முட்டித் தள்ளியதில் கீழே விழுந்து இருப்பேன். நல்ல வேலை சமாளித்துவிட்டேன். அலுவலக நேரத்தில் பயணம் செய்வது இவ்வளவு கடினமா என்று யோசிக்கையில் ஏற்கனவே வியர்த்து இருந்ததோடு சேர்த்து சற்று அதிகமாய் வியர்த்தது. இன்னும் இரண்டு மாதங்களுக்கு இப்படி ஒரு பயணத்தைதான் மேற்கொள்ள வேண்டும் என்பது என் கவலை அதிகரித்தது. அப்பாவுக்கு நான் ‘MBA’ படிக்க வேண்டும் என்ற கனவு. வெற்றிகரமாய் ஒன்றரை ஆண்டுகள் முடிந்து விட்டன. இப்பொழுது சென்று கொண்டு இருக்கும் அலுவலகத்தில் என்னுடைய Project ஐ முடித்து விட்டால் அப்பாவின் கனவு நிறைவேறி விடும்.

Lovers கம்பெனி செக்யூரியிட்டியின் விசாரிப்புகளுக்கு பின்னர் அலுவலகத்திற்குள் சென்று அனுமதி பெறுவதற்காக அமர்ந்து இருந்தேன். இந்தக் கம்பெனியில் அனுமதி கிடைத்தால் நன்றாக இருக்கும். பெரிய நிறுவனம்.. இந்த மாதிரி நிறுவனத்தில் Project செய்வது நல்ல பயிற்சியாக இருக்கும். ஆனால் தினமும் நெரிசலில் கூட்டத்தில் மாட்டி விழிபிதுங்க வேண்டும் என்பதை நினைத்தால் வெறுப்பாய் இருக்கிறது. தினமும் கல்லூரிப் பேருந்தில் சொகுசாய் பயணித்து இன்று இப்படி பயணித்தது ஏதோ கவலரத்தில் மாட்டிக்கொண்டது போல் இருந்தது.

ஆனால் வாழ்க்கையின் சில நொடிப் பொழுதுகள் எல்லாவற்றையும் சட்டென்று மாற்றிவிடும். எனக்கு இன்று அப்படித்தான் நிகழந்தது. என் பயணக்களைப்பு எல்லாவற்றையும் ஒரு நொடி பார்வை தூக்கி எறிந்தது. “சட்டென்று மாறுது வானிலை” என்று மனசு விசிலடித்தது. அந்த ஒரு நொடி பார்வை கிடைக்க பெற்றது நீல நிற சுடிதாரில்இருந்த அந்த பெண்ணிடம் இருந்துதான். அவளும் என்னைப் போலவே இந்த அலுவலகத்திற்கு பயிறிசிக்காக வந்து இருப்பாள் போலும். மனசில் வேண்டிக் கொண்டேன். கடவுளே அவள் வேறு எதற்காகவும் வந்திருக்கக் கூடாது.

ஒருவர் வெளியே வந்து பரத் யார் என்று கேட்டார் நான் எழுந்து நின்றேன். ஐந்து நிமிடத்தில் நேர்காணல் முடிந்து விட்டது. எந்த தலைப்பில் Project செய்யப் போறீங்க எவ்வளவு நாள் என்கிற கேள்விகளை கேட்டு இது சம்பந்தமாக யாரை பார்க்க வேண்டும் என்ற தகவல்களை சொல்லி அனுப்பினார். நான் இப்பொழுது வீட்டிற்கு போய் விடலாம். ஆனாலும் முன்பு அமர்ந்து இருந்த இடத்திற்கே சென்று அமர்ந்தேன். எனக்கு அவளின் பெயர் தெரிந்து கொள்ளாமல் வீட்டிற்கு போக பிடிக்கவில்லை. என்னை பெயர் சொல்லி அழைத்தது போல் அவளையும் பெயர் சொல்லி அழைப்பார்கள் என்பதால் காத்து இருந்தேன்.

