நவீன மருத்துவம் ஆரோக்கியத்திற்கே எதிரானது. மனித நலனுக்கு சேவை செய்வதற்காக அது உருவாக்கப்படவில்லை. மாறாக, பெரிய நிறுவனமாக உருவாகியிருக்கும் தனக்கு சேவை செய்வது மட்டுமே அதன் நோக்கம். நவீன மருத்துவம் குணப்படுத்துவதைவிட அதிகமானவர்களை நோயாளியாக்குகிறது என்கிறார் ஆஸ்திரிய தத்துவஞானியும் ரோமன் கத்தோலிக்கப் பாதிரியாருமான இவான் இல்லிச். இவரே அமெரிக்காவில் இவ்வாறு சொல்லியிருந்தால் இவர் மேல் கார் ஏற்றிக் கொல்ல முயற்சிகள் செய்யப்பட்டிருக்கலாம். மருந்து கம்பெனிகளின் செல்வாக்கு அந்த அளவுக்கு அமெரிக்காவையும் மேற்குலகையும் தனது பிடியில் வைத்திருக்கிறது.

1975ல் வெளியிட்ட மெடிக்கல் நெமசிஸ் (மருத்துவத்தின் ஊழ்வினை) என்ற புத்தகம் மூலமாக முதல் முதலில் நவீன மருத்துவத்தின் பக்க விளைவுகளைப் பற்றித் தீவிரமாக மக்களிடையே பேசியவர் இவர். 2002ல் அவர் இறந்துவிட்டாலும் அலோபதி மருத்துவம் கட்டவிழ்த்தவிடும் ஊழிக்கால கிருமிகள் அவர் சொன்ன கருத்துக்கு உண்மை சேர்கின்றன. அண்மையில் அம்பலமான என்.டி.எம்-1 சூப்பர் பக் என்ற எந்த நோய் எதிர்ப்பு மருந்துக்கும் கட்டுப்படாத கிருமி இருப்பதைக் கண்டுபிடித்திருப்பதாக சில நவீன மருத்துவ ஆய்வாளர்கள் பெருமையுடன் கூறியிருக்கிறார்கள்.

              அலோபாதி அல்லாத மருத்துவத்தில் நல்ல குணம் கிடைத்திருக்கிறது என்று ஒரு அலோபதி மருத்துவரிடம் கூறும்போது ஏதோ செய்வினை, பில்லி, சூனியத்தைப் பற்றிப் பேசுவது போல அவர்களின் முகம் கோணிவிடுகிறது. உடனடியாக அந்த அலோபதி மருத்துவரிடம் உருவாகும் எதிர்வினை, அமெரிக்க முன்னாள் அதிபர் புஷ்ஷின் You are with us or against us மாதிரியான ஒரு அகங்காரமான ஆதிக்க வெறி கொண்ட அணுகுமுறை தான். இதில் அந்த தனிப்பட்ட மருத்துவரைக் குறை சொல்லிப் பயனில்லை. இன்று எம்.பி.பி.எஸ்., எம்.டி., எஃப்.ஆர். சி.எஸ்., என்றெல்லாம் எழுத்துக்களை போட்டுக் கொள்ளும் வர்க்கம் அவ்வாறு எதிர்வினையாற்றவே தயார் செய்யப்பட்டிருக்கிறது. இந்த மனப்பான்மை விட்டு வெளியே வருவதற்குத் திறந்த மனம் வேண்டும். பெரும்பாலான மருத்துவர்களிடம் அது இருப்பதில்லை.

வரலாறு முழுக்கவே சக மருத்துவ முறைகளோடு பகைமை உணர்வுடன் வளர்க்கப்பட்ட மருத்துவம் அலோபதி. தனக்கு முன்பே பிறந்த தன்னை விட செல்வாக்குடனிருந்த ஹோமியோபதியைப் போர் செய்து ஓரங்கட்டிய அலோபதி, தான் புகுந்த மண்ணில் எல்லாம் அங்குள்ள பூர்வீக மருத்துவ முறைகளை மாந்த்ரீகத்திற்கு நிகராகத்தான் மதிக்கிறது; இந்தியாவில் ஆயுர்வேதத்தையும் சித்த மருத்துவத்தையும் நடத்துவது போல. அலோபதி மருத்துவம் உருவாக்கும் மத நிறுவன விசுவாசத்திலிருந்து வெளியே வந்தவர்கள்தான் அலோபதிக்கு எதிரான இயக்கத்திற்கு முக்கிய பங்களிக்கிறார்கள் என்பது, அது எந்த அளவுக்கு ஒரு மோசமான அரசியல் இயக்கமாக இருக்கிறது என்பதற்கு சாட்சி.      

