என் அலுவலத்துக்கு பக்கத்துல உள்ள ஒரு உணவகத்துல மைலோ குடிச்சிட்டு இருந்தேன்.

எனக்கு எதிர் இருக்கையில் ஒரு சீனன் வந்து உட்கார்ந்தான் - எனக்கு அவன யாரு-னே தெரியாது - ஆனா அவன் என் கிட்ட பேச ஆரம்பிச்சுட்டான்.

man 00சீனன் : யூ நோ ஒன் திங் - ஐ ஆம் ஏ கிரேட் சுமக்ளர்(smuggler) இன் திஸ் வோர்ல்ட்

நான் : ஓ ... ஓ.கே.

சீனன் : யூ நோ அனதர் திங் - ஐ கான்(can) பை(buy) திஸ் என்டயர் வோர்ல்ட் - வித் தி மனி ஐ ஹாவ்

நான் : ஓ ... ஓ.கே.

சீனன் : கான் யூ கிவ் மீ டூ டாலர்ஸ்(two dollars) - பிகாஸ் ஐ டோன்ட் ஹாவ் சேஞ் இன் மை பாக்கட்

பாக்க பாவாமா இருந்துச்சுனு சொல்லி - நானும் ரெண்டு டாலர் கொடுத்தேன்

அவன் நன்றி கூட சொல்லாம மறுபடியும் பேச ஆரம்பிச்சுட்டான்

சீனன் : யூ நோ ஒன் திங் - ஐ ஆம் ஏ கிரேட் சுமக்ளர் இன் திஸ் வோர்ல்ட்

நான் மைலோ-வ குடிச்சு முடிக்காம - அங்கயே வச்சுட்டு - அலுவலகத்துக்கு உள்ள ஓடி போய் உட்கார்ந்துட்டேன்

அவனும் என் பின்னாடியே வந்து - என் அலுவலக வாசல் ல நின்னு கிட்டு - யூ நோ ஒன் திங் னு - என்ன பார்த்து கத்திகிட்டு இருந்தான்

உடனேஎன் மேல் அதிகாரி என் கிட்ட வந்து :
யாரு டா இது - ஏன் டா பைத்தியக்காரனை எல்லாம் அலுவலகத்துக்கு கூட்டிட்டு வர்ற ? - னு கேட்டாரு

நான் ஒன்னும் கூட்டிட்டு வரல - அவனா தான் சார் வந்தான் னு சொன்னேன்

மேல் அதிகாரி அந்த சீனனிடம் கேட்டார் : வாட் டூ யூ வான்ட் ?

சீனன் : யூ நோ ஒன் திங் -

மேல் அதிகாரி : வாட் ?

சீனன் : ஐ ஆம் ஏ கிரேட் சுமக்ளர் இன் திஸ் வோர்ல்ட்

மேல் அதிகாரி : சோ வாட் ?

சீனன் : யூ நோ அனதர் திங் - ஐ கான் பை(buy) திஸ் என்டயர் வோர்ல்ட் - வித் தி மனி ஐ ஹாவ்

மேல் அதிகாரி : ஓ.கே. யூ கோ அண்ட் பை திஸ் வோர்ல்ட்

சீனன் : கான் யூ கிவ் மீ டூ டாலர்ஸ் - பிகாஸ் ஐ டோன்ட் ஹாவ் சேஞ் இன் மை பாக்கட்

நான் கொடுக்காதீங்க னு சொல்றதுக்கு முன்னாடி - என் மேல் அதிகாரியும் பாவப்பட்டு ரெண்டு டாலர் எடுத்து கொடுத்துட்டாரு

மறுபடியும் அவன் - யூ நோ ஒன் திங் - ஐ ஆம் ஏ கிரேட் சுமக்ளர் இன் திஸ் வோர்ல்ட் னு சத்தம் போட்டு பேச ஆரம்பிச்சுட்டான்

அந்த நேரம் பார்த்து எங்க நிர்வாக இயக்குனர் வந்துட்டாரு

அவரு எங்க மேல் அதிகாரி கிட்ட கேட்டாரு - யோவ் ஏன்யா பைத்தியக்காரனை எல்லாம் அலுவலகத்துக்கு கூட்டிட்டு வர்றீங்க ?

மேல் அதிகாரி : சார் நான் ஒன்னும் கூட்டிட்டு வரல சார் - அவனா தான் சார் வந்தான்

உடனே எங்க நிர்வாக இயக்குனர் அந்த சீனன் கிட்ட கேட்டாரு - வாட் டூ யூ வான்ட் ?

சீனன் : யூ நோ ஒன் திங் ?

நிர்வாக இயக்குனர் : ஐ நோ எவிரி திங் - கெட் அவே ஃபிரம் திஸ் பிளேஸ்

உடனே அந்த சீனனும் போயிட்டான்

உடனே எங்க நிர்வாக இயக்குனர் - என்னையும், என் மேல் அதிகாரியையும் பார்த்து பேச ஆரம்பிச்சாரு :

யூ நோ ஒன் திங் ?? ...................

- தமிழ் தமிழ் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It