அறை கதவு திறந்தது என்னை அழைத்த அதே நபர் அவளை அழைக்க வெளியே வந்தார். அவளைப் பார்த்து கை அசைத்து அழைத்தார். எனக்கு கோபம் கோபமாய் வந்தது. நான் எதிர்பார்த்து அமர்ந்து இருந்தது வீணாகி போய்விட்டதே என்று வருத்தப்பட்டேன். அவர் கையசைத்து அழைத்ததை அந்த பெண் கவனிக்கவில்லை போலும் எழுந்திருக்கவே இல்லை. “வாணி என்பது நீங்கதானே உங்களை உள்ளே அழைக்கிறார்கள் என்றார். என் முகத்தில் இருந்து வருத்த ரேகைகளில் புது இரத்தம் பாய்ந்து புன்னகைகள் பூக்க ஆரம்பித்தன.

வாணி உள்ளே சென்றுவிட்டு சீக்கிரம் வெளியே வா நீ என்று உரிமையாய் மனதில் சொல்லிக்கொண்டேன். கேட்ட உடனேயே மனதில் ஒட்டிக்கொண்டது அவள் பெயர். அறைக்குள்ளிலிருந்து வெளியே வந்தவள் தயங்கி தயங்கி என்னருகே வந்தாள். சற்று நிமிர்ந்து பார்த்தேன் அவள் அழகு என் கண்களை மூடியது. எனது கல்ல்லூரியில், பக்கத்து பென்ச், பக்கத்து வகுப்பு, ஜீனியர் என பல பெண்களை பார்த்திருக்கிறேன். ஆனால் எந்த ஒரு பாவையின் பார்வையும் என்னை இத்தனை காந்தமாய் ஈர்க்கவில்லை. ஆனால் இந்த பெண்ணின் பார்வை எனக்குள் ஏதோ ஒன்றை நிகழ்த்திவிட்டது.

“நீங்கள் சங்கரா கல்லூரிதானே. மேனேஜர் உங்களைப் பார்க்க சொன்னார். என்ன என்ன விஷயம் ...?”

“உங்களோடு சேர்ந்து PROJECT செய்ய சொன்னார்.”

நீங்க துடிb ளுயவளைகயஉவiடிn ல் தானே PROJECT செய்கிறீர்கள். வாணியின் கேள்விக்கு ஆமாம் என்று பதிலளித்தான் பரத்

நான் கல்லூரிக்கு சென்று என்னோட பேராசிரியரை பார்க்க வேண்டும் மற்றவை பற்றி நாளை பேசிக் கொள்ளலாம் நான் இப்ப கிளம்பறேன்.

சரிங்க நாளை பேசிக்கலாம் என்று சொல்லிவிட்டு விடைபெற்ற சென்ற வாணியை பார்த்துக் கொண்டே இருந்தான் பார்வையிலிருந்து அவள் மறைந்த உடன் ஒரு வெற்றிடம் வந்து சு{ழ்ந்துக்கொண்டது. சட்டென ஒரு பூ பூத்து சட்டென அது காணாமல் போனது போன்று இருந்தது.

பரத்தின் கூரிய பார்வை வாணிக்கு திரும்ப திரும்ப ஞாபகத்திற்கு வந்து கொண்டே இருந்தது. ஏன் அப்படி ஆளையே விழுங்கிவிடுவது போல் பார்த்தான். நல்ல பையன்தானா?ஸ இவனோடு சேர்ந்து இரண்டு மாதம் PROJECT செய்ய வேண்டுமே. பாhக்க பொறுக்கி மாதிரி தெரியவில்லை. சரி நாளைப் பார்த்துக்கொள்ளலாம் என்று யோசித்தவாறே உறங்கிப்போனாள் வாணி.

