கீற்றில் தேட...

 

lover_290இவ்வளவு நாட்கள்

இழந்ததெல்லாம் இழப்பல்ல

உன்னை

நான் சேர்ந்துவிட்டால்..

 

இனிமேல்

பெறுபவை எதுவும்

வெற்றியல்ல

உன்னை

நான் இழந்துவிட்டால்...

---------------------------

வாழ்க்கையையே

பணயம் வைத்தேன்

உன் காதலுக்காக

என் காதலையே

பணயம் வைத்தாய் 
உன் வாழ்க்கைக்காக..

--------------------------- 

காதலுக்குள்

இறங்கியவர்களை விட

காதலை தள்ளி நின்று பார்க்கிறவர்கள்

அள்ளிச் செல்கின்றனர்

கையளவு காதலையாவது..

-------------------------- 

மரணத்தின் விளிம்பில்

கண்மூடி சரிகிறேன்..

உன் முகம் மட்டும்

இறுதியாய்

என் நினைவில்..

உடனே

வாழ்தலுக்கான

பெருவிருப்போடு

மரணத்தை வெல்கிறேன்..

------------------------- 

எப்போது

உடன் வரப் போகிறாய்

ஒப்பனைகளை

நானே ரசிக்கும்

தனிமையைக் கொல்வதற்கேனும்..

----------------------------

- இவள் பாரதி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)