*
உதடு பிதுங்க விழி அகன்று
நீர் கோர்த்துக் கொண்ட மௌனத்தில்
கழுத்து 'டை' சுருட்டி
வாய் பொத்திக் கொள்கிறாள்
வீட்டுப் பாடம் எழுதாமல்
சற்று முன்
அடி வாங்கி நிற்கும் சிறுமி
****
-இளங்கோ (
கீற்றில் தேட...
மௌனக் கணம்
- விவரங்கள்
- இளங்கோ
- பிரிவு: கவிதைகள்