       நவீன மருத்துவம் என்று இன்று அழைக்கப்படுகிற சிகிச்சை முறைக்கு அதன் தொடக்க காலத்தில் பயன்படுத்தப்பட்ட பெயர் அலோபதி. ஆனால் விவரமறிந்த அலோபதி மருத்துவர்கள் யாரும் அதை அந்தப் பெயரிட்டு அழைப்பதை ஏற்க மாட்டார்கள். அதன் அர்த்தம் அப்படி. ‘அலோ’ என்றால் ‘எதிர்’ என்று அர்த்தம். ‘பதி’ என்றால் ‘நோய்’ என்று அர்த்தம். அதாவது ஒரு நோய்க்கு நேர் எதிரான ஒன்றைப் பயன்படுத்தி சிகிச்சை தருவது. தலை வலிக்கிறதா? அதைவிட கடுமையான வலியை ஏற்படுத்துகிற ஒரு களிம்பைத் தடவினால் முடிந்துவிட்டது. மலச்சிக்கல் ஏற்படுகிறதா? ஜீரணத்தில் ஏற்படும் பிரச்சினை பற்றியெல்லாம் கவலை இல்லை. நேரடியாக குதம் வழியாக மலமிழக்கியைப் புகுத்தி விட்டால் விஷயம் முடிந்துவிட்டது. உருவான காலத்தில் அலோபதி கொடூரமான வழிமுறைகளில் சிகிச்சை தரும் முறையாகவே அறியப்பட்டது. ஹோமியோபதி அதற்கு நேர் எதிரானது.  

       Principe of similars என்று ஹோமியோபதியை அழைக்கிறார்கள். நோயை உண்டாக்கும் கிருமியேதான் அதற்கு மருந்தும்கூட. எந்தக் கிருமி நோயை ஏற்படுத்துகிறதோ அதே கிருமியை மிக நுண்ணிய அளவில் உடலுக்குள் அனுப்புகிறார்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை வீரியம் குறைவாக உள்ள கிருமிகள் தட்டி எழுப்புகிறது. இயற்கையாக, பக்கவிளைவுகள் இல்லாமல் நோயை வேரோடு ஒழிக்க அல்லது நோய் வராமலே தடுக்க இது முடிகிறது. தத்துவார்த்தமாகப் பார்த்தால் அலோபதியும் ஹோமியோபதியும் நேர் எதிரானவை. அதனால் அவற்றிற்கிடையிலான போரும் தவிர்க்க முடியாததாக மாறியது.

டாக்டர் சாமுவேல் ஹானேமன் 1790களில் ஹோமியோபதியை ஜெர்மனியில் உருவாக்குகிறார். தனது மருத்துவத்தில் உடலுக்குத் தரும் அதே முக்கியத்துவத்தை மனதிற்கும் கொடுக்கிறார் அவர். தனிப்பட்ட முறையில் அவர் அந்த மருத்துவத்தை எந்த வகையிலும் ஆன்மீகம் அல்லது மதத்துடன் தொடர்புபடுத்தியதாகத் தெரியவில்லை. 1800களுக்கும் 1900களுக்கும் நடுவில் உருவாகிறது அலோபதி. 1844ல் அமெரிக்கன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோமியோபதி அமைக்கப்பட்டு, திட்டமிட்ட வளர்ச்சியை அடைய நினைக்கிறது. அதற்கு எதிராக 1848ல் அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேஷன் அமைக்கப்படுகிறது (அலோபதி மருத்துவர்களால்). இதே காலகட்டத்தில் நோய் எதிர்ப்பு மருந்துகள் (ஆன்டிபயாடிக்ஸ்) கண்டுபிடிக்கப்படுகின்றன. இதனால் வேகமான வளர்ச்சியடையும் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் விரைவிலேயே அலோபதி மருத்துவத்தை தங்களுடைய கருவியாக சுவீகரிக்கின்றன. ஹோமியோபதியை ஒழிக்க இது உதவுவதால் அலோபதி மருத்துவமும் இந்தக் கூட்டுக்குத் தயாராகவே இருந்தது.

