"ஹலோ, சொல்லுங்கண்ணே.................."
"ஆமாண்ணே நாலுநாளா ஊர்ல இல்லேண்ணே........"
"தலை.........தென்மாவட்ட டூர்ல இருந்தேண்ணே........."
"நானும் கண்டிப்பா வந்தாகணும்னுட்டாங்கண்ணே....நான் என்ன செய்ய...?"
"நீங்க சொல்றது சரிதான்....எவ்வளோ வேலையை விட்டு போறாப்ல ஆச்சு...."
"பெரிய வண்டியெதான் எடுத்திட்டுப்போனோம்ண்ணே........"
"சொல்லுங்கண்ணே......"
"ம்ம்....ம்ம் ...."
"நீங்க சொல்லுங்கண்ணே........."
"பேசிருவோம்ணே.........."
"வெட்டாத்து குவாரியையே முடிச்சிருவோம்ணே............."
"ரெண்டு கிலோமீட்டர் போதுமாண்ணே..............."
"இருவத்தஞ்சு பர்சென்ட்டுண்ணே............"
"ம்....சொல்லுங்கண்ணே....."
"அது பழக்கமாயிப்போயிட்டுல்ல....நாம எப்படிண்ணே கொறைக்கிறது?"
"நமக்கு ஒண்ணும் வேண்டாண்ணே.....நம்ம பழக்கம் இன்னிக்கு நேத்தா?"
"ஆத்துல தண்ணி எப்ப நிக்கறது? நாம எப்ப நாலுகாசு பாக்கறது? ....நீங்க வேலய ஆரம்பிச்சுருங்கண்ணே......எல்லாம் சொல்லிக்கலாம்ணே......"
"இப்பல்லாம் டிராப்ட் இல்லண்ணே......கேஷ்தாண்ணே.."
"சரிண்ணே .....வெச்சுருங்கண்ணே....நாளக்கி பாப்பம்ணே..."
".......ர்ர்.......ர்ர்............ர்ர்.............ர்ர்........."
"ஹலோ.......சொல்லுங்கண்ணே...."
"ஆமாண்ணே டெண்டர் கேட்ருக்காங்கண்ணே...."
"அஞ்சுகிலோ மீட்டர் எர்த்ஒர்க்குண்ணே...."
"சொல்லுங்கண்ணே...."
"ம்....சொல்லுங்கண்ணே..."
"கேக்குதுண்ணே....."
"நம்மவீட்லதாண்ணே.....குரலு கொஞ்சம் பெரிசுண்ணே...."
"வெக்கவேண்டாம்ணே...நீங்க பேசுங்கண்ணே....அதுகெடக்கு....."
"அவரு இதுக்கெல்லாம் புதுசுண்ணே.. நாம எக்ஸ பார்த்துருவோம்ணே....."
"நீங்க வாங்கண்ணே........பேசிக்கலாம்....."
"ஆமாண்ணே....சாயந்திரம் டி பி யிலே பாப்பம்ணே...."
"வச்சிருங்கண்ணே......நன்றிண்ணே......நன்றிண்ணே...."
"....ர்ர்.......ர்ர்............ர்ர்......."
"ஹலோ ..........சொல்லுங்கண்ணே....."
"இப்ப எங்கண்ணே இருக்கீங்க?....."
"சாப்டாச்சாண்ணே?....."
"நமக்கு எப்பவும் .......... குமரிவிலாஸ்தாண்ணே...."
"வெராமீன் தலெ இல்லாட்டா நமக்கு எறங்காதுண்ணே.... இந்த கத்திரிக்கா பரங்கிக்காயெல்லாம் நமக்கு அலர்ஜிண்ணே.....டாக்டர் சொல்லிட்டாருண்ணே...."
"வாங்கண்ணே சேந்து சாப்டலாம்...."
"சரிண்ணே.......இங்க ஆபீசுக்கே வந்திருங்கண்ணே....."
"வெச்சிருங்கண்ணே....வெச்சிருங்கண்ணே....நன்றிண்ணே...."
"யோவ்......எளவெடுத்த சாராயத்தெக்குடிச்சிட்டு இப்படி புலம்பிக்கிட்டுக் கெடக்கிறியே........அக்கம்பக்கத்துலெ தூங்கறதா இல்லையா? கட்சி ஆபீஸிலெபோயி கிளாஸ் கழுவாதேன்னு சொன்னா கேக்கறயா?...
எவனெவனோ செல்போனுல பேசுனதெ கேட்டுட்டு வந்து உளறிக்கிட்டுக் கிடக்கே... காலுப்பக்கம் இலுத்து மூடுய்யா...... கொசு அப்பிக்கிட்டு கெடக்கு.....ஒன்னெக் கட்டுன பாவத்துக்கு விடிஞ்சா நாலுவீட்டுல பாத்திரம் தேய்க்கணும்....தள்ளிப்படுய்யா..."
- மு.குருமூர்த்தி,
ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்,
101, காவேரிநகர் மேற்கு, தஞ்சாவூர் - 613005
கீற்றில் தேட...
''ஹலோ.......சொல்லுங்கண்ணே.......''
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: சிறுகதைகள்