பயணச் சீட்டு பெற்று,
சில்லறை கேட்க,
கொடுத்து விட்டு,
'பிச்சைக்காரன்' என்ற
முனகலுடன் முன்னால் சென்றார் நடத்துனர்.
இறங்கிய பின்னும்
புரியவில்லை எனக்கு
'யார் பிச்சைக்காரன்?' என்று
வேடிக்கை
கொள்ளையடித்த பணத்தில்
பல் பொருள் அங்காடி
திறந்தார் அரசியல்வாதி
பங்குதாரர் எனத் தெரியாமல்
வாடிக்கையாளராய் மட்டும் மக்கள்
கொள்ளையடித்த பணத்தில்
பல் பொருள் அங்காடிதிறந்தார்
அரசியல்வாதி
பங்குதாரர் எனத் தெரியாமல்
வாடிக்கையாளராய் மட்டும் மக்கள்
கண்ணீர்
விபத்தில் இறந்த மனிதர்களுக்கு
பேருந்து சிந்திய கண்ணீர் துளிகள்கள்
சாலையில் கண்ணாடித் சிதறல்கள்.
- தாமோதர கண்ணன் (