தமிழீழ விடுதலைப் போரில் நாம் மிக முக்கியமான கால கட்டத்தில் இன்று உள்ளோம். சர்வதேச அரசுகளும், ஐ.நா போன்ற மன்றங்களும் நீதியை மறுத்திவிட்டு இனப்படுகொலையை மூடி மறைக்க அனைத்து வேலைகளையும் செய்து வருகின்றன. இலங்கையில் ஆட்சி மாற்றத்தை நடத்திவிட்டு, அதையே தமிழர்களுக்குத் தீர்வாக சர்வதேச சமூகம் முன்வைக்கின்ற இந்த காலக்கட்டத்தில் தமிழ் சமூகம் விழிப்போடு செயல்பட வேண்டும்.
தமிழீழ விடுதலையில் மேற்குலகம்-ஆசிய நாடுகளின் நிலைப்பாடுகள், சிங்கள அரசின் நகர்வுகள், தெற்காசியாவில் நிகழும் அரசியல் மாற்றங்கள், ஏகாதிபத்திய தலையீடுகள், இனப்படுகொலைக்கான நீதி ஆகியவற்றினைக் குறித்த விரிவான தொடர் கருத்தரங்கங்களை மே 17 இயக்கம் நடத்தவிருக்கிறது. அதற்கான அட்டவணை:
நாள்&கிழமை |
நேரம் | ஊர் | இடம் |
17.04.2015, வெள்ளி | மாலை – 5 மணிக்கு | திருப்பூர் |
ஹோட்டல் அரோமா, குமரன் சாலை, திருப்பூர். |
18.04.2015, சனி | மாலை – 5 மணிக்கு | கோவை | அண்ணாமலை அரங்கம். (ரயில் நிலையம் அருகில்). கோவை. |
19.04.2015, ஞாயிறு | காலை – 10 மணிக்கு | கோபிசெட்டி பாளையம் |
வாசன் ஸ்டோர், வட்டாட்சியர் அலுவலகம் அருகில், கோபிசெட்டி பாளையம். |
19.04.2015 ஞாயிறு | மாலை – 5 மணிக்கு | ஈரோடு |
அமுத பவன். (கொங்கு கலையரங்கம் அருகில்) சம்பத் நகர்.ஈரோடு |
24.04.2015, வெள்ளி | மாலை – 5 மணிக்கு | தஞ்சை | முள்ளிவாய்கால் முற்றம், தஞ்சை |
25.04.2015, சனி | மாலை – 5 மணிக்கு | திருச்சி |
சமூக பணிமையம் ( TASSOS) மார்ச்சிங் பேட்டை. பீமா நகர் அருகில்), திருச்சி |
26.04.2015, ஞாயிறு |
மாலை – 5 மணிக்கு |
மதுரை |
மதுரை. |
பரிமாறப்படும் கருத்துகள் மீதான தலைவர்கள்-தோழர்களின் உரைகளுமாக இந்த கருத்தரங்கங்களை ஏற்பாடு செய்துள்ளோம். ஈழப்படுகொலையில் இந்தியாவின் பங்கு, அமெரிக்க அரசின் பங்கு, இங்கிலாந்து அரசின் பங்கு, சர்வதேச தொண்டு நிறுவனங்களின் சதி வலைகள் ஆகியன குறித்த கருத்துகள் முன்வைக்கப்பட இருக்கின்றன.
தோழர்களையும் பொதுமக்களையும் அவசியம் அழைத்து வாருங்கள். சர்வதேசத்தின் நகர்வுகளையும் நமக்கான அரசியல் வெளியையும் குறித்து பேசுவோம்.
இக்கருத்தரங்கம் குறித்தான மேலதிக தகவல்களை அறிந்து கொள்ள: 9884072010, 9444146806
- மே பதினேழு இயக்கம்