நரம்பு உயிர்மங்களால் (never cells) அல்லது நரம்பு இழைமங்களால் (neurons) ஆன மூளை ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் அதிலுள்ள உயிர்மங்கள் செயலிழக்க நேரும்போது, நலிவுறத் தொடங்கும் அறிகுறி காட்டும்.

வளர்ந்த முழு மனிதனுக்குப் பிறக்கும்போது இருந்ததை விட அதிகமாக நரம்பு உயிர்மங்கள் இருப்பதில்லை. எலும்பு, தோல் உயிர்மங்கள் பெருக்கப்படுகிறது போல உடல் வளர வளர நரம்பு உயிர்மங்கள் பெருக்கப்படுகின்றன. மாறாக மனிதன் வளர வளர இந்த உயிர்மங்கள் குறைவை நோக்கியே செல்லும். ஏனெனில் பழுதடைந்த உயிர்மங்களுக்குப் பதிலாக வேறு உயிர்மங்கள் பெறப்படுவதில்லை.

நான்கில் ஒரு பங்கு நரம்பு உயிர்மங்கள், அறுபது அல்லது எண்பது வயதாகும்போது இறந்து விடுகின்றன. மூப்புடைய சிலருக்கு நினைவுக் குறைவும் செவிட்டுத் தன்மையும் ஏற்படுவதற்கு இதுவே காரணம். இருந்தாலும் சிலருக்கு மூப்படைந்தாலும் வினைத்திறனையும் ஆற்றலையும் தம்மிடம் தக்க வைத்துக் கொள்ளும் மேலாண்மையால், நினைவாற்றலும் கேட்கும் திறனும் குன்றுவதில்லை. இன்றைய புதிய உத்திகள் அறிவியலாளர்களுக்கு மூளையின் செய்கடமைகளை மேலும் அறிய எளிமைப்படுத்தியிருப்பினும் இன்னும் கண்டுபிடிக்க வேண்டியவை எவ்வளவோ உள்ளன.

Pin It