நொண்டி நொண்டி
நடக்கும்
நாயையும்
தன்னைத் தானே
கீறி
இரத்தம் பார்த்து
சிரிக்கும்
மனம் பிறழ்ந்தவனையும்
சாலை
கடக்கத் துணை தேடும்
குருடனையும்
பசியில்
அழும்
குழந்தையையும்
கடந்து..
கடற்கரையில் போய்
காதல் காவியம் மட்டும்
எழுதி வரும்
ஒவ்வொரு பேனா முனையின்
வழியோடி தான்
கடலில்
தற்கொலை செய்து கொள்கின்றன
கடவுள்களும் காதல்களும் .