கென தனிப் பிரிவு ஒவ்வொரு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையிலும் இயங்குகிறது) அல்லது மருத்துவ நிபுணரையோ உடனே அணுகி சிகிச்சை பெறுவது சாலச் சிறந்தது!

Pin It