பசிக்காதபோது நீட்டப்படுகிறது
சோற்றுக்கலயம்...
பசிக்கிறபோது பிடுங்கப்படும்
என்பதன் அடையாளமாய்...
தேவைகளில்லாதபோது
தரப்படும் ஓய்வு
சோர்ந்தலைகையில்
நிராகரிக்கப்படுகிறது...
பலவந்தமாக்கப்படுகிறது
நெருங்கிய நட்புகள்...
அளவுகோலிட்டு அளக்கப்படுகிறது
அதன் நெருக்கங்கள்...
இதனையும் கார்ப்போரேட்
என்று சொல்லித் திரிகிறோம்
நாம்...
- ராம்ப்ரசாத், சென்னை (