       இந்த சதிக்கோட்பாட்டை நான் நம்புவதில்லை என்று சொல்பவர்களுக்காக ஒரு தகவல். அலோபதி மருத்துவர்கள் அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேஷனை அமைக்கும்போது தங்கள் உறுப்பினர்கள் யாரும் ஹோமியோபதி மருத்துவத்துடனோ, ஹோமியோபதி மருத்துவர்களுடனோ எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என்பதை ஒரு விதியாக வைத்திருந்தார்கள். அதாவது, தங்களுடைய மதம் மட்டுமே உண்மையானது என்ற தட்டையான பார்வை கொண்ட ஒரு மத நிறுவனம் என்ன செய்யுமோ அதைச் செய்தார்கள். பிற்காலத்தில் அலோபதி மருத்துவர்கள் உருவாக்கிய சங்கம், மருந்துக் கம்பெனிகளின் செல்வாக்குடன் அமெரிக்காவில் அதிகார மையமாக மாறியபோது ஹோமியோபதி மருத்துவம் அறிவியல்பூர்வமற்றது என்ற பிம்பம் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்டது. அலோபதி மருத்துவர்களும் அவர்களின் தொடர்ச்சியாக வந்திருக்கும் மருத்துவ ஆய்வு உலகமும் இன்றளவில்கூட ஹோமியோபதியை ஒரு அறிவியல்பூர்வமான மருத்துவமாக அங்கீகரிப்பதில்லை.

அலோபதி தன்னைப் பகுத்தறிவுபூர்வமான மருத்துவ முறை என்று கூறிக் கொண்டது. தன்னை அறிவியல்பூர்வமான சிகிச்சை என்றது. தன்னைத் தவிர அத்தனையும் அறிவியல் இல்லை என்றும் கூறி வருகிறது. ஹோமியோபதியை அனுபவ சிகிச்சை என்று அழைக்கலாம். ஒரு மருந்து நோயாளியிடம் எவ்வாறு எதிர்வினையாற்றுகிறது என்பதை ஆராய்ந்தறிவது அறிவியல்பூர்வமான வழிமுறை தான். ஆனால் மருந்து நிறுவனங்களின் சக்தியோடு புதிய தொழில்நுட்பத்தின் வரவையும் அலோபதி தனதாகக் கொண்டு மருத்துவத்திதற்கு ஏகபோக உரிமை கொண்டாட ஆரம்பித்தபோது அத்தகைய தர்க்கங்கள் எடுபடவில்லை. அந்தப் போரில் தோற்றுப்போன ஹோமியோபதி ஓரங்கட்டப்பட்டது. 1920களுக்குப் பிறகு மருத்துவத்தில் புகுந்த தொழில்நுட்பத்தின் உபயோகம் அலோபதியின் தனி ஆதிக்கத்தை முழுமையடையச் செய்தது. மேற்குலத்தின் ஒரே மருத்துவ முறை அலோபதி மட்டுமே என்பது போன்ற பிம்பம் உருவாக்கப்ட்டது.

       நானாவித சக்திகளுடனான கூட்டு மூலம் ஹோமியோபதியின் ஆதிக்கத்தை அலோபதியால் ஒழிக்க முடிந்ததே தவிர, அந்த மருத்துவத்தின் தாக்கத்தையோ சாரத்தையோ அழிக்க முடியவில்லை. கடந்த இரு நூற்றாண்டுகளாக கொத்துக் கொத்தாக மனித உயிர்களைப் பறித்து வந்த கொள்ளை நோய்களை ஒழிப்பதற்கு, அறிகுறிகளை மட்டுமே ஒழிக்கும் அலோபதி கிஞ்சித்தும் பயன்படவில்லை. போலியோ முதல் அம்மை நோய் வரை உலகின் மிகக் கொடிய நோய்களுக்கு நிரந்தர தீர்வைக் கொடுக்க அத்தனை தடுப்பூசிகளும் ஹோமியோபதி மருத்துவ தத்துவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவைதான்: நோய்கிருமியையே நோய்க்கு மருந்தாகப் பயன்படுத்துவது (தனி நபர்களின் தேவைக்கேற்ப மருந்தின் வீரியத்தை மாற்றியமைக்க வேண்டும் என்ற ஹோமியோபதியின் மற்றொரு விதியையும் பின்பற்றியிருந்தால் ஏராளமான பக்க விளைவுகளையும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் தவிர்த்திருக்கலாம்). நோய் எதிர்ப்பு மருந்துகளைத் தங்கள் பிரம்மாஸ்திரமாகக் கொண்ட அலோபதியின் மடத்தனம் இன்று சூப்பர் பக் வரை கொண்டு வந்து விட்டிருக்கிறது.

