நிற்கவோ, நடக்கவோ தெரியாத குழந்தைகளை காலில் சாய்வாக படுக்க வைத்து, தலையை பிடித்துக்கொண்டு வெதுவெதுப்பான நீரை முதுகில் அதிகமாக படும்படி மெதுவாக ஊற்ற வேண்டும். தண்ணீர் மூக்கினுள் சென்றுவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சோப் தேய்க்காமல் சோப் நீரில் டர்கி துண்டால் ‘டவல் பாத்’ செய்தாலே போதும். மசாஜ் செய்வது போல குழந்தையை அமுக்குவது நல்லதல்ல. அப்படிச் செய்தால் உடல் வலியால் குழந்தை அடித்துப் போட்டது போல் தூங்கும். அதிரடியாக குளிக்க வைப்பதால் மூக்கினுள் தண்ணீர் போய் மூச்சுத்திணறல் ஏறபடக்கூடும். அது நிமோனியா நோய் வரைக் கொண்டு செல்லும் அபாயமும் உண்டு. குழந்தையை தாயே குளிக்க வைப்பது நல்லது. தாய்க்குத் தான் தெரியும் குழந்தையின் விருப்பும் வெறுப்பும்.

Pin It