மனிதனை இயற்கையின் ஓர் ஒப்பற்ற படைப்பு எனலாம். மனித உடல் தன்னைத்தானே சரி செய்து கொள்ளும் தன்மையும், நோய்களைத் தானே குணமாக்கிக் கொள்ளும் சிறப்பும் கொண்டது. நம் உடலில் உள்ள ஓர் அற்புதமான ஜீவசக்தி எல்லாச் செயல்பாடுகளையும் இம்மி தவறாத கணிப்புடன் இயங்கச் செய்து உடலை எப்போதும் சமநிலையில் வைத்திருக்கிறது. இந்த ஜீவசக்தி நம் உடலின் சிறந்த ஒரு பாதுகாப்பு அரணாகவும், நோயை எதிர்த்துப் போரிடும் பாதுகாவலனாகவும் திகழ்கிறது. இதற்குச் சில எடுத்துக்காட்டுகளைப் பார்போம்.

நமது கண்ணில் தூசி விழுந்து விடுகிறது. உடனே கண்ணில் நீர் சுரக்க ஆரம்பித்து அந்த தூசி வெளியேறி விடுகிறது. அளவுக்கு அதிகமாகவோ, உடலுக்குத் தேவையற்ற ஒன்றையோ விழுங்கி விடுகிறோம். உடலின் பாதுகாவலனான இந்த ஜீவசக்தி உடனே செயல்பட்டு குமட்டலையும், வாந்தியையும் உண்டாக்கி, தீங்கு விளைவிக்கக் கூடிய உணவுப் பொருட்களை வெளியேற்றி விடுகிறது.

தவறான உணவு முறைகளாலும், பழக்க வழக்கங்களினாலும் இந்த ஜீவசக்தி செயலிழந்து போகும் தன்மையுடையது. உடலின் ஒரே பாதுகாப்பு அரண் செயலிழந்து விடுவதால் பல நோய்கள் உடலில் குடிபுக ஆரம்பிக்கின்றன. ஆகவே இந்த ஜீவசக்தியின் வலு விழந்த தன்மையே நோயாகிறது. இதற்கு மூலகாரணம் உடலில் இருந்து வெளியேறாது தேங்கிக்கிடக்கும் கழிவுப் பொருட்களும் அதனால் உருவாகிய நச்சுப் பொருட்களுமாகும்.

இந்தத் தேவையற்ற கழிவுகளின் தன்மை யைப் பொறுத்தும், அவைதேங்கி நிற்கும் உறுப்பைப் பொறுத்தும் நோயின் தன்மை மாறுகிறது. நச்சுப் பொருட்கள் முழங்கால் கணுக்கால் போன்ற இடங்களில் தேங்கினால் அது கீல்வாதம் எனப்படுகிறது. அடிவயிற்றுப் பகுதியில் கழிவு நீர் அதிகமாகச் சேருமாயின்அது மகோதரம் என்னும் பெருவயிறு நோயாகிறது. நுரையீரலில் சளி மற்றும் நீர் அதிகமானால், அது இருமலாகவோ, இளைப்பு நோயாகவோ உருவாகிறது. இவ்வாறு உடலின் பல பாகங்களில் தேங்கிக்கிடக்கும் கழிவு மற்றும் நச்சுப் பொருட் களை வெளியேற்றி விட்டால், ஜீவசக்தி வலுப் பெற்று உடல் நலம் பெறுகிறது.

நோய்க்குக் காரணம் உடலில் தேங்கி யிருக்கும் தேவையற்ற கழிவுகளும் நச்சுப் பொருளுமே காரணமென்றால் நுண்கிருமிகளால் தான் நோய்கள் தோன்றுகின்றன என்றும் அவற்றை அழித்தால்தான் நோய்கள் குணமாகும் என்று அறிவியலாளர் கூறுகின்றனரே. இது எவ்வாறு சாத்தியமாகும்? இதுவொரு நியாயமான சந்தேகம். எத்தனையோ வகையான நுண்கிருமிகள் (வைரஸ்) நம் உடலுக்கு உள்ளும் வெளியிலும் காற்றிலும் நீரிலும், ஏன் இந்தப் பூமி எங்கும் நிறைந்திருக்கிறது. எந்தப் பக்கம் திரும்பினாலும் கிருமிகள்தான். காற்று மண்டலம் முழுவதும் நுண்கிருமிகள்தான். இது முற்றிலும் உண்மைதான். ஆனால் இவைகள் தான் நோய்களுக்குக் காரணம் என்று சொல்வதுதான் தவறு. அது எப்படி என்று பார்ப்போம்.