மனிதர்கள் புதிய ஆன்டிபயாடிக் தயாரிக்கும் வேகத்தைவிட அந்தக் கிருமிகளின் உருமாற்றம் வேகமாக நிகழ்கிறது (அரை மணி நேரத்தில் கூட ஒரு கிருமியால் தன்னை ஆன்டி பயாடிக்கைத் தாக்குபிடிப்பதாக மாற முடியுமாம்). இப்போது புது தில்லியின் பெயரைத் தாங்கிய என்.டி.எம்-1 என்ற சூப்பர்பக் மூலம் இந்தியாவுக்கான மருத்துவச் சுற்றுலாவை ஒழித்துக் கட்டுகிறார்களோ இல்லையோ, நோய் எதிர்ப்பு மருந்துகளை உருவாக்கும் தொழிலை ஒழித்துக் கட்ட வேண்டி வரும் போலிருக்கிறது. கிருமி தங்களை இவ்வளவு வேகமாக நோய் எதிர்ப்பு மருந்தைத் தாக்குப் பிடிப்பதாக மாறும்போது பல ஆயிரம் கோடி ரூபாயைக் கொட்டி ஆன்டிபயாடிக் மருந்துகளைத் தயாரிப்பதும் அதற்காக மேலும் பல ஆயிரம் கோடி செலவு செய்து ஆராய்ச்சிகள் நடத்திக் கொண்டிருப்பது வீண் வேலை என்று அலோபதி மருத்துவ வட்டாரத்திலேயே ஒரு தரப்பினர் கருதத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால் இத்தனை ஆயிரம் கோடி ரூபாயின் மீது அமர்ந்திருக்கும் மருந்து கம்பெனி மாஃபியா அவ்வளவு எளிதில் இந்த உண்மை வெல்ல அனுமதிக்காது.

       200 வருட அலோபதி-ஹோமியோபதியின் போரைத் திரும்பிப் பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது. மிகவும் பலவீனமான மருத்துவ தத்துவத்தைக் கொண்ட ஒரு அமைப்பு, மிகவும் வலிமையான தத்துவார்த்த பின்புலத்தை ஹோமியோபதியைத் தோற்கடித்திருக்கிறது. இந்த மருத்துவங்களைவிட பழமையான இந்தியாவின் ஆயுர்வேதமும், சித்த மருத்துவமும் கூட மருத்துவமும்கூட அதனால் தோற்கடிக்கப்பட்டன. அலோபதி வெறுமனே அறிகுறிகளையே சரி செய்கிறது என்பது எல்லோராலும் பேசப்படும் ஒன்றுதான். அதுபோக, நோயின் உடல்ரீதியான அம்சத்திற்கு மட்டுமே அலோபதி முக்கியத்துவம் தருகிறது. உளவியலுக்கும் உடலின் இயக்கத்திற்கும் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த தொடர்பை முற்றிலும் நிராகரிக்கிறது. ஒவ்வொரு தனி நபரும் வேறுபாடுகள் கொண்டவர் என்பதால் ஒவ்வொருவருக்குமான சிகிச்சை தனித்தன்மை வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்பதையும் அலோபதி நிராகரிக்கிறது. மாறாக, அனைவருக்குமான பொதுவான அளவு ஒன்றை நிர்ணயம் செய்வதன் தொடர் விளைவாக வேதிப்பொருட்களின் அதீத பிரயோகத்தால் நோயைவிட அதிகமான பாதிப்புகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. ஒரு உறுப்பிற்குப் பாதிப்பு என்றால் அதை மட்டுமே தனித்து சிகிச்சை தருகிற அளவுக்கு அலோபதி மருத்துவம் இயந்திரத்தனமாகச் செயல்படுகிறது.