பரத்திற்கு உறக்கம் வரவில்லை எல்லா திசைகளிலும் வாணியின் பிம்பம் உட்கார்ந்துக்கொண்டு தட்டி தட்டி எழுப்பிக்கொண்டிருந்தது.. விழியால் விழுந்து இதயம் நுழைந்து என வைரமுத்து உருகியது நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை என தாமரை பெருமிதம் கொள்வது இவைகளின் அர்த்தம் எனக்கு புரிய ஆரம்பித்தது.

கட்டிலின் மீது குப்புறப்படுத்தேன். மனதில் தோன்றியதை எனது டைரியில் எழுதத் துவங்கினேன். நான் எப்பொழுதும் உறங்கிப் போனேன் என்பதை என் அறை கடிகாரம் மட்டுமே அறியும்.

எனக்கு பிடித்த நீலநிறச் சட்டையை அணிந்துக்கொண்டு கிளம்பினேன். எனக்கு முன்னரே வந்து காத்திருந்தாள் வாணி.

பொழுதுகள் வெகு சுவாரஸ்யமாய் கழிந்தன. பார்வையிலேயே பாதித்தவள் தன் பேச்சிலும் என்னிடம் காட்டும் அக்கறையிலும் என்னை மிகவும் கவர்ந்துவிட்டாள்.

அவள் வீட்டிலிருந்து பஸ்ஸிலும் வரலாம் ரயில் வண்டியிலும் வரலாம் ஆனால் ரயில் வண்டிக்கு கொஞ்சதூரம் நடக்க வேண்டி இருந்தது. அப்படி இருக்கையில் நாளையிலிருந்து ரயிலில் வரப்போகிறேன் என்று ஏன் சொன்னாள் என்று புரியவில்லை.

பரபரப்பான ரயில் பயணம் என்னை பிதுக்கிக்தள்ள பிளாட்பாரத்தில் இறங்கி நடக்க துவங்கினேன். நேற்று ரயிலில் வருகிறேன் என்று சொன்னாளே ஒரு வேளை இங்கு எங்கேனும் போகிறவழியில் தென்பாடுவாளோ. அவளை விழிகளால் தேடியவாறே நடந்து படியேற துவங்கினேன். மேலே படிகட்டில் ஒரு பெண் நின்றுக் கொண்டிருந்தாள். அவளாகத்தான் இருக்கும் என்று பொங்கிய ஆசையோடு படிகட்டுகளை தாவி தாவி ஏறினேன். என்னவள் என்னை திரும்பிப் பார்த்தாள். சே. . . . அது என் பிரியசகி இல்லை. ஏமாற்றாத்தோடு படிகளிலிருந்து இறங்கி ஷேர் ஆட்டோ பிடிக்கச் சென்றேன். கும்பலாய் வந்த ஒன்றிரண்டு ஆட்டோக்களை விட்டு விட்டு கொஞ்சம் காலியாக இரண்டு பேர் மட்டும் அமர்ந்திருந்த ஒரு ஆட்டோ வந்தது. ஏறி உள்ளே உட்காரும் போதுதான் கவனித்தேன். உள்ளே வாணி அமர்ந்திருந்தாள். இருவரும் ஒரே சமயத்தில் ‘வணக்கம்’ (hi) சொல்லிக்கொண்டோம்.

‘எங்க ஏறின’

‘நான் ரயில் நிலையத்தின் முன்பக்கமாக வந்தேன். அதனால் கொஞ்ச தூரம் முன்னால்தான் ஏறினேன்’

நாங்கள் பேசி முடிப்பதற்குள் இறங்கும் இடம் வந்துவிட்டது..

தினமும் இனி அந்த ரயில்வே பாலத்திலேயே காத்திருங்கள் நாம் இருவரும் ஒன்றாகவே வரலாம் என்றாள்.

நான் ஆசைபடுவதையெல்லாம் நிறைவேற்றி வைக்கும் வாணியை நினைக்கையில் மனதிற்கு நிறைவாய் இருந்தது.

