may 2015 kanchi 500

பேரணி, பொதுக்கூட்டம் & கலைநிகழ்ச்சிகள்
உழைப்பாளர் நாளான மே 1. 2015. வெள்ளி
பேரணி துவங்கும் இடம் : ரங்கசாமி குளம், காஞ்சிபுரம்
நேரம் : மாலை 4 மணி
பொதுக்கூட்டம் : வணிகர் வீதி, காஞ்சிபுரம்

அன்பார்ந்த உழைக்கும் மக்களே,

வயிற்று பிழைப்பிற்காக மரம் வெட்டச்சென்ற 20 தமிழக கூலித் தொழிலாளர்கள் ஆந்திர அரசால் கொடூரமான முறையில் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். கூலிகளைக் கொல்லும் அரசு செம்மரக் கடத்தலை நடத்திவரும் கிரிமினல் மாஃபியாக்களைப் பாதுகாப்பது ஏன்? அதிகாரிகள் - அரசியல்வாதிகளின் ஒத்திழைப்பில்லாமலா செம்மரங்கள் சிங்கப்பூர், மலேசியா, சீனா செல்கின்றன?

விலங்கு வதைச் சட்டத்தின் கீழ் மகாராட்டிரத்தில் மாட்டிறைச்சிக்குத் தடை போட்டுள்ளது இந்துமத வெறிப்பிடித்த அரசு. எருமை மாட்டை கொலை செய்யலாம் என்கிறது இச்சட்டம். பசு மாடு மட்டும் தான் புனிதமானதாம். எருமை மாடு கருப்பாக இருப்பதால் கேவலமானதா? இது என்ன நியாயம்? விவசாயமே அழியும் அளவிற்கு மாடுகளை பார்ப்பான் சாப்பிட்டான். அதைத் தடுக்க புத்தர் இயக்கம் கட்டினார். புத்தர் செல்வாக்கு அடைந்து விடக்கூடாது என்பதற்காக வேறுவழியின்றி மாடு சாப்பிடுவதை விட்டான் பார்ப்பான்.

ஏழை உழைப்பாளிகளுக்கு புரதச் சத்து நிரம்பிய, மலிவு விலையில் கிடைக்கும் மாட்டிறைச்சி அவசியமானது. உலகில் 80% மக்கள் மாட்டிறைச்சி உண்பவர்கள். பார்ப்பனீயத்திற்கு எதிராகப் போராடிய பெரியார் பிறந்த இந்த மண்ணில் மாட்டிறைச்சிக்கான தடையை அனுமதிக்கப் போகிறோமா?

தாலி என்றவுடன் கூச்சலிடுகிறது இந்து முன்னணி. டாஸ்மாக் மூலம் தினம் தினம் தமிழகப் பெண்களின் தாலியை அறுக்கும் தமிழக அரசிடம் மோதுமா இந்தக் கும்பல்?

எவ்வித பணி உத்திரவாதமும் இன்றி திடீரென்று ஆலைகளை மூடி ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை வீட்டிற்கு அனுப்பிய நோக்கியா போன்ற கம்பெனிகளின் மீது தொழிலாளர் நலச் சட்டம் பாயாதது ஏன்?

நம் மண்ணைப் பறிக்க அவசரச் சட்டத்தைக் கொண்டு வருகிறது மோடி அரசு.

நீரை பஞ்சு போல தேக்கி வைக்கும் ஆற்று மணல், தாதுமணல், கிரானைட், பாக்சைட், மீத்தேன் வாயு போன்ற இயற்கை வளங்களை கொள்ளையடிக்கும் பழனிச்சாமி, வைகுண்டராசன் போன்ற மாஃபியா கும்பலை போலீசு பாதுகாப்பது ஏன்?

சட்டம், நீதி, போலீசு அனைத்தும் டாடா, அதானி, அம்பானி, மிட்டல் போன்ற பெரும் முதலாளிகளின் கொள்ளைக்கு துணை நிற்கின்றன என்பதனை உணர்வோம், வியர்வை சிந்தி, ரத்தம் சிந்தி நாம் உருவாக்கியது இவ்வுலகம். நமது உழைப்பையும், இயற்கையையும் சுரண்டிக் கொழுக்கும் இக்கொள்ளைக்கூட்டத்தின் அச்சுறுத்தல்களுக்கோ, எலும்புத்துண்டுகளுக்கோ அடிபணியாமல் “எங்கள் உயிரை விட்டாலும் விடுவோம்; ஒரு பிடி மணலைக்கூட விடமாட்டோம்” என்று போராடும் களத்தூர் மக்களைப் போல, ஒரிசா பழங்குடி மக்களைப்போல நெஞ்சுரத்தோடு போராடுவோம்.

உழைக்கும் மக்கள் ஒன்று சேர்ந்தால் எப்பேர்ப்பட்ட அரசும் அடிபணியும்.

- மக்கள் மன்றம், 9585430895

Pin It