white_cell_359இரத்த வெள்ளை செல்கள் நமது உடலின் இராணுவ வீரர்கள். இவை இரத்த ஓட்டத்தை எதிர்த்து எதிர் நீச்சல் அடிக்கின்றன என்பது தெரிய வந்துள்ளது. சிவ் சுல்மேன் என்பவர் (வைஸ்மேன் இன்ஸ்ட் டிடியூட்) ஆபத்து என்ற கெமிக்கல் சமிக்ஞையை இரத்தத்தில் அறிந்த உடன் சமிக்ஞை வரும் திக்கை நோக்கி இரத்தக் குழாயின் உட்சுவரை பிடித்துக்கொண்டு மரவட்டைப் பூச்சி எப்படி தனது நூறு கால்களால் தரையில் நகருகிறதோ அதுபோல வெள்ளை செல்கள் நகர்கின்றன என்று கூறுகிறார். இதற்காக வெள்ளை செல்களின் வெளிப்புறத்தில் மைக்ரான் அளவுக்கு நீளமான கால்கள் நூற்றுக்கணக்காக முளைக்கின்றன.

இரத்தக் குழாயின் சுவராகிய என்டோதீலிய செல்களின் மீது படிந்துள்ள ஒட்டும் மூலக்கூறுகளைப் பற்றிக் கொண்டு நகர்வதுடன் பிரச்சனைக்குரிய இடத்தை வந்தடைந்ததை அதே கால்களின் மூலம் தொட்டு அறிந்து கொண்டு இரத்தக் குழாயினை விட்டு வெளியேறி பின் நடக்க வேண்டிய காரியங்களை செய்கின்றன. அப்பப்பா எத்தனை தந்திரங்கள்.

- முனைவர் க.மணி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It