PROJECT வேலையில் நிருவனம் பற்றிய தகவல்களை சேகாpப்பது . . . . . வினாத்தாள். . . . தயாரிப்பது அதை பணியாளர்களிடம் கொடுத்து பதில் பெறுவது என்று பல வேலைகள் இருந்தால் நாட்கள் வெகு வேகமாய் ஓடிக்கொண்டிருந்தன.

அந்த நிறுவனத்தின் உணவகம் சென்று டீ குடிப்பது மதிய உணவு சாப்பிடுவது என ஒவ்வொரு பொழுதும் நானும் வாணியும் சேர்ந்தே கழித்தோம்.

ஆனால் அலுவலகம் வரும் நேரம் மட்டும்தான் வாணியோடு பேசமுடியும். அவள் தன்னுடைய செல்போன் நம்பரை தர மறுத்துவிட்டாள்.

“உன் வீட்டில் உன் செல்போனை யாரேனும் எடுத்து பார்பாங்களா.”

“கிடையவே கிடையாது. என் அப்பா அம்மா இரண்டு பேரும் என் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடவே மாட்டார்கள்.”

“அப்புறம் ஏன் இப்படி பன்ற . . நம்பர் தர மாட்டேன் என்கிறாய்”

அவள் தந்த பதில் மிகவும் விசித்திரமானதாக இருந்தது. கொஞ்சம் வியப்பாகவும் சுவாரஸ்யமாகவும் கூட இருந்தது.

“செல்போன் என்பது மிகவும் வசதியான விஷயம்தான். நினைத்தமாத்திரம் பேசிக்கொள்ளலாம். தகவல் அனுப்பி வைக்கலாம்.. ஆனால் இந்த அவசரம் பிடிக்கவில்லை. இன்று மாலை உனக்கு பை சொல்லிவிட்டு போன பின்பு இன்று உன்னோடு பேசியதை நினைத்துப்பார்ப்பது நாளை உன்னை சந்திக்கும்பொழுது பேச நினைப்பது இந்த உணர்வுகளோடு காத்திருப்பது இவைகளில் உள்ள சுகம் நினைத்த மாத்திரம் பேசிவிடுவதில் இல்லை.”உணர்வுபொங்க பேசிமுடித்தாள்.

கண்கள் படபடத்து அடங்கியது. அவளுடைய நீண்ட நெடும் விளக்கம் எனக்கு பிடித்திருந்தது. காத்திருத்தலிலும் ஒரு சுகம் உள்ளது அல்லவா. அவளுக்கான வார்த்தைகள் அவளை சந்திக்கும் வரை மனதுள் தங்கி எதிரொலிப்பதும் சுகம்தானே

“சரி வாணி உன் மொபைல் எண் எனக்கு வேண்டாம்.. உன் உணர்வுகளை நான் மதிக்கிறேன்.”

“மிக்க மகிழ்ச்சி”

“பரத் இந்த வாரக்கடைசி நாம் கன்னிமாரா நூலகம் செல்லலாமா”

“போகலாம் ஆனால் எதுக்கு ஏதாவது புத்தகம் படிக்க குறிப்பெடுக்க வேண்டுமா?”

“ஆமாம் கேள்விகளை எப்படி ஆராய்வது என்பதுபற்றி நல்ல புத்தகங்கள் அங்கு உள்ளன. ஆதற்காக போகலாம்”.

நான் பொதுவாக நூலகங்கள் சென்று படிப்பதில்லை. ஏதாவது புத்தகம் வேண்டுமென்றால் அப்பாவிடம் சொல்வேன். அவர் வாங்கி தந்துவிடுவார். அவள் அழைப்பதால் முதன் முறையாக செல்லப்போகிறேன்.

மிக ஆவலுடன் அடுத்த நாளை எதிர்பார்த்தேன். முதன் முறையாக அலுவலகம் தவிர்த்து வெளியில் சந்திக்க போகிறேhம்.

கன்னிமாரா நூலகத்தின் வண்டிகள் நிறுத்துமிடத்தில் காத்திருந்தேன். மொபைல் என்று மிக வசதியான ஒரு விஷயம் இருந்தும் அதை பயன்படுத்த முடியாத நிலைமை இருப்பது விசித்திரமாய்தான் இருந்தது.