       1920களில் ஒரு மருத்துவ முறைக்கு ஏகாதிபத்யம் வழங்கியதால் இன்று மனித குலம் நோய்களையும் மரணங்களையும் விலையாகக் கொடுக்கிறது என்கிறார் மருத்துவ வரலாற்றாய்வாளரான ஹாரிஸ் எல்.கொல்டர். அலோபதி ஒரு கோரமான ரத்தச் சரித்திரம் எழுதி வருகிறது. இதய பைபாஸ் ஆபரேஷன் முதல் சிசேரியன் பிரசவம் வரை தேவையில்லாமல் பிரயோகிக்கப்படும் கத்திகள் ஏற்படுத்திய ரணமும் உயிரிழப்பும் நிஜமான போர்களில் ஏற்பட்டதை விட அதிகம். தங்களின் மூட்டுப் பிரச்சினைகளுக்கு வசதியாக ஒரு நல்ல ஆயுர்வேத வைத்தியரை நாடும் அலோபதியின் ஆர்த்தோ டாக்டர்கள் தங்களிடம் காசு கொடுத்து சிகிச்சை பெற வரும் நோயாளிகளுக்கும் மட்டும் சில வருடங்கள் மட்டுமே தாக்குப் பிடிக்கும் செயற்கை மூட்டு மாற்று அறுவை சிகிச்சையைப் பரிந்துரை செய்கிறார்கள்.

அலோபதியின் எழுச்சி உருவான அமெரிக்காவில் அதனால் ஏற்படும் ரணங்களும் இயல்பாகவே அதிகமாக இருக்கின்றன. அமெரிக்காவில் புற்றுநோய்க்குத் தரப்படும் கீமோதெரப்பி சிகிச்சையின் கடுமையே 25 சதவீத நோயாளிகளின் உயிரைப் பறிப்பதாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. வேறு சிகிச்சை முறைகள் மூலம் புற்றுநோயைக் குணப்படுத்துவதாகக் கூறப்படும் மருத்துவர்கள் மீது மருந்து நிறுவன மாஃபியாக்கள் காவல் துறையை ஏவிவிடுவதாக குற்றம் சாட்டப்படுகிறது. அமெரிக்காவில் அலோபதி மருத்துவத்தின் தீங்குகளைப் பிரச்சாரம் செய்யும், ஹோமியோபதி போன்ற மருந்துகளை ஆதரிக்கும் இயக்கத்தைச் சேர்ந்தவர்களைக் கொல்வதற்குக்கூட முயற்சிகள் நடப்பதாகப் புகார்கள் வருகின்றன. 

       அலோபதி மருத்தவத்தின் பயங்கரவதம் மேற்குலகில் ஹோமியோபதியை ஓரங்கட்டியது போல இந்தியாவின் ஆயுர்வேதம், சித்த மருத்துவத்தையும் ஓரங்கட்ட முயற்சி செய்யாமல் இல்லை. ஆயுர்வேததிற்கு வலுவான மருத்துவ சிந்தனை உண்டென்றாலும் அதில் ஆன்மீகத்திற்கும் இடமுண்டு. அதை அறிவியல் பூர்வமற்றது என்று ஒதுக்கித் தள்ள இதுவே வசதியாகப் போனது. கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலமாக இந்தியாவின் பாரம்பரிய மருத்துவம் கிராமங்களில் மட்டுமே உயிர் வாழ்ந்தது. அதுவும்கூட நவீன மருத்துவர்கள் கிராமங்களுக்குச் செல்லத் துணியாததால் ஏற்பட்ட மறைமுகமான நன்மை இது. அலோபதியின் பிரச்சினைகள் இப்போது அம்பலமாகத் தொடங்கிவிட்டதால் நமது மண்ணின் மரபுகள் மறுகண்டுபிடிப்பு செய்யப்படுகின்றன. அலோபதி மருத்துவம் வளர்த்துக் கொண்டிருக்கும் நவீன நோய் பரிசோதனை முறைகளும் தொழில் நுட்பத்தின் உதவியும் அவசியம்தான் என்றாலும் மிக அரிதாகவே பிரயோகிக்கப்பட வேண்டியவை. பணத்திற்காக அதீதமாகப் பிரயோகிக்கப்படுகின்றன. நோயிலிருந்து விடுதலை கிடைப்பதற்குப் பதில் அதைவிட கூடதலான வலி வந்து சேர்கிறது.

