கீற்றில் தேட...

Love sadமுடிந்தவரை முயற்சி செய்தேன்
வாசல் கதவை மட்டுமல்ல - அவள்
மனக்கதவையும் திறக்க மறுத்தாள்

உயிரைவிட முயற்சி செய்தேன்
உரிமை இல்லை அதற்கும் - அவள்
உயிரை நான் சுமப்பதால்

நெருங்கி செல்ல முயற்சி செய்தேன்
புரிந்து கொள்ள மறுக்கிறாள் - அவள்தான்
என் ஆக்ஸிஜன் என்பதை

கடிதத்தில் முயற்சி செய்தேன்
கவரைக் கூட பிரிக்கவில்லை
கசக்கி எறிந்தாள் என் இதயத்தை...

விட்டுவிடு வீண் முயற்சி
வரமாட்டேன் நான் என்றாள்

தொட்டு விடும் என் முயற்சி
தொடர்ந்து நிற்பேன் நான் என்றேன்

புன்னகைத்து நடந்து சென்றாள்
வந்து நின்ற பைக்கில் ஏறி
எவனுடனோ பறந்து சென்றாள்


ஏழுமலை சுரேஷ் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)