காத்திருந்தேன். வாணி வருவது தெரிந்தது.

வாணியா இது?ஸ ஆச்சர்யப்பட்டேன். பனிநீல ஜPன்னும் மற்றும் சிகப்பு நிற டீ-சர்ட்டில் வந்துக்கொண்டிருந்தாள். அதுவும் நடந்துவரவில்லை. டிவிஎஸ் ஸ்கூட்டி வண்டியில் வந்துக்கொண்டிருந்தாள்.

“ஹhய் வாணி”

“ஹhய் பரத”;

ஒரு ஹhய்க்கு பிறகு என்ன பேசுவது என்று தெரியவில்லை அவளுடைய வடிவம் இந்த புதிய உடையில் என்னை மிரட்டிக் கொண்டிருந்தது.

“என்ன பரத் இதுபோல் உடைகள் உனக்கு பிடிக்காதா?ஸ

அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை ஆனால் உன்னைப் பார்ப்பது கொஞ்சம் வித்தியாசமாய் உள்ளது.

நூலகத்தில் வேலை முடித்து கிளம்பினோம். வாணி என்னை தன்னுடைய வண்டியில் எழும்பூர் ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டு சென்றுவிட்டாள்.

வண்டி ஓட்டும் பொழுது என் முகத்தை வருடிய அவளின் கூந்தலின் நினைவுகளுடன் வீடு சென்று சேர்ந்தேன்.

நாட்கள் வெகுவேகமாய் ஓடியது. PROJECT ஒர்க்கை முடித்து சர்டிபிகேட் பெற்று கிளம்பினோம். ரயில் நிலையத்திற்கு வந்தோம்.

“இப்பவாவது உன் மொபைல் நம்பர் குடுப்பாயா?”

“ம். . . . . . வேண்டாம் பரத் நான் தரமாட்டேன்”

“பரத் இப்பவேண்டாம் சரியாய் முப்பது நாட்கள் கழித்து இதே இடத்தில் இதே நேரம் நாம் சந்திப்போம். அப்பொழுது தருகிறேன்.”

முப்பது நாட்கள் ஓடிவிட்டன. இன்று வாணியை பார்த்து மனதில் உள்ளதை சொல்லிவிட வேண்டியதுதான் என எண்ணியவாறே ரயில் வண்டியில் வாசலருகே நின்றான் பரத்.. கடைசி ஸ்டேஷன் என்பதால் என்னவோ கூட்டம் கொஞ்சம் இருந்தது. ரயில் பிளாட்பாரத்தில் நுழைந்தது. வாணி எங்கேனும் தென்படுகிறாளா என்று பார்த்துக்கொண்ட இறங்க எத்தணித்தேன்.

பரத்தை முதன்முதலாய் சந்தித்த அன்று அணிந்திருந்த அந்த உடையை அணிந்திருந்தாள் வாணி. அவள் வந்துக்கொண்டிருந்த ரயில் வண்டி தன் வேகத்தை மட்டுபடுத்தியது. இரண்டு பிளாட்பாரங்களுக்கு இடையே இருந்த பள்ளத்தை தன் வருகையால் நிறைத்தது.

கடைசி நிறுத்தம் என்பதால் அவசரப்பட்டு இறங்க வேண்டிய அவசரம் இல்லாததால் மெதுவாக சென்று இறங்கினேன். வெய்யிலின் பாதிப்பு அதிகமாய் இருந்ததால் நாவறண்டது போல் இருந்தது. ஏதாவது குளிர்பானம் வாங்கி குடித்தவாறே காத்திருக்கலாம் என்று தோன்றியது.

