ஒவ்வொரு சிறைக்குள்ளும்
ஒரு மிருகம்
சிலவற்றில்
மிருகத்தின் நடமாட்டம்
அதிகம்
சிலவற்றில்
அதன் ஆர்ப்பாட்டமும்
அதிகம்தான்
சிலவற்றில்
அவ்வப்போது
முகம் காட்டுவதோடு சரி
சிலவற்றில்
அவை
மௌனம் சாதிக்கும்
எங்கே
அரிதுயில் கொள்கிறதோ
அங்கேதான்
சிறைக்குப்பெருமை
உறங்கவைப்பதிலும்
ஒடுங்கவைத்து ஆள்வதிலும்தான்
பெருமை சேர்கிறது
சிறைக்கு
சிறைகளின் பெருமையெல்லாம்
மிருகங்களின்
அடக்கத்தில்
அடங்கியிருக்கிறது
- பிச்சினிக்காடு இளங்கோ (