குருதிப்பெருவழியே வந்த என்னின்
பெருகும் உதிரத்திரை விலக்கி - எனக்கு உவந்த
முதல் முத்தம் என் கூடல்களின் உச்சங்களை
விட இனிது.
என் சிரிப்பில், முறைப்பில், களிப்பில் உன்னவனை
தேடிக்கண்டபின் காதலனாக்குவாய் - குறும்பில்
அழுகையில், பிடிவாதத்தில் உன் பிள்ளை கண்டு
மகிழ்வாய்,தூங்கும் வசத்தில் ,இடதுகை பழக்கத்தில்
உந்தை கண்டு சேயாவாய்.
முகம்பார்க்கும் ஆவலுக்கு ரசம் போன கண்ணாடி
தடையில்லை என நீ என்னுள் உன் உறவுகளை - தேடித்
தேடி கண்டெடுத்தாய். உன் காதலானாய்
தந்தையாய், மகனாய் உன் முந்தானை பிடித்தலைந்த
இந்தப் பேரனை விட்டு ஏன் கிழவி? செத்துப்போனாய்..........
- நா.செந்தில்
கீற்றில் தேட...
அம்மாச்சி
- விவரங்கள்
- நா.செந்தில்
- பிரிவு: கவிதைகள்