முதல் காரணமாக இன்ஃபெக்ஷன் இருக்கலாம். இது கிருமிகளால் ஏற்படக்கூடும். சுகாதாரமற்ற உள்ளாடைகள், மாதவிலக்கு சமயங்களில் ஈரமான நாப்கினை மாற்றாமல் வெகுநேரம் வைத்திருத்தல் போன்றவற்றால் ஏற்படக்கூடும்.

இரண்டாவது காரணம் – எண்டோமெட்ரியோஸஸ். அதாவது, உள்சுவர் வெளி வளர்ச்சி. கர்ப்பப்பையின் வெளியே இருக்கக்கூடிய சுவர் போன்ற பகுதி சிலருக்குக் கர்ப்பப்பையின் வெளியே இருக்கும். மாதவிடாய் சமயங்களில் ஏற்படும் ரத்தப்போக்கு வெளியேற வழி இல்லாமல் அங்கு தேங்கி, வலி ஏற்படுத்தும். எரிச்சல், நமைச்சல் போன்ற தொல்லைகளும் இருக்கும். அது மாதவிடாய் முடிந்த பின்னரும் கூட நீடிக்கும். இது சரிசெய்யக்கூடிய பிரச்சனைதான். நல்ல மருத்துவரை அணுகி ஆலோசிப்பது நல்லது.

Pin It