பன்னிரெண்டு மணிக்கு சந்திக்கலாம் என்று பரத்திடம் சொல்லியிருந்தேன். மணி இப்பொழுது 12.15 ஆகிறது. இன்னும் ஏன் வரவில்லை. ஒரு வேளை என்னை மறந்து போயிருப்பானா. நான் விளையாட்டுக்கு சொன்னதாக நினைத்திருப்பானா

.....ம்...........ம் அப்படியெல்லாம் இருக்காது. என்மீது பைத்தியமாய் இருந்தவன் அல்லவா.

பிளாட்பாரத்தில் இருந்த கடைக்கு சென்று மாசா டெட்ரா பேக் வாங்கிவந்து அமர்ந்தேன். இடதுகையில் செல்போனும் வலதுகையில் மாசாவும் சில்லறையும் இருந்தது. செல்போனில் ஏதோ மெசேஜ் வந்தது. அதை பார்க்க முற்படுகையில் கையிலிருந்த ஐந்து ரூபாய் காசு கீழே விழந்தது. அதை எடுக்க எத்தனித்தபோதுதான் பார்த்தேன் அங்கு ஒரு அழகிய வாழ்த்து அட்டை அதன் மேல் ஒரு சிகப்பு ரோஜா செலோ டேப்பால் ஒட்டப்படாமல் சொருகி ்

மூடப்பட்டிருந்த கவரைத் திறந்தேன்.

கடைக்காரப் பெண்மனி என்னை அழைத்தார். வாழ்த்து அடடையை நான் உட்கார்ந்திருந்த இடத்தில் வைத்துவிட்டு எழுந்தேன்.

“அதை எடுத்துட்டு வாம்மா” என்றாள் அந்த பெண்.

எடுத்துசென்று கொடுத்தபொழுது அந்த பெண்மணி கூறினாள்.

“பாவம்மா ஒரு தம்பி இறங்கும்பொழுது விழுந்துட்டான். கையிலும் தலையிலும் லேசாக அடி” பக்கத்து மருத்துவமனைக்கு கூப்பிட்டு போனாங்க. அந்த தம்பி பையிலேயிருந்து விழுந்திருக்கும். அவங்களோட பை இங்கதான் இருக்கு. வந்து வாங்கிக்கிறேன்னு சொல்லிவிட்டு போயிருக்கிறாங்க.

“நானே கொடுத்துதுவிடுகிறேன்” என்று சொல்லி அந்த வாழ்த்து அட்டையை வாங்கி வைத்துக் கொண்டாள் அவள்.

திரும்பவும் வந்து என் இடத்தில் அமர்ந்தேன். ஏன் இன்னும் இவன் வரவில்லை. எப்ப வருவான்? என்று தவிப்புடன் காத்திருந்தேன். கையிலிருந்த செல்போனைப்பார்த்தேன்.

புதிய செல்போன். உள்ளே போடப்பட்டிருப்பதும் புது சிம் கார்டுதான். நேற்றிரவுதான் வாங்கினேன். அதை அணைத்தே வைத்திருந்தேன்.

முதல் அழைப்பு பரத்துக்கு செய்ய வேண்டும். முதல் மெசேஜ் பரத்திற்கு ‘லவ் யூ‘ என்று அனுப்ப வேண்டும். தவிப்பும் எதிர்ப்பாப்பும் உச்சியிலிருந்து உள்ளங்கால் வரை பரவிக்கிடந்தது.

அந்த வாழ்த்து அட்டையை பிரித்து பார்த்திருக்கலாமே மிஸ் பண்ணிவிட்டோமே என்கிற எண்ணம் மனதின் ஓரமாய் நின்று என்னை வேடிக்கைப் பார்த்தது.

வாணி அந்த வாழ்த்து அட்டையை பிரித்துப் பார்த்திருக்கலாம். அதனுள் எழுதி இருந்தது இதுதான்.

“வாணி

எந் வாழ்நாளெல்லாம் நீ . . . .

என்னுடன் இருப்பாயா?

உன் சம்மதித்திற்கான

எதிர்பார்ப்புகளுடன்”

- பரத் -

- சூர்ய மைந்தன்
(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It