நோய் வந்த பிறகு தலையிடுவதுதான் அலோபதியின் ஆதாரமே என்பதால் நோய்கள் இல்லாவிட்டால் அலோபதியும் இல்லை. அதனால் அவர்கள் ஒருபோதும் நோய்களிலிருந்து மனித குலத்திற்கு விடுதலை பெற்றுத் தரப் போவதில்லை. மாறாக, சுயமாகவே செய்துகொள்ளும் அளவுக்குத் தன்னிறைவுக்கான சாத்தியத்தைத் தரும் ஆயுர்வேதத்தைப் போன்ற மருத்துவ முறைகள் நோயால் வருந்துகிறவர்களின் எண்ணிக்கையையே குறைக்கும் வருமுன்காப்பு அம்சத்தைக் கொண்டுள்ளன. மூட்டுப் பிரச்சினைகளுக்கு அக்குபஞ்சர், ஆயுர்வேதம் போன்றவை சிறப்பாக இருக்கிறது என்ற எண்ணம் இருக்கிறது. புற்றுநோய் முற்றும் முன்பே கவனித்தால் செல்களின் கட்டுப்பாடில்லா பெருக்கத்தைப் பாரம்பரிய மருத்துவங்களில் கட்டுப்படுத்த முடியும் என கூறப்படுகிறது. இவற்றையெல்லாம் அறிவியலுக்கு அப்பாற்பட்டவை என்று ஒதுக்கித் தள்ளினால் அது அலோபதியின் சுயநல நோக்கையே காட்டும். இன்றைய நவீன மருத்துவத்தின் சோதனை முறைகளைப் பயன்படுத்தி யோக நிலைகளினால் மூளையில் ஏற்படும் நல்லவிதமான மாற்றங்களைப் பதிவு செய்திருக்கிறார்கள்.

       புற்றுநோய்க்கு கீமோதெரப்பி எடுத்துக் கொண்ட நோயாளிகளுக்கும் இதய நோய்க்கு அறுவை சிகிச்சை பெற்றுக்கொண்ட நோயாளிகளுக்கும் ஆயுர்வேதம் சிகிச்சை தருவதால் வலி மிகுந்த நிவாரண காலகட்டம் வெகுவாகக் குறைவதும் இறப்பு விகிதம் குறைவதும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எனினும் முதற்கட்டமாக அத்தகைய கடுமையான அறுவை சிகிச்சைகள் முடியாத நிலையில் தான் செய்யப்பட்டனவா என்ற கேள்விக்குப் பதில் ஒருபோதும் கிடைப்பதில்லை. நவீன மருத்துவத்தின் கர்ப்பத் தடை மாத்திரைகளும் வாசக்டமிகளும் ஏற்படுத்திய பக்க விளைவுகள் எத்தனையோ மனிதர்களின் இனிமையான வாழ்வை நிரந்தரமாகப் பறித்திருக்கின்றன அல்லது வாழ்கை முழுவதும் ஊனமாக்கியிருக்கின்றன. பத்மாசுரனுக்குக் கொடுத்த வரத்தைப் போல ஒரு பேரழிவை உருவாக்கிவிட்ட பிறகு, அதைக் கட்டுக்குள் கொண்டு வருகிறேன் என்ற பெயரில் உலக நாடுகளின் நிதியை எல்லாம் சாப்பிடுவதுதான் இதன் செயல்முறை. எச்.ஐ.வி, எய்ட்ஸை மையமாக வைத்து உருவான ஒரு பெரிய நிதி சாம்ராஜ்யமே அதற்கு உதாரணம். அக்குபஞ்சரோ, ஹோமியோபதியோ சர்வரோக நிவாரணி என்று இங்கு வாதிடவில்லை. எந்த மருத்துவ முறை, எந்த நோய்க்கு சிறப்பாக வேலை செய்கிறதோ அதைப் பயன்படுத்துவதுதான் மனித குலத்திற்கு நலம் பயக்கும். ஆனால் ஆரோக்கிய சமூகத்தை எட்ட உதவக்கூடிய அத்தகைய திறந்த மனதுடனான அணுகுமுறை ஏற்படுவதற்கு நவீன மருத்துவம் தடையாக இருக்கிறது என்பதுதான் பிரச்சினை.

       “மனிதகுலம் இதுவரை எத்தனையோ பேரழிவுகளிலிருந்து மீண்டு வந்திருக்கிறது. நவீன மருத்துவத்திடமிருந்து மீண்டுவரும்” என்கிறார் ஸ்விட்சர்லாந்தை சேர்ந்த உடல்நலக் கட்டுரையாளரான ஜெர்ஹார் கௌச்சர். ஆனால் மற்ற பேரழிவுகளிலிருந்து மீண்டு வந்ததைவிட இது தான் மிகப் பெரிய சவாலாக இருக்கிறது. ஏனெனில் இதில் மனிதனுக்கு எதிரி இயற்கை அல்ல, சக மனிதன்.

நன்றி : உயிர்மை - செப் 2010.

(மாற்று மருத்துவம் அக்டோபர் 2010 இதழில் வெளியானது)

Pin It