நாம் ஒரு நாளைக்கு 21,000 தடவைகள் நுண்கிருமிகள் உள்ள காற்றைத்தான் சுவாசித்துக் கொண்டிருக்கிறோம். அப்படியானால் நாம் எல்லோரும் அல்லவா நோய்வாய்ப்பட வேண்டும்? இல்லையே. அது ஏன்? ஏனெனில் நுண்கிருமிகள் நோய்களை உண்டாக்கும் காரணிகள் அல்ல. அதுமட்டுமல்ல, பல மருத்துவ நிபுணர்கள் தங்களின் ஆய்வின் மூலம் நோய்களுக்கு மூலகாரணம் நுண்கிருமிகள் என்பது தவறு என்று நிரூபித்தும் உள்ளனர். டாக்டர். வாட்கின்ஸ் என்பவர் இளைப்பு நோய் (டி.பி.) பற்றி பல ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து இரத்தத்தின் மூலம் நோய் அறிதல் என்ற ஓர் ஆய்வு நூலை வெளியிட்டார். அதில் நோய் தோன்றுவதற்கு முன் நுண்கிருமிகள் காணப்படும் என்ற கூற்றுக்கு ஆதாரமே இல்லை என்று அடித்துக் கூறுகிறார். ஜான்ஸம் ரேசர் என்பவர் கனடாவில் புகழ்பெற்ற மருத்துவர். இவர் நுண்கிருமிகள் நோய்களுக்குக் காரணமா? என்ற ஓர் ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டுள்ளார்.  அதில் நோய் தோன்றிய பின்புதான் கிருமிகள் தோன்ற ஆரம்பிக்கின்றன என்பதை ஆய்வுப்பூர்வமாக நிரூபித்துள்ளார்.

1941ல் ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளரான டாக்டர் ஹண்டர் என்பவரும் மற்றும் சில நிபுணர்களும் சேர்ந்து நுண்கிருமிகள் நோய்க்குக் காரணம் அல்ல என்பதை நேரடியான சோதனைகள் மூலம் நிரூபித்துக்காட்டியுள்ளனர். டிப்தீரியா என்பது தொண்டையைப் பாதித்து, அதன்பின் உயிரையே குடிக்கும் ஒரு கொடிய நோய். இந்த நோயில் காணப்படும் கிருமிகளை ஹிண்டர் தனிமைப்படுத்தி வளர்த்தார். இலட்சக்கணக்கான இந்தக் கிருமி நீர், பால், உணவு ஆகியவற்றில் கலந்து ஆரோக்கியமான பலருக்கு உண்ணக் கொடுத்து வந்தார். ஆனால் ஒருவர்கூட டிப்தீரியா நோயினால் பாதிக்கப்படவில்லை. அவர் செய்த மற்றொரு ஆராய்ச்சி இன்னும் புதுமையானது. இதே கிருமிகளைச் சிலருடைய உள்நாக்கு, தொண்டை மற்றும் மூக்கின் உட்பாகம் ஆகியவற்றில் நேராகவே தடவி விட்டார். இப்போதும் எவரும் நோயால் பாதிக்கப்பட வில்லை. நுண்கிருமிகளே நோய்க்கான காரணமென்றால் இந்தச் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட எவராவது பாதிக்கப்பட்டிருக்க வேண்டுமல்லவா?

இன்னொரு ஆய்வு, இதனை நடத்தியவர் வியன்னா பல்கலைக் கழகத்தில் உள்ள மருத்துவப் பேராசிரியர் டாக்டர் பாடின்காஃபர். இவர் இன்னும் ஒரு படி மேலே போய்விட்டார். நுண்கிருமிகள் பற்றிப் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். ஒரு கண்ணாடிக் குவளையில் நீரை ஊற்றினார், பரிசோதனைச் சாலையில் இருந்து கொண்டுவரப்பட்ட இலட்சக்கணக்கான காலராக் கிருமிகளை அந்த நீரில் கலந்தார். மாணவர்கள் எல்லோரும் திகைத்தபடி பார்த்துக் கொண்டிருக்கும் போதே அந்த நீர் முழுவதையும் மடக்மடக்கென குடித்து விட்டார். பல நாட்கள் கடந்த நிலையிலும் அவர் காலராவால் பாதிக்கப்படவில்லை.

இந்தச் சோதனைகள் மூலம் நமக்கு விளங்கு வது என்ன? நுண்கிருமிகள் ஒரு போதும் நோய்கள் உண்டாகக் காரணமாக அமைவ தில்லை. ஓர் ஆரோக்கியமான உடலினுள் அவை வாழ முடிவதில்லை. ஆனால், கழிவு மற்றும் நச்சுப் பொருட்கள் நிறைந்த ஜீவசக்தி வலு இழந்துள்ள - உடம்பினுள் கிருமிகள் பல்கிப் பெருகுகின்றன. ஆகவே, நோய் உண்டாக அடிப்படையான காரணம் உடலினுள் சேர்ந்துள்ள கழிவு மற்றும் நச்சுப் பொருட்களின் தேக்கமே. இதனால் உண்டான விளைவுதான் நுண்கிருமிகள். எனவே, ஒரு நோயைக் குணமாக்க வேண்டுமென்றால், உடம்பில் தேங்கியுள்ள தேவையற்ற கழிவுப் பொருட்களை வெளியேற்றி ஜீவசக்தியை வலுவுள்ளதாக்கவேண்டும். இதை விட்டுவிட்டு அந்தக் கிருமிகளைக் கொல்லக்கூடிய மருந்துகளை விழுங்குவதால் உருப்படியான எந்தப்பயனும் இல்லை. இயற்கை மருத்துவ முறைகளே ஜீவசக்தியை வலுவூட்டும்...

-பேராசிரியர் மரு.எம்.முனுசாமி, M.Sc.,N.D.

(மாற்று மருத்துவம் ஏப்ரல் 2010 இதழில் வெளியான கட்டுரை